ரயில்வே அமைச்சர் ராஜினாமா? சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ரயில்வே அமைச்சர் ராஜினாமா?
சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்

புதுடில்லி:ஐந்து நாட்களில், உ.பி.,யில், 2 ரயில் விபத்துகள் நடந்து உள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்வதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

ரயில்வே,அமைச்சர்,ராஜினாமா?சுரேஷ் பிரபு,முடிவை,ஏற்க,பிரதமர் தயக்கம்

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முசாபர் நகரில், சமீபத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 156 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அவ்ரியா மாவட்டத்தில், கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று தடம் புரண்ட தில், 100 பேர் காயமடைந்தனர்.

உ.பி.,யின் அஜம்கரில் இருந்து, டில்லிக்கு செல்லும் கைபியாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று
அதிகாலை, 2:50 மணிக்கு, ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது, ரயில் பாதையில் குறுக்கே வந்த, மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம்புரண்டன; இதில், 74 பேர் காயமடைந்தனர்.

ஐந்து நாட்களில், இரு விபத்துகள் நடந்ததற்கு

பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்ச ரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபுதெரிவித் தார்.இது தொடர்பாக, 'டுவிட்டர்'சமூகதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு: எதிர்பாராத விபத்துக ளால், பலர் உயிரிழக்க நேர்ந் தது, காயமடைந்தது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். இந்த விபத்துகளுக்கு, முழு பொறுப்பையும் ஏற்று, ராஜினாமா செய்வதாக கூறினேன். பொறுமை யுடன் காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறினார்.

ரயில்வே அமைச்சராக, 3ஆண்டுகளில், ரயில்வே யின் வளர்ச்சிக்கு,என் ரத்தத்தையும், வியர்வையை யும் சிந்திஉள்ளேன்.இத்தனை ஆண்டுகளாக புறக் கணிக்கப்பட்ட,கவனிப்பாரில்லாமல் இருந்த ரயில்வே நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில், பிரதமர்மோடியின் தலைமையின் கீழ் ஈடுபட்டிருந் தேன். இதுவரை இல்லாத அளவுக்கு, முதலீடுகள் செய்யப் பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவி விலக முன்வந்துள்ளது, அரசியல் வட்டாரத் தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் பிரபு, அமைச்சராக தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு முன்னுதாரணம்


சுரேஷ் பிரபுவையும் சேர்த்து, இதுவரை, 43 பேர், ரயில்வே அமைச்சர்களாக இருந்துள்ளனர். விபத்து களுக்கு பொறுப்பேற்று,இதுவரை, இருவர் மட்டுமே, தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ கத்தின் அரியலுாரில், 956ல் நடந்த ரயில் விபத்தில், 142 பேர் உயிரிழந்தனர். அந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று, லால் பகதுார் சாஸ்திரி, ரயில்வே

Advertisement

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, 43 ஆண்டுகளுக்கு பின், விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, தற்போது, பீஹார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார், ரயில்வே அமைச் சர் பதவியில் இருந்து விலகினார்.

1999ல், அசாம் மாநிலம், கெய்சா லில் நடந்த விபத்தில், 290 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, நிதிஷ் குமார்பதவி விலகினார். கடந்த, 2000ல் நடந்த இரு விபத்துகளுக்கு பொறுப்பேற்று, தற்போது, மேற்கு வங்க முதல்வராக உள்ள, மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலக முன் வந்தார். ஆனால், அப் போதைய பிரதமர் வாஜ்பாய், அதை ஏற்கவில்லை.

வாரியத்துக்கு புதிய தலைவர்


ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, 'ஏர் - இந்தியா' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வினி லோகானி நியமிக்கப்பட்டுள் ளார். ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே வாரிய தலைவராக இருந்த, ஏ.கே. மிட்டல், நேற்று முன்தினம், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அளித்திருந்தார்; அது, நேற்று ஏற்கப்பட்டது.

