அமைச்சர்கள் உட்பட பலரின் கட்சி பதவி பறிப்பு! அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன் அறிவிப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர்கள் உட்பட பலரின் கட்சி பதவி பறிப்பு!
அ.தி.மு.க.,வில் நீக்கப்பட்ட தினகரன் அறிவிப்பு

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதினகரன், அ.தி.மு.க.,நிர்வாகிகளை நீக்கியும், தன் ஆதர வாளர்களை, புதிய நிர்வாகிகளாக நியமித்தும், தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

 அமைச்சர்கள்,Ministers, தினகரன், Dinakaran,அ.தி.மு.க, ADMK,அ.தி.மு.க துணைப் பொதுச்செயலர், ADMK Deputy General Secretary,முதல்வர்,Chief Minister, பரமசிவன், Paramsivan,ஜெயலலிதா ,Jayalalithaa, முருகன்,Murugan, விவசாயபிரிவு , Agriculture, அமைச்சர் உதயகுமார் , Minister Uthayakumar,மானா மதுரை எம்.எல்.ஏ.,Mana Madurai MLA, மாரியப்பன் கென்னடி ,Mariyappan Kennedy, எம்.எல்.ஏ ரெங்கசாமி , MLA Renegasamy, தஞ்சாவூர் ,Thanjavur, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் , former minister Senthamilan,

'அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது. அவர் வெளியிடும் அறிவிப்புகள், அ.தி.மு.க.,வை கட்டுப்படுத்தாது' என, ஜெ.,வால் நியமிக்கப் பட்ட நிர்வாகிகள் மற்றும் முதல்வர் உட்பட, 27 பேர் கையெழுத்திட்டு, தீர்மானம் நிறைவேற்றி னர்.
இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள தினகரன், தனக்கு எதிராக உள்ள, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை,கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அந்தபதவிகளில், தன் ஆதரவாளர்களை நியமிப்பதாகவும், அறிவித்து வருகிறார்.

அந்த வரிசையில், நேற்று மட்டும், 13அறிவிப்பு களை,அவர்வெளியிட்டார்.

அதன் விபரம்:

*அ.தி.மு.க.,அமைப்பு செயலர்பதவியில்இருந்துசுதா பரமசிவன் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய அமைப்பு செயலர் களாக, தென் சென்னை தெற்கு மாவட்ட ஜெ., பேரவை இணைசெயலர் முருகன், திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலர் ராஜேந்திரன், திருநெல் வேலி மாநகர் மாவட்டம், மானுார் தெற்கு ஒன்றிய செயலர் வேலாயுதம் ஆகியோரும்; விவசாயபிரிவு செயலராக, துரை கோவிந்தராஜனும் நியமிக்கப் பட்டுள்ளனர்

* ஜெ., பேரவை செயலர் பொறுப்பில்இருந்து, அமைச்சர் உதயகுமார் விடுவிக்கப்பட்டு, மானா மதுரை எம்.எல்.ஏ., மாரியப்பன் கென்னடி நியமிக்கப் பட்டுள்ளார்

* தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலராக, எம்.எல்.ஏ., ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார்

* தென்சென்னை தெற்கு மாவட்ட செயலர் பதவி யில் இருந்து, எம்.எல்.ஏ., ரவி விடுவிக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் செந்தமிழன் நியமிக்கப்பட்டு உள்ளார்.இவர்,ஏற்கனவே வகித்த அமைப்பு செயலர் பதவியில் இருந்துவிடுவிக் கப்பட்டுள்ளார்.

* மதுரை புறநகர் மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்த, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா விடுவிக்கப் பட்டு, உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்

* காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலர் ஆறுமுகம் விடுவிக்கப்பட்டு,

Advertisement

திருப்போரூர் எம்.எல்.ஏ., கோதண்ட பாணிநியமிக்கப்பட்டு உள்ளார்
* தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலராக, மாவட்ட ஜெ., பேரவை செயலர் சேகர் நியமிக் கப்பட்டுள்ளார்

* திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலர் பொறுப்பில் உள்ள, எம்.எல்.ஏ., பலராமன் விடுவிக்கப்பட்டு, பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஏழுமலை நியமிக்கப் பட்டுள்ளார்

* வேலுார் மேற்கு மாவட்ட செயலர் பொறுப் பில் இருந்து, அமைச்சர் வீரமணி விடுவிக்கப் பட்டு,ஆம்பூர் எம்.எல்.ஏ., பாலசுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார்

* கரூர் மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுவிக் கப்பட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்

* திருவாரூர் மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்து, அமைச்சர் ஆர்.காமராஜ் விடுவிக்கப் பட்டுள்ளார். அமைப்பு செயலர் பதவியில் இருந்த, எஸ்.காமராஜ், புதிய மாவட்ட செயல ராக நியமிக்கப்பட்டு உள்ளார்

* புதுக்கோட்டை மாவட்ட செயலர், மாநில விவசாயப் பிரிவு செயலர் பொறுப்பில் இருந்து வைரமுத்துவிடுவிக்கப்பட்டு உள்ளார். புதுக் கோட்டை மாவட்ட செயலராக, பரணி கார்த்தி கேயன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர்அறிவித்துள்ளார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
24-ஆக-201719:25:25 IST Report Abuse

ravichandranபந்தியில் உட்காராதே என்றால் இல்லை பித்தலா இருக்குனு சொன்னானா

Rate this:
skandh - chennai,இந்தியா
24-ஆக-201718:30:50 IST Report Abuse

skandhஇது ஆ தீ முல்லை கா கட்சி அதிகாரி தினகரன் தான். கட்சி பதவியை பிடுங்க பழனி ஒரு துரும்பு. கட்சியின் கொள்கைகையை நிறைவேற்றவே ஆட்சி பழனி, பன்னீரை கட்டாயம் பதவி இறக்கம் செய்ய வேண்டும்.

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201716:41:57 IST Report Abuse

Visu Iyerபதவியை பறிக்கும் இவரால் கட்சியை பறிக்க முடியவில்லையே எவ்வளவு பணம் இருந்து என்ன.. ஒரு கட்சியை கூட வாங்க முடியவில்லை.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
24-ஆக-201715:25:05 IST Report Abuse

g.s,rajanPeople should pelt up stones on these Mad politicians till death. g.s.rajan, Chennai.

Rate this:
anagha - chennai,இந்தியா
24-ஆக-201714:14:28 IST Report Abuse

anaghaஇது எப்படி இருக்குன்னா அடுத்தவன் பொண்டாட்டிய நீ டிவோர்ஸ் பண்ற மாதிரி இருக்கு

Rate this:
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
24-ஆக-201713:20:04 IST Report Abuse

Ravichandran Narayanaswamyஇவனை நிரந்தரமாக திகாரில் போடவேண்டும்

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஆக-201713:19:39 IST Report Abuse

Venkiலூசு பைத்தியம் முத்துரத்துக்கு முன் வைத்தியம் செய்து கொள்

Rate this:
Paran Nathan - Edmonton,கனடா
24-ஆக-201709:38:15 IST Report Abuse

Paran Nathan6 மாதமாக முன்னாள், இன்னாள் முதல்வர்களை விமானத்தில் அழைத்து தலநகரில் ஆலோசனை நடத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்து, செய்தி நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பி, போலியான இணைப்பை உருவாக்கி தமிழத்தில் காலூன்றி விடலாம் என்று கும்பலாக அதிகாரங்களை வைத்துக்கொண்டு பகல் கனவு கண்டவர்களில் கனவை தனியொருவனாக ஒரே நாளில் தகர்த்தெறிந்த தமிழனை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே வரவில்லை. தினகரன் ஒன்றும் அவதார புருக்ஷரோ, தவறே செய்யாதவரோ இல்லை. ஆனால் இன்று தமிழர்களின் அடையாளம். கள்வனாக இருந்து, பின்பு இராமாயனம் என்ற மாபெரும் காவியத்தை எழுதி இராமரை ஆண்களிற்கு உதாரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழவைத்துக் கொண்டிருக்கும் வால்மீகியை நாம் புறக்கணித்தோமா? தினகரன் உனது அரசியல் அறிவு மெய்சிலிக்க வைக்கின்றது உனது உறுதி தமிழினத்தை காப்பாற்றப் போகின்றது எதிர்கால தமிழினம் உன்னை என்றும் நன்றியுடன் நினைவு கூரும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-201719:38:51 IST Report Abuse

Kasimani Baskaran"அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்து" - இவன் நீதிமன்றத்தில் அதையெல்லாம் சொல்லவில்லையே... உனக்கு எப்படி தெரியும்... இவனே ஒரு கீழ்த்தரமான பிராட்... அவனுக்கு பல்லக்கு தூக்கும் நீயும் ஒரு .......

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
24-ஆக-201709:36:57 IST Report Abuse

தாமரை ஒரே டமாசு தான் போங்கள்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-ஆக-201708:49:37 IST Report Abuse

Srinivasan Kannaiyaபாவம் சின்ன வயசிலேயே இப்பிடி ஆயீட்டாரே... நல்ல மனநல மருத்துவரிடம் காட்டுங்கள்...

Rate this:
kc.ravindran - bangalore,இந்தியா
24-ஆக-201712:47:22 IST Report Abuse

kc.ravindranபோயும் போயும் இந்த மனிதனுக்கு கெட்ட புத்தியை கொடுத்தானே....

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement