தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் குதூகலம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்
சொகுசு விடுதியில் குதூகலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

 தினகரன்,ஆதரவு,எம்.எல்.ஏ.,க்கள்,சொகுசு,விடுதியில்,குதூகலம்

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலா, தினகரன், அவர்களது உறவினர்கள் தனித்து விடப்பட்டுள் ளனர்.தினகரனுக்கு, ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தாக, கடிதம் அளித்து உள்ளனர்.அதையடுத்து, இந்த எம்.எல். ஏ.,க்கள் 19 பேரையும், பாதுகாப்பாக ஒரே இடத்தில் தங்க வைக்க தினகரன் முடிவு செய்தார்.

கடல் உணவு


புதுச்சேரியில், சின்ன வீராம்பட்டினம் கிராமத் தில், ஒதுக்குப்புறமாக, கடற்கரையோரம் உள்ள, 'தி வின்ட் ப்ளவர்' ரிசார்ட் என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், இவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.வெற்றிச்செல்வன் தவிர, 18 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம் இரவு சொகுசு விடுதிக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கினர். பெண், எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தனியாக தங்கியுள்ள னர்.

நேற்று முன்தினம் இரவு, சில, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு பிடித்த மது வகைகளை, வர வழைத்து அருந்தி, மகிழ்ச்சியில் திளைத்துள் ளனர்.பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள், அவர்களுக்கு பரிமாறப்பட்டது. விடுதி வளாகத் தில் சுற்றி வந்த, சில, எம்.எல்.ஏ.,க்கள்,அரசியல்

நிலவரம் குறித்து பேசி, பொழுதைகழித்தனர். நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, தங்க தமிழ் செல்வன், முத்தையா உள்ளிட்ட, எம்.எல்.ஏ.,க் கள், விடுதியின் பின்புற வழியாக, வீராம்பட்டினம் கடற்கரையில், 'வாக்கிங்' சென்றனர். இதையடுத்து, போலீசார் மற்றும் உதவியாளர் களின், எம்.எல்.ஏ.,க் களை பாதுகாப்பாக, விடுதிக்கு அழைத்து வந்தனர்.
ரிசார்ட்டில், எம்.எம்.எல்.ஏ.,க் கள் ஆயில் மசாஜ் எடுத்தனர். அங்குள்ள, நீச்சல் குளத்தில், நீந்தி மகிழ்ந்தனர். விடுதியில் உள்ள உணவு அரங்கில், வித,விதமான உணவு வகைக கள், காலை டிபனாக பரிமாறப் பட்டது.

மதிய உணவுக்காக, கடல் உணவு நிறுவனம் மூலம், பெரிய அளவிலான வஞ்சிரம், சுறா,உயர்ரக கடல் சிங்கு இறால், ஆட்டுக்கறி, கோழிக்கறி கொண்டு வரப்பட்டன. குளிர்பான வகைகள், வாட்டர் பாட்டில் களும், வாகனங்களில் வந்திறங்கின. மதியம் அசைவ உணவை ருசித்த, எம்.எல்.ஏ.,க்கள், விடுதி வளாகத்தில் உலவியபடி இருந்தனர். சிலர், காரில் விடுதிக்கு வெளியில், சென்று திரும்பினர்.

விடுதியில் கெடுபிடி


விடுதியில், எஸ்.பி., அப்துல் ரஹீம் மேற்பார்வை யில்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே, விடுதிக்குள் அனுமதிக்கப் பட்டனர்.விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும், ஒட்டுமொத்த மாக, தினகரன் அணியினர் வாடகைக்கு எடுத்துள்ள னர். இதனால், தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் விடுதி பணியாளர்கள் தவிர, வெளியாட்கள் அங்கு இல்லை.

