எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா? Dinamalar
பதிவு செய்த நாள் :
எம்.எல்.ஏ., வீட்டுக்கு சென்று வந்தாரா சசிகலா?

பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஓசூர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வீட்டு க்கு சென்று வந்ததாக, அம்மாநில, டி.ஐ.ஜி., ரூபா, ஊழல் தடுப்புக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 எம்.எல்.ஏ., வீட்டுக்கு,சென்று,வந்தாரா,சசிகலா?

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, கர்நாடகா தலை நகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில், அவருக்கு சிறப்பு வசதிகள், சலுகைகள் அளிக்கப்படுவதாக, சிறைதுறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா புகார் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, வேறு பதவிக்கு, ரூபா மாற்றப்பட்டார்.

அறிக்கை:


இந்நிலையில், ஏ.சி.பி., எனப்படும், ஊழல் தடுப்புக்குழுவிடம், ரூபா, தாக்கல் செய்த அறிக்கை விபரம்:பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அருகே, தமிழகத்தின் ஓசூர் தொகுதி, அ.தி.மு.க.,- எம்.எல். ஏ., வான, பாலகிருஷ்ண ரெட்டிக்கு சொந்தமான வீடு உள்ளது. சசிகலா, சிறையிலி ருந்து, பால கிருஷ்ண ரெட்டியின் வீட்டுக்கு சென்று வந்ததற் கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

சிறை நுழைவு வாயில் மற்றும் சிறை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள், இதை உறுதி செய்கின்றன. தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள நான்கு வீடியோ க்களில், ஒன்றில், காட்டன் நைட்டி ஆடையில், சசிகலா உள்ளார்; இரண்டு வீடியோக்களில், சுடிதார் அணிந்துள்ளார்.

பைகள்


சசிகலாவின் உறவினர் இளவரசி, ஆரஞ்ச் நிற சேலை உடுத்தி உள்ளார்.

Advertisement

ஒரு வீடியோவில், சசிகலா, வெளியிலிருந்து சிறைக்குள் நுழை யும் காட்சி உள்ளது; அவர் கைகளில் உள்ள பைகள், கடைக்கு சென்று வாங்கி வந்தவை போன்று உள்ளன.
மற்றொரு வீடியோ வில், சிறை கதவு அருகே, சீருடை அணிந்த மூன்று சிறை காவலர்களும், ஆண் குற்றவாளி ஒரு வரும் உள்ளனர். பெண்கள் அடைக்க பட்டுள்ள சிறை அறைகளில், காவலுக்கு ஆண்கள் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிக்கையில், ரூபா கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Vizg,இந்தியா
24-ஆக-201723:41:25 IST Report Abuse

Rajasekaranதிமுகா எதற்கு இந்த வழக்கை கர்நாடிக்காவிற்கு மட்டும் மாற்றியது ஏன் ஆந்திரா அல்லது கேரளாவிற்கு மாற்றி இருக்கிலாமே இதில் உள்ள சூட்சமம் என்ன

Rate this:
Anandan - chennai,இந்தியா
29-ஆக-201706:39:50 IST Report Abuse

Anandanநீங்க ரொம்ப டக்கு. இன்னும் அதிமுகவிற்கு வெண்சாமரம் வீசும் அடிமைகள் இருக்க கவலை ஏன்?...

Rate this:
Anandan - chennai,இந்தியா
29-ஆக-201706:40:19 IST Report Abuse

Anandanஆந்திராவில் ஆயா அடிமைகள் அதிகம்....

Rate this:
24-ஆக-201721:22:27 IST Report Abuse

அப்பாவிசின்னம்மா தப்பு பண்ணிட்டாங்க....ஒரு "கோடி" காட்டியிருந்தா, எம்.எல்.ஏ வே வந்து சல்யூட் அடிச்சிட்டுப் போயிருப்பார்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஆக-201717:09:58 IST Report Abuse

Endrum Indianசசிக்கு தினகரன் காண்டாக்ட்டு தினகரனுக்கு ஆஸ்திரேலியா காண்டாக்ட்டு. ஆஸ்திரேலியாவிலிருப்பவருக்கு அந்த எம் எல் ஏவுக்கு காண்டாக்ட். எம்.எல்.ஏ க்கு சித்தராமையா காண்டாக்ட்டு. சித்தாவுக்கு ஜெயில் அதிகாரி காண்டாக்ட்டு . பணம் எல்லாம் கரெக்ட்டா அந்த அந்த ஆளுக்கு கரீக்டா போயாச்சு. சித்தாவுக்கு ஒரு 40 சி பார்சேல். மத்தவங்களுக்கு அவங்க லெவல் பார்த்து பண பரிமாற்றம்.

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201716:40:43 IST Report Abuse

Visu Iyerஆமா என்று சொன்னால் எவ்வளவு காசு தருவீர்கள்.. இல்லை என்று சொன்னால் எவ்வளவு காசு தருவீர்கள்..

Rate this:
Balaji - Khaithan,குவைத்
24-ஆக-201715:26:56 IST Report Abuse

Balajiபணம் எந்தளவுக்கு விளையாடியிருக்கிறது என்று நாடே நாறிக்கொண்டு இருக்கிறது நமது தமிழர்களின் மானமும் கர்நாடக காங்கிரஸ் அரசின் லட்சணமும் ............ ஊழலுக்கு பெயர் போன கட்சி காங்கிரஸ் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.......... இந்த விஷயங்கள் அனைத்தும் முடி மறைக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது..........

Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-ஆக-201714:06:12 IST Report Abuse

Nagarajan Dகடலளவு காசு இருக்கு எதுக்கு கலங்கவேண்டும்

Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-ஆக-201714:04:47 IST Report Abuse

Nagarajan Dஎன்ன சாட்சி குடுத்தாலும் நம்ம கோர்ட்டுகள் வாய்தா கொடுத்தே கேஸை கொன்றுவிடுவார்கள். கோர்ட் இருக்க பயமேன், அயோக்கிய வக்கீல்கள் இருக்க கலங்குவது ஏன்

Rate this:
24-ஆக-201712:12:42 IST Report Abuse

kandasamyvery good work Karnataka government

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஆக-201711:32:31 IST Report Abuse

Pugazh Vசசிகலா சிறையிலேயே இல்லை என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

Rate this:
Giridharan S - Kancheepuram,இந்தியா
24-ஆக-201711:32:04 IST Report Abuse

Giridharan Sவாழ்க பண நாயகம் எம்புட்டு தைரியம் அந்த அம்மாக்கு. புரட்சி தலைவி அம்மா இருந்த பொது கூட இது போல எதுவும் நடக்கலியே அவரு யாரையும் சந்திக்க கூட இல்லையே. ஏன் இந்த அம்மா இப்படி பண்ணுது.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement