சுப்ரீம் கோர்ட்டில் சசிகலாவின் மறு சீராய்வு மனு... தள்ளுபடி! Dinamalar
பதிவு செய்த நாள் :
சுப்ரீம்கோர்ட்,உச்ச நீதிமன்றம், Supreme Court,சசிகலா, Sasikala,தள்ளுபடி,dismissed, புதுடில்லி,New Delhi, சொத்து குவிப்பு வழக்கு,Property Fraud Case, Property accumulation case,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, Tamil Nadu Former Chief Minister Jayalalithaa,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா,late Chief Minister Jayalalithaa ,அ.தி.மு.க.,ADMK, கர்நாடகா,Karnataka, உயர் நீதிமன்றம், High Court,கர்நாடகா உயர் நீதிமன்றம்,Karnataka High Court, மேல்முறையீடு,Appeal, தேர்தல் , Election, சிறை தண்டனை, prison sentence, இளவரசி,Ilavarasi, சுதாகரன், Suthakaran, ஜெயலலிதா மறைவு,Jayalalithaa death, பரப்பன அக்ரஹாரா சிறை, Paradana Akrahar jail,

புதுடில்லி:சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து அளிக்கப் பட்ட தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி, சசிகலா தாக்கல் செய்த மனுவை,உச்சநீதி மன்றம் நேற்று, தள்ளுபடி செய்தது; இதனால், அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை, மீண்டும் உறுதி செய்யபட்டுள்ளது.

சுப்ரீம்கோர்ட்,உச்ச நீதிமன்றம், Supreme Court,சசிகலா, Sasikala,தள்ளுபடி,dismissed, புதுடில்லி,New Delhi, சொத்து குவிப்பு வழக்கு,Property Fraud Case, Property accumulation case,தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, Tamil Nadu Former Chief Minister Jayalalithaa,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா,late Chief Minister Jayalalithaa ,அ.தி.மு.க.,ADMK, கர்நாடகா,Karnataka, உயர் நீதிமன்றம், High Court,கர்நாடகா உயர் நீதிமன்றம்,Karnataka High Court, மேல்முறையீடு,Appeal, தேர்தல் , Election, சிறை தண்டனை, prison sentence, இளவரசி,Ilavarasi, சுதாகரன், Suthakaran, ஜெயலலிதா மறைவு,Jayalalithaa death, பரப்பன அக்ரஹாரா சிறை, Paradana Akrahar jail,

தமிழக முன்னாள் முதல்வரான, மறைந்த, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும்
சசிகலாவின் உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, பெங்களூரு, விசாரணை நீதிமன்றம், நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், நால்வரும் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசா ரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து, நால்வ ரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது.இதற்கிடையே, கடந்தாண்டு டிசம்பரில், ஜெ., காலமானார்.

அதனால், அ.தி.மு.க.,வை கைப்பற்றி, தமிழக முதல்வர் ஆகலாம் என்ற கனவுடன், சசிகலா செயல்பட்டு வந்தார். இந்த சூழ் நிலையில், பிப்., 14ல், பரபரப்பு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அறி வித்தது.கர்நாடகா உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, 'விசாரணை நீதிமன்ற தீர்ப்பு படி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால், நான்கு ஆண்டு சிறை தண்டனை அனுப விப்பதுடன், அதற்கு அடுத்த, ஆறு ஆண்டு வரை, சசிகலா, தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி, கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறை யில், சசிகலா,இளவரசி, சுதாகரன் அடைக்கப் பட்டனர். சிறைக்கு செல்லும் முன், அ.தி. மு.க.,வை நிர்வகிக்கும் பொறுப்பை, தன் உறவி னர், தினகரன் வசம், சசிகலா ஒப்படைத்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பதவியில் இருந்து,பன்னீர்செல்வம் அகற்றப் பட்டார். பழனி சாமி, முதல்வராக நியமிக்கப் பட்டார். அதை தொடர்ந்து நிகழ்ந்த அதிரடி அரசியல் மாற்றங்க ளால், பன்னீர்செல்வம் - பழனிசாமி தலைமையி லான, அ.தி.மு.க., அணிகள், சமீபத்தில் இணைந்தன.

இச்சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை, மறு சீராய்வு

Advertisement

செய்யக் கோரி, சசிகலா மற்றும் இரு உறவினர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்டே, அமிதவராய் அடங் கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.சசிகலா மற்றும் உறவினர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி ஆஜராகி வாதிட்டார்.

விசாரணை முடிவில், நீதிபதிகள், அளித்த தீர்ப்பு: சொத்து குவிப்பு வழக்கில் அளிக் கப்பட்ட தீர்ப்பில்,எந்த பிழையும் காணப்படவில்லை. எனவே,அதை மறு சீராய்வு செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை; மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சசிகலாவின் நான்கு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.

தமிழக முதல்வராக, பழனிசாமியும், துணை முதல்வராக, பன்னீர்செல்வமும், அ.தி.மு.க., வில் செல்வாக்கு பெற முயற்சித்து வரும் நிலையில், தன்னை பலப்படுத்த, வழக்கிலி ருந்து விடுதலை பெறுவதே, சிறந்த வழி எனக் கருதிய சசிகலா, அதற்கேற்ப காய்களை நகர்த்தி வந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சசிகலா, தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

21 ஆண்டுக்கு முன்னும் சிறை


கடந்த, 1996ல், சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டபோது, சசிகலா, முதல்முறையாக சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஜாமினில், அவர் விடுவிக்கப்பட்டார். 2014ல், பெங்களூரு, சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா, 10 கோடி ரூபாய் அபராதமும், ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபாரதமும் விதித்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிரான, சட்ட நடவடிக்கைகளை கைவிட்டது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (41)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Sha Shank Shankar - Chennai,இந்தியா
24-ஆக-201719:15:55 IST Report Abuse

Sha Shank Shankar செய்தியின் தலைப்பு என்னவோ ஆடித்தள்ளுபடி மாதிரி இருக்கு

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201716:49:31 IST Report Abuse

Visu Iyerசசிகலாவை முன்னிலை படுத்தி நடத்துக் கூட்டம் செல்லுமா? ஜெயலலிதாவை முன்னிலை படுத்தி செய்யும் ஆட்சி தான் செல்லுமா? சட்டம் யாருக்க்காகா..?

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201716:48:16 IST Report Abuse

Visu Iyerஉள்ளே இருந்தால் என்ன. வெளியில் இருந்தால் என்ன சொகுசு வாழ்க்கை நிச்சயம் உண்டு.. உள்ளே இருந்தால் காசு கொடுக்கணும்.. வெளியில் இருந்தால் வாங்கணும்.. அவ்வளவு தானே வித்தியாசம்.. ஆமா.. இந்த வழக்கை இவ்வளவு சீக்கிரமா விசாரிக்கிற மன்றங்கள்.. உமா பாரதியின் வழக்கை எடுக்கவே இல்லையே

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
24-ஆக-201716:11:11 IST Report Abuse

K.Sugavanamஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்து இருக்கான் இறைவன் என்பது உறுதி ஆகி விட்டது...கோழி மயில் ஆக முடியாது..கொக்கரக்கோன்னு தான் கத்த முடியும்..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஆக-201715:43:14 IST Report Abuse

Endrum Indianஅடுத்த வருடம் இந்த நீதிபதிகள் ரிடைர் ஆகி விடுவார்கள், அப்பொழுது மறுபடியும் ஒரு சீராய்வு மனு போடலாம் என்று அவர்கள் வக்கீல் சொல்லியிருக்கலாம் இப்போது, அப்போது தான் அவர்கள் தொடர்ச்சியாக பணம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்????

Rate this:
Balaji - Khaithan,குவைத்
24-ஆக-201714:50:04 IST Report Abuse

Balajiதமிழகத்துக்கு ஏற்பட இருந்த மிகப்பெரிய ஆபத்து நீதிமன்ற தீர்ப்பால் தடுக்கப்பட்டுள்ளது........ இருந்தாலும் இவர்கள் சும்மா இருப்பார்கள் என்று சொல்ல முடியாது........ சிறையில் ஏதோ ரிசார்ட்டில் தங்கியிருப்பது போலத்தானே சதிகாரி இருக்கிறார்.......... இது மிகப்பெரிய ஆபத்து.......... சதிகாரி சுதந்திரமாக இருக்க கர்நாடக காங்கிரஸ் அரசு பல உதவிகளை செய்து வருகிறது............ சட்டத்தையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு சுதந்திரம் சதிகாரிக்கு குற்றவாளிக்கு வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை...........

Rate this:
V.Sadagopan - Hosur,இந்தியா
24-ஆக-201713:54:28 IST Report Abuse

V.Sadagopanமுக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்களை விடுவிக்க இவர்கள் கூறும் காரணம் ஜெயலிலதா மட்டும்தான் அரசு சேவகராக இருந்தார். அவருக்கு மட்டும் தான் ஊழல் தடுப்பு சட்டம் பொருந்தும். எங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவே எங்களை விடுவிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருக்கிரார். அப்படியானால் தியாக தலைவி நாங்கள் நிரபராதிகள் ஜெயா மட்டும் தான் குற்றவாளி என கூறுகிறாரா. அம்மா அம்மா என்று கூவும் அணைத்து MLA க்களும் இதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மேலும் காசுக்காக தினகரன் பின்னால் ஒடிக்கொண்டிருக்கும் MLA க்கள் இன்னமும் SINன்னம்மாவுக்கு துதி பாடமால் இருந்தாலே உங்களுக்கு வரும் தேர்தலில் சீட் கிடைத்தாலும் டெபாசிட்டாவது திரும்ப வர வாய்ப்பிருக்கலாம்.

Rate this:
Ganapathy - Bangalore,இந்தியா
24-ஆக-201713:42:33 IST Report Abuse

Ganapathyஎன்ன சார் இதெல்லாம் ஒரு செய்தியா , ஜாமின் கிடைத்தால் சென்னையில் ஷாப்பிங், இல்லாவிட்டால் பெங்களுருவில் ஷாப்பிங் , சேகர் ரெட்டி, முன்னாள் செகிரேட்டரி , குட்கா , விஜயபாஸ்கர் , க்ரானைட், தாது மணல் எவ்வளவோ இருக்கு

Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
24-ஆக-201712:06:24 IST Report Abuse

SaiBabaஏங்க, இன்னும் எத்தனை முறை சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்? எவ்வளவு கோடி செலவானாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டுல ஒரு மலை, ரெண்டு ஆறு, அதுவும் பத்தலேன்னா ஒரு நூறு பேர தர்றோம். உச்ச நீதி மன்றத்துக்கு மேல ஜனாதிபதி, ஐ.நா இல்ல பாகிஸ்தான் கோர்ட்டுக்கு கூட போகத்தயார். விஷயம் தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லுங்க. மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய சின்னம்மா அவர்கள் வெளியில் வந்தால் சரி.

Rate this:
Rajan - chennai,இந்தியா
24-ஆக-201711:13:34 IST Report Abuse

Rajanஎன்ன யாருமே மோடி அவர்கள் சசி தலையை தொட்டாரு (ஜெ., சடங்கில்)... அப்போவே எனக்கு தெரியும் இந்த தியாக தலைவிக்கு சீராய்வு மனு தள்ளுபடி பண்ணுவாங்கன்னு சொல்லவே இல்ல...இது மோடி அமித் சாவின் வேலை தான்னு...

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement