144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம்

Added : ஆக 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: தமிழகத்தில், 144 ஆண்டுகளுக்கு பின், செப்., 12 முதல், 23ம் தேதி வரை, காவிரி மஹா புஷ்கரம் எனும், புனித நீராடல் நடக்கிறது.

காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டி தலைவர் ஸ்ரீராம், சேலத்தில் கூறியதாவது:ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில், புஷ்கரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, செப்., 12ல், குரு பகவான், துலாம் ராசியில் பிரவேசிப்பதால், காவிரி ஆற்றில், புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மஹா புஷ்கரம், செப்., 12ல் துவங்கி, 23 வரை கொண்டாப்படுகிறது.கர்நாடகாவில், தலைக்காவிரி துவங்கி பல்வேறு இடங்களில், புஷ்கரம் நடக்கிறது. தமிழகத்தில், மேட்டூர் துவங்கி, பூம்புகார் வரை புஷ்கரம் நடக்கிறது.
திருச்சி, ஸ்ரீரங்கம் காவிரி கரையில், திரிதண்டி ஸ்ரீமந்நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் தலைமையில், 25 ஜீயர்கள் முன்னிலையில் புஷ்கரம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X