தி.மு.க., வேண்டாம்| Dinamalar

தி.மு.க., வேண்டாம்

Updated : ஆக 25, 2017 | Added : ஆக 19, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 தி.மு.க., வேண்டாம்

சமீபத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், பிரதமர் மோடியை, டில்லியில் சந்தித்தனர்; அப்போது, 'நீங்கள் இணையவில்லை என்றால், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைந்து விடும்; தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவா, மேடம், கடுமையாக உழைத்தார். அம்மாவின் லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால், நீங்கள் இணைந்து தான் ஆக வேண்டும்; ஆனால், எந்த காரணத்தாலும், தி.மு.க., ஆட்சிக்கு வந்து விடக் கூடாது' என, பிரதமர் கூறியதாக தெரிகிறது.இதனால், 'இரண்டு அணிகளும் இணைய தாமதமானாலும், ஒன்றாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது' என, டில்லியில் உள்ள, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இரு அணிகளும் இணைந்த பின், மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க.,வுக்கு இடம் கிடைக்கும் என செய்திகள் அடிபட்டன.ஆனால், அப்படி எதுவும் நடக்காதாம். 'அடுத்த மாதம் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில், அ.தி.மு.க.,வுக்கு நிச்சயம் இடம் இல்லை' என, திட்டவட்டமாக சொல்கின்றனர், பா.ஜ.,வினர்.
காங்கிரஸ் பிரமுகர் விரைவில் கைது?

தற்போது, சி.பி.ஐ., வலையில் சிக்கியுள்ள அந்த காங்கிரஸ் பிரமுகரின் வழக்கு, உச்ச நீதிமன்றம் வரை வந்துவிட்டது. சி.பி.ஐ.,யிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி, உச்ச நீதிமன்றம் உத்தவிட்டது. தனக்கும், இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென அவர் வாதிட்டாலும், அதை உடனடியாக ஏற்க, நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.இந்த பிரமுகரைப் பற்றிய பல தகவல்களை. சி.பி.ஐ., திரட்டியுள்ளது. மும்பையில், தன் மகளை கொலை செய்த, பிரபல,'டிவி' நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான, அந்த பெண்ணிடம், சி.பி.ஐ., விசாரித்தபோது, தமிழக, காங்., பிரமுகரின் பண பரிமாற்றம் தொடர்பான அனைத்து தகவல்களையும் கூறி விட்டார்.அந்த பெண்மணி கொடுத்த தகவல்களின் அடிப்படையில், காங்., பிரமுகரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகள் தயாராக உள்ளனர். விசாரணை முடிவில், காங்., பிரமுகர் கைது செய்யப்படுவார் என்கிறது, சி.பி.ஐ., வட்டாரம்.
நன்றி தெரிவித்த தம்பிதுரை!
சுதந்திர தினத்தன்று மாலை, பிரதமர், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும், ஜனாதிபதி, தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்தமுறை, புதிய ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்தளித்தார். இதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பங்கேற்றார்.அங்கு பிரதமரைச் சந்தித்து, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதற்கு நன்றி தெரிவித்தார், தம்பிதுரை. இந்த விவகாரத்தைக் கவனித்து வரும், நிர்மலா சீதாரமனையும் சந்தித்து, தமிழக மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.மேலும், அட்டார்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலையும் சந்தித்து, 'இந்த அவசர சட்டத்திற்கு உங்கள் கருத்தை கேட்டுள்ளனர். நல்லபடியாக பார்த்து செய்யுங்கள்' என்றார், தம்பிதுரை. இதன்பின், வேணுகோபால், தமிழக அரசுக்கு ஆதரவாக கருத்து சொல்ல, அவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்தார்.

அதிரடி ஸ்மிருதி!வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியானதால், அவரிடம் இருந்த செய்தி ஒலிபரப்புத்துறை இலாகா, ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டது. ஆட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சிக்கும், இந்த அமைச்சரவை மிக முக்கியம். பிரதமர் மற்றும் அமைச்சர்களை தினமும் துார்தர்ஷனில் காட்டுவது, அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வது என, மத்திய அரசின் செல்லப் பிள்ளையாக துார்தர்ஷன் செயல்படுகிறது.டில்லியில் உள்ள தூர்தர்ஷன் ஸ்டூடியோவிற்கு, அடிக்கடி வருகிறார், ஸ்மிருதி. அரசு வேலைதானே என அலட்சியமாக இருந்தவர்களுக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறார் அமைச்சர். சிலரை, அதிரடியாக வட கிழக்கு மாநிலங்களுக்கு தூக்கி அடித்தார்.'தயவு காட்டுங்கள்' என, இவர்கள் அமைச்சரிடம் கெஞ்ச, 'இந்த மாற்றத்தால் உங்களுக்கு அதிக அலவன்ஸ் கிடைக்கும்; அத்துடன், டில்லியில் உங்களுக்கு தரப்பட்டுள்ள அரசு வீட்டை, காலி செய்யவும் வேண்டாம்; இதெல்லாம் உங்களுக்கு நல்லது தானே' என, பதில் அளித்து, அவர்களை கிடு கிடுக்க வைத்துள்ளார், ஸ்மிருதி.தூர்தர்ஷன் விவாதத்தில் யார் யார் பங்கேற்க வேண்டும் என்பதை முடிவு செய்வதுடன், பா.ஜ.,வை எதிர்த்து பேசுபவர்களை, 'டிவி'யில் காட்ட வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளாராம் ஸ்மிருதி

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
31-ஆக-201714:18:21 IST Report Abuse
kandhan. இந்த அ தி மு க கோமாளிகள் தங்கள் கொள்கைகளை மறந்து பதவியை காப்பாற்றிக்கொள்ளவே இந்த பி ஜெ பி யுடன் கூட்டு செய்து தங்காளும் தங்களை சேர்ந்தவர்களும் பணம் சம்பாதித்த பணத்தை காப்பற்றவும்தான் குறியாக இருக்கிறார்கள் ஏனென்றால் தங்களால் மெஜாரிட்டியை நிரூபிக்கமுடியாமல் தி மு க ஆட்சிக்கு வருமேயானால் அம்மாவின் மறைவு எப்படி நடந்தது இவர்கள் ஊழல் வழக்குகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிந்து தான் மோடியின் காலில் ஈனம் ,மானம் இல்லாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள் இவர்களின் வீர வசனம் செயலில் இல்லையேப்பா??? பின் எப்படி உங்களை மக்கள் மதிப்பார்கள்???? நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் உண்மை புரியும் மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாதபோது நீங்களே பதவிவிலகுவதுதான் நல்லது செய்வீர்களா ???மனசாட்சியோடு சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
25-ஆக-201709:42:01 IST Report Abuse
Padmanaban Jayakrishnan அதிமுக திமுக காங்கிரஸ் பிஜேபி இவை நான்குமே தமிழ்நாட்டுக்கு தேவை அற்ற கட்சிகள் தான்
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
24-ஆக-201713:58:20 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran தி.மு.க., வேண்டாம் சமீபத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், பிரதமர் மோடியை, டில்லியில் சந்தித்தனர் அப்போது, 'நீங்கள் இணையவில்லை என்றால், தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைந்து விடும் தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவா, மேடம், கடுமையாக உழைத்தார். அம்மாவின் லட்சியம் நிறைவேற வேண்டுமென்றால், நீங்கள் இணைந்து தான் ஆக வேண்டும் ஆனால், எந்த காரணத்தாலும், தி.மு.க., ஆட்சிக்கு வந்து விடக் கூடாது' என, பிரதமர் கூறியதாக தெரிகிறது.இதனால், 'இரண்டு அணிகளும் இணைய தாமதமானாலும், ஒன்றாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது' என, டில்லியில் உள்ள, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இரு அணிகளும் இணைந்த பின், மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க.,வுக்கு இடம் கிடைக்கும் என செய்திகள் அடிபட்டன.ஆனால், அப்படி எதுவும் நடக்காதாம். 'அடுத்த மாதம் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில், அ.தி.மு.க.,வுக்கு நிச்சயம் இடம் இல்லை' என, திட்டவட்டமாக சொல்கின்றனர், பா.ஜ.,வினர். அம்மாவின் லட்சியம் என்ன பாஜக அரசு தமிழகத்தில் அமையவேண்டும் என்பதா ?
Rate this:
Share this comment
Cancel
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
24-ஆக-201713:55:40 IST Report Abuse
Rajamani Ksheeravarneswaran நன்றி தெரிவித்த தம்பிதுரை சுதந்திர தினத்தன்று மாலை, பிரதமர், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும், ஜனாதிபதி, தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்தமுறை, புதிய ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்தளித்தார். இதில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பங்கேற்றார்.அங்கு பிரதமரைச் சந்தித்து, 'நீட்' தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதற்கு நன்றி தெரிவித்தார், தம்பிதுரை. இந்த விவகாரத்தைக் கவனித்து வரும், நிர்மலா சீதாரமனையும் சந்தித்து, தமிழக மாணவர்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.மேலும், அட்டார்னி ஜெனரல், கே.கே.வேணுகோபாலையும் சந்தித்து, 'இந்த அவசர சட்டத்திற்கு உங்கள் கருத்தை கேட்டுள்ளனர். நல்லபடியாக பார்த்து செய்யுங்கள்' என்றார், தம்பிதுரை. இதன்பின், வேணுகோபால், தமிழக அரசுக்கு ஆதரவாக கருத்து சொல்ல, அவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நன்றி தெரிவித்தார். அப்புறம் ஏன் மத்திய அரசின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மாநிலத்திற்கு நீட் தேர்வில் விலக்களித்தால் மற்ற மாநிலங்களும் முறையிடும் எனவே நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தேவையில்லை என்று வாதிட்டார் ?தமிழக அரசு வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் வாதாட கூட அனுமதிக்கவில்லை
Rate this:
Share this comment
Cancel
vadivelu - chennai,இந்தியா
24-ஆக-201704:10:58 IST Report Abuse
vadivelu புரிந்து விட்டது, ஏன் சிவகங்கையில் அவர் பெரியார் பூமியை பற்றி பேசினார் என்று.பயந்துதான் போய் இருக்கிறார்.பலநாள் ..... ஒருநாள் அகப்பட்டுதான் போவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை