சி.பி.ஐ., அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி| Dinamalar

சி.பி.ஐ., அதிகாரிகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Added : ஆக 22, 2017 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சி.பி.ஐ அதிகாரிகள் ,CBI officers,சி.பி.ஐ, CBI,உச்ச நீதிமன்றம், Supreme Court, புதுடில்லி, New Delhi,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு, coal mining allocation scam case, விசாரணை, investigation,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல்,  coal mining allocation corruption,  நீதிபதி, judge, மதன் பி லோகுர்,Madan B Lokur, நீதிமன்றம், Court

புதுடில்லி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்காத, சி.பி.ஐ.,யின் செயல்பாட்டிற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் நடந்த, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் குறித்த விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை; இதில், சி.பி.ஐ.,யின் செயல்பாடு, அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு கூறியதாவது:
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான வழக்குகளை, சி.பி.ஐ., அதிகாரிகள், நீண்ட நாட்களாக விசாரிக்கின்றனர்; எனினும், வழக்கு விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை.ஒவ்வொரு முறையும், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கும் படி, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தினாலும், விசாரணை, முடிவுக்கு வருவது போல் தெரியவில்லை.
சி.பி.ஐ.,யின் செயல்பாடுகள், அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளன; எனவே, நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் அதன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிடுகிறது.இவ்வாறு அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஆக-201716:39:21 IST Report Abuse
Nallavan Nallavan லாலு மீது சி.பி.ஐ. யை ஏவுவதில் படு சுறுசுறுப்புக்கு காட்டும் பாஜக அரசு ஏன் இந்த விஷயத்தில் சாட்டையைச் சுழற்றவில்லை ???? பாஜக -வின் அரசியல் நேர்மை என்பது தேவைப்படும்போது தொட்டுக்க ஊறுகாய் மாதிரி போல ....
Rate this:
Share this comment
Cancel
22-ஆக-201713:03:28 IST Report Abuse
எப்போதும் வென்றான் அதிருப்தி என்று சொல்லவா நீதி மன்றம்..மக்கள் தான் அவ்வாறு சொல்வார்கள்... சிபிஐ யின் செயல்பாடு சரி இல்லை என்று சொல்லி நீதி மன்றம் இரண்டு வழக்குகளை டிஸ்மிஸ் செய்தால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்கள்...இது கூட தெரியாதா ??/
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
22-ஆக-201712:46:36 IST Report Abuse
Giridharan S நீதி மன்றங்கள் தலையிட்டால் கூட இவர்களால் ஒன்றும் பண்ண முடியாது. சும்மா குற்றம் சாத்தலாம் அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X