சென்னை தினம் - 378; மதராஸ் மீண்ட வரலாறு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை தினம் - 378; மதராஸ் மீண்ட வரலாறு

Added : ஆக 23, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சுதந்திரத்துக்கு பின் எட்டாண்டுகள் கழித்து, மெட்ராஸ் பிரசிடென்சி, மொழிவாரியாக, மெட்ராஸ், கேரளா, மைசூரு, நிஜாம் ஸ்டேட்டுகளாக பிரிந்தன. மெட்ராஸ், 196௯ல், தமிழ்நாடு என, பெயர் மாறியது, கர்நாடகா ஆந்திரா எனவும் மாநில பெயர்கள் மாறின.

அதற்கு முன், மெட்ராஸை ஆந்திர தலைநகராக்க, தெலுங்கர்கள் முயற்சித்தனர். அக்கோரிக்கைக்காக, 1952, அக்., 14ல், பொட்டி ஸ்ரீராமுலு, 'மதராஸ் மனதே' என்ற கோஷத்துடன், உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். அவரை, தமிழகத்தில் இருந்து, ம.பொ.சிவஞானம் சந்தித்தார்.

அப்போது, தெலுங்கரான பிரகாசம், 'ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள்' என்றார். ஆனால், 'மெட்ராஸ் இல்லாத ஆந்திராவை பிரிக்கக் கோரினால், தாமும், தன் தமிழரசு கழகமும் உதவுவதாக, மா.பொ.சி., தெரிவித்தார்.என்றாலும் தந்திரமாக, 'ஆந்திர அரசு, தற்காலிகமாக மதராஸில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்; ஐதராபாத் கிடைத்து விட்டால், நாங்கள் போய்விடுவோம்' என்றனர்.

ஆனால், ம.பொ.சி., மறுத்தார். தொடர்ந்து, உண்ணாவிரதம் இருந்த, பொட்டி ஸ்ரீராமுலு, டிச., 15ல் இறந்தார். ஆந்திராவில், கலவரம் வெடித்து, மூன்று நாட்கள் நீடித்தது. பயந்து போன பிரதமர் நேரு, ஆந்திராவை பிரிக்க சம்மதித்ததோடு, சென்னையை விட்டுத்தருமாறு ராஜாஜியிடம் வேண்டினார். அதேநேரம், 'சென்னை மற்றும் தகராறு இல்லாத, தெலுங்கு மாவட்டங்களை கொண்டு, சித்துாரை உள்ளடக்கிய ஆந்திரா அமையும்' என, அறிக்கை வெளியிட்டார்.எனினும், கூவத்தை எல்லையாகக் கொண்டு, தென்சென்னையை தமிழகத்துக்கும், வடசென்னையை ஆந்திராவுக்கும் தலைநகராக்க வேண்டும் என, தெலுங்கு தலைவரான பிரகாசம் வலியுறுத்தினார்.

ம.பொ.சி., 'தலையைக் கொடுத்தேனும் தலைநகரை காப்போம்' என்ற முழக்கத்துடன், போராட்டத்தைத் துவக்கினார். மேலும், முதல்வர், ராஜாஜி, ஈ.வெ.ரா., பக்தவத்சலம், மேயர் செங்கல்வராயன் உள்ளிட்டோருடன், திருவல்லிக்கேணி கடற்கரையில், மதராஸை மீட்க, உணர்ச்சி மிக்க கூட்டம் ஒன்றை நடத்தினார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்களின் எதிர்ப்பை உணர்ந்த நேரு, 'ஆந்திர தலைநகர், ஆந்திராவுக்குள்ளேயே இருக்கும்' என, அறிவித்தார். மெட்ராஸ் மீண்டது. என்றாலும், தமிழகத்தின் பல பகுதிகளை, ஆந்திராவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாகியது. அப்போது, ம.பொ.சி., மாநகராட்சியின் ஆல்டர் மேனாக இருந்ததால், சென்னை மாநகராட்சிக்கு, ஆங்கிலேயர் கொடிக்கு பதில், வில், புலி, மீன் சின்னங்களுடன் புதிய கொடியை உருவாக்கினார்.

ராஜாஜி காங்கிரசில் இருந்தாலும், நேருவின் கோரிக்கையை விட, தமிழகத்தின் நலனே முக்கியம் என்பதை உணர்ந்து, மெட்ராசை மீட்க பாடுபட்டார். ஆந்திராவில் ஓர் உயிர் போனதற்காக, மெட்ராசை விட்டுக்கொடுப்பதை விட, தன் உயிரை விட்டேனும் மெட்ராசை காப்பேன் எனவும்,'உரிமைக்கு எல்லை வேங்கடம்; உறவுக்கு எல்லை இமயம்' எனவும் முழங்கி, ம.பொ.சி., பாடுபட்டார். அவர்கள் உள்ளிட்ட தியாக தலைவர்களை, இந்த சென்னை தினத்தில் நினைவு கூற வேண்டியது நம் கடமை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X