அதை தொடர்ந்து, அஸ்வினி லோகானியின் நியமனத்துக்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, நேற்று அனுமதி அளித்தது. ரயில்வே பொறியியல் சேவை பிரிவு அதிகாரி யான, லோகானி, டில்லி மண்டல மேலாளர் மற்றும் ரயில்வே மியூசியம் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

விபத்துகளுக்கு காரணம் என்ன?


மத்திய ரயில்வே அமைச்சராக, 2015ல், சுரேஷ் பிரபு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 346 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், ரயில்வேயில், பாதுகாப்பு ஊழியர்கள் பற்றாக்குறை என, கூறப்படுகிறது. ரயில்வே புள்ளி விபரங்களின்படி, 1.42 லட்சம் பாதுகாப்பு பிரிவு பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வேயை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, அனில் கோகட்கர் குழு, 2012ல் அமைக்கப்பட்டது.

இந்த குழு அளித் துள்ள பல்வேறு பரிந்துரை களில் முக்கியமானது, பாதுகாப்பு பணியிடங் களை, உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது தான். ஆனால், இதுவரை, இந்த குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப் படவில்லை.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
01-செப்-201719:28:58 IST Report Abuse

Poongavoor RaghupathyI do not think our people wants Prabhu's blood and sweat but wants a safe rail travel. Safety was never a priority to Prabhu but revenues from public was main. The innovation of Tatkal and Premium was to earn more money.But now many lives in accidents lost. Is this not a pathetic Railway administration. lET PEOPLE DECIDE AND ACT.

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
25-ஆக-201708:48:47 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா...அவர்களே..... இது நடப்பது உத்தர பிரதேசத்தில்....யோகி அரசுக்கு களங்கம் விளைவிக்க சதி செயலாக கூட இருக்கலாம்.......இந்த கருத்துதான் உண்மையாக இருக்கும் என்று பலர் மனதில் நினைக்கிறார்கள்.

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201716:58:50 IST Report Abuse

Visu Iyerஇதே போல் நாடு வளர்ச்சியில் குறைபாடு (வளர்ச்சி விகிதம் 2% குறைந்து உள்ளது தானே ) உள்ளது என பிரதமர் பதவி விலகுவாரா?

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-ஆக-201721:43:10 IST Report Abuse

Manianவிசு, கம்யூனிஸ்ட் ஆட்சியில் கொல்லப்படுவதை(சைனா போல்) விரும்புகிறீர்களா?...

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
24-ஆக-201712:31:42 IST Report Abuse

Poongavoor RaghupathyPrabhu was taking many actions to increase the revenue of Railways through Tatakal and Premium Tatkal but had completely neglected the safety of passengers and punctuality of trains. Prabhu has not cared for the services to the public.A Minister elected by public has to give priority to the service of public.Increasing train speed should be the second priority-No good foodin trains- safety is hazardous- inconveniences to travel public in second sleeper compartments by allowing ordinary ticket holders -heavy corruption with Train ticket checkers- Are these achievements of Prabhu- If Prabhu was unable to control these he should have first privatise Railways- But good to hear at least has submitted his resignation realising his responsibilities- As Govt employees are lethargic and Govt machineries are unable to control inefficiencies the best native is to Privatise Railways- For many employees the fear of loosing the job is to make them more efficient-That is possible only when you privatise.Definitely Private establishments are more efficient than govt controlled establishments.

Rate this:
B.Indira - thane,இந்தியா
24-ஆக-201711:10:03 IST Report Abuse

B.Indiraகுறைகளை உடனே களைகிறார் ரயில் பெட்டி சுத்தமாக இல்லாவிட்டாலோ ,தண்ணீர் இல்லாவிட்டாலோ வேறு எந்த பிரச்சினையானாலும் .ட்விட்டரில் எழுதி விட்டால் கவனிக்கிறார். கடை நிலை ஊழியர்கள் சரியாக வேலை செய்யாததால் வந்த வினை இது. நவீனமாக்கும் முயற்சியில் வேகமாக வேலை செய்தார். நம் மக்கள் ரயில் பெட்டியை சுத்தமாக வைத்து கொள்வதில்லை. சுத்தம் செய்யும் பணியாளர்கள் இருவரை ஒவ்வொரு ரயிலிலும் பயணம் செய்ய அனுமதித்து மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
24-ஆக-201716:08:43 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு B.Indira - Thane,இந்தியா அவர்களே....நானும் மோதி அவர்களின் தீவிர ஆதரவாளன். ஆனால் மோதி அவர்களுக்கு உள்ள புகழை கெடுப்பதற்கு .....இரண்டு மத்திய அமைச்சர்கள் இருக்கின்றனர். (1 ) ரயில்வே அமைச்சர்: சிறுவர்களுக்கு உள்ள சலுகைதனை அநியாயமாக நீக்கினார். எண்ணத்தை கட்டிக்கொண்டு போய் விட்டார் ? முதியவர்களை...

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
24-ஆக-201716:15:34 IST Report Abuse

Sitaramen Varadarajanமுதியவர்களை சிறிதும் மதிக்காமல், சப்சிடி தொகையை தாங்களாகவே விட்டுக்கொடுக்குமாறு, கோரிக்கை பதிவு செய்துள்ளார். ஏன் இலவச பயணம் செய்யும் பழைய புதிய லோக் சபா சட்ட சபா உறுப்பினர்களையும், பதவியில் இருந்து ஓய்வு பெற்று இலவச பயணம் அனுபவிக்கும் கும்பலையும், இலவச பயணத்தை விட்டுக்கொடுக்குமார் கோரா வில்லை. ? ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி குழந்தைகளும், முதியவர்களும்தான்.... (2 ) நிதி மந்திரி: பென்ஷன் கூட இல்லாமல் சாகப்போகும் முதியோருக்கு கூட ....வட்டி விகிதத்தை குறைத்து......பொருளாதாரத்தை சீர் தூக்குகிறாராம். பாவிகள். இந்த முதியோர்களுக்கு மட்டும்........வட்டி குறையாமல் ஒரு "தள்ளுபடி" அறிக்கை வெளியிட்டால்......இந்தியா கவிழ்ந்து விடுமா....? இந்த இவர்களால் பிரதமருக்கு அவப்பெயர்தான்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-ஆக-201721:39:39 IST Report Abuse

Manianஇந்த ரயில் பிரச்சினையுடன் மற்றவற்றை பேசுவதால் பயன் இல்லை. சீர்திருத்தம் ஆரம்பம் ஆனால்தான் மற்றவை வரும். ஓசி ஒழிவது முதல் படி. முதியவர்கள் ரயிலில்தான் போகிறார்களா? அதிக விலை டிக்கட்டில் ஆம்னி பஸ்ஸில் போகவில்லையா? எத்தனை சதவிகித 70-80% கிராமவாசி முதியோர்கள் ஏசி பெட்டிகளில் பிரயாணம் செய்கிறார்கள்?மத்திய,மேல் தட்டு வசதி படைத்த ஆயிரக்கணக்கான முதியவர்கள் தங்கள் சொத்துக்களை அவர்கள் பிள்ளைகளுக்குதானே கொடுக்கும்போது, பொது மக்கள் வரிப்பணத்தில் ஏன் ஓசி பெறவேண்டும்?...

Rate this:
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
24-ஆக-201710:53:40 IST Report Abuse

Barathanஇந்த லட்சணத்தில் புல்லட் ட்ரெயின், ஹைப்பர் ட்ரெயின் பிஜேபி அரசு விடப்போகுதாம். இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறத பிடிக்கிற கதையாய் இருக்கு.

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-ஆக-201721:25:09 IST Report Abuse

Manianஅந்த அமைப்பு தனியார் வசம். ஓசி சேவை