சொகுசு விடுதி அமைந்துள்ள சாலையில்,தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வெளியாட்கள் செல்ல தடை செய்தனர். பத்திரிகையாளர்கள், நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள், விடுதி முன் குவிந்துள்ள னர்.
எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள விடுதியின் வசதிகள்:* வெளிநாட்டு தரத்தில் நீச்சல் குளம்
* தனி வில்லாக்கள் உள்ளிட்ட, 50 அறைகள்
* நேர்த்தியான உணவு அரங்கம்
* மதுபான பார் வசதி * மசாஜ் வசதி* படகு சவாரி

Advertisement

செய்யும் வசதி* கைப்பந்து விளையாட்டு திடல்*பொழுது போக்கு பூங்கா .தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.,க்களை வெளியேற்ற கோரி, அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு, அ.தி.மு.க., வினர், தினகரன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி சேகர், நேற்று காலை தனது ஆதரவாளர்களு டன், தினகரன் ஆதரவாளர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு திரண்டார். தினகரன் ஆதரவாளர்களை, விடுதியில்இருந்து வெளி யேற்றக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார், அவர்களை உள்ளே விடாமல், தடுத்துநிறுத்தினர். அதையடுத்து, கோஷங்கள் எழுப்பியபடி, தினகரனின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

சிறை செல்ல நேரும்:'மாஜி' எம்.எல்.ஏ., எச்சரிக்கை


''தினகரன், சசிகலா ஆகியோருடன் சென்றால், சிறைக்கு தான் செல்ல நேரிடும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் தங்க வைக்கப்பட்டுள்ள, சொகுசு விடுதி முன்பு, தினகரன் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பேசியதாவது:

தினகரன், சசிகலாவுடன் சென்றால், சிறைச்சாலைக்கு தான் செல்ல நேரிடும். ஜெ., வகித்த பொதுச் செயலர்பதவியை அடைய ஆசைப்பட்டால், வெளி மாநிலசிறைக்குச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து தான், தற்போது, அ.தி.மு.க., தீர்மானம் போட்டுள்ளது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, எம்.எல்.ஏ.க்களை, 10 கோடி, 20 கோடி ரூபாய் கொடுத்து, தினகரன் அடைத்து வைத்து உள்ளார். இவர்கள் தவறை உணர்ந்து, கட்சிக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும். மன்னார்குடி குடும்பம், தமிழக எல்லையை விட்டு, விரட்டி அடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Vizg,இந்தியா
24-ஆக-201723:52:19 IST Report Abuse

Rajasekaranமக்கள் பாவ பட்டவர்கள் அல்ல எழுவது சதவீத்தினர் இவர்களிடம் காசை வாங்கிக்கொண்டு ஒட்டு போடுகின்றனர் அப்ப இவன் என்ன செய்வான் இந்த மாதிரி சேஷ்டை எல்லாம் செய்வான் இவனை சொல்லி தப்பில்லை காசை வாங்கிக்கொண்டு ஒட்டு போடுபவர்களை என்ன சொல்லுவது

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201716:45:22 IST Report Abuse

Visu Iyerலட்ச ரூபா சம்பளம் வாங்குகிறவர்கள் இது கூட அனுபவிக்காட்டி எப்படி.. அது சரி இப்போ எதற்கு துணை முதல்வர் பதவி.. யாருக்கு துணை..

Rate this:
Kapali - chennai,இந்தியா
24-ஆக-201715:43:45 IST Report Abuse

Kapaliஏன் இந்த 19 காக்க முட்டைகளை தேர்வு செய்த தொகுதி மக்கள் இந்த சொகுசு விடுதிக்கு வந்து இவன்களை தும்ஸம் செய்யக்கூடாது?

Rate this:
mrsethuraman - Bangalore,இந்தியா
24-ஆக-201715:18:18 IST Report Abuse

mrsethuraman  நல்லா ஆடுங்க உங்க ஆட்டமெல்லாம் சீக்கிரமே முடியப்போகுது

Rate this:
Vasanth Saminathan - Trivandrum,இந்தியா
24-ஆக-201713:56:12 IST Report Abuse

Vasanth Saminathanஅடடடாடாடா மக்களுக்கு எப்படி சேவை செய்கிறார்கள்.

Rate this:
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
24-ஆக-201713:43:31 IST Report Abuse

ஜாம்பஜார் ஜக்குஇவ்வளோ குத்தம் குறை சொல்றீங்களே நண்பர்களே? இவங்க கிட்ட அப்படி வேற என்னதான் எதிர்ப்பாத்தீங்க? கொஞ்சம் சொல்லுங்க... அப்படி வேற எதையோ எதிர்பாத்த உங்களை தான் முதல்ல குத்தம் சொல்லோணும்

Rate this:
Rajan - Chennai ,இந்தியா
24-ஆக-201712:09:41 IST Report Abuse

RajanIf the Assembly does not meet another 3 months, can these resort enjoyment continue?

Rate this:
sachin - madurai,இந்தியா
24-ஆக-201711:46:55 IST Report Abuse

sachinஅதிமுக விரும்பிகளே ....இதே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூவத்தூரில் குத்தாட்டம் போட்டது தப்பு இல்லை என்றால் தினகரன் செய்தது தற்போது தப்பு இல்லை ....அன்று எடபடிக்கு இனித்தது இன்று கசக்கிறது ....ஹா அதிமுக அணிகள் எல்லாமே ஊழல் மற்றும் வேசம்போடும் இரட்டை வேடம் கொண்டவர்கள் .....( அன்று சசிகலா 122 அடிமைகளை அடைத்து வைத்து எடப்பாடியை வெற்றிபெற வைத்தார் ...இன்று தினகரன் 19 அடிமைகளை அடைத்து வைத்து இருக்கிறார் இவர்கள் செய்வது தவறு என்றால் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் அன்று செய்ததும் தவறு தான் ) இதே ஒரு அதிமுகனாலும் உணரமுடியவில்லை ........

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
24-ஆக-201710:53:12 IST Report Abuse

Cheran Perumalகர்நாடகாவிற்கு அழைத்து செல்ல நினைத்தார்கள். பின்னர் சசிகலாவுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் ஆதரவு மாநிலமான புதுச்சேரிக்கு ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் அழைத்து சென்றுள்ளார்கள். நாராயணசாமிக்கும் கொஞ்சம் வருமானம் கிடைக்கும். ஸ்டாலினையும் திருப்தி செய்ததுபோல் இருக்கும்.

Rate this:
Paran Nathan - Edmonton,கனடா
24-ஆக-201709:37:34 IST Report Abuse

Paran Nathan6 மாதமாக முன்னாள், இன்னாள் முதல்வர்களை விமானத்தில் அழைத்து தலநகரில் ஆலோசனை நடத்தி, அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்து, செய்தி நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பி, போலியான இணைப்பை உருவாக்கி தமிழத்தில் காலூன்றி விடலாம் என்று கும்பலாக அதிகாரங்களை வைத்துக்கொண்டு பகல் கனவு கண்டவர்களில் கனவை தனியொருவனாக ஒரே நாளில் தகர்த்தெறிந்த தமிழனை வாழ்த்துவதற்கு வார்த்தைகளே வரவில்லை. தினகரன் ஒன்றும் அவதார புருக்ஷரோ, தவறே செய்யாதவரோ இல்லை. ஆனால் இன்று தமிழர்களின் அடையாளம். கள்வனாக இருந்து, பின்பு இராமாயனம் என்ற மாபெரும் காவியத்தை எழுதி இராமரை ஆண்களிற்கு உதாரணமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழவைத்துக் கொண்டிருக்கும் வால்மீகியை நாம் புறக்கணித்தோமா? தினகரன் உனது அரசியல் அறிவு மெய்சிலிக்க வைக்கின்றது உனது உறுதி தமிழினத்தை காப்பாற்றப் போகின்றது எதிர்கால தமிழினம் உன்னை என்றும் நன்றியுடன் நினைவு கூரும்.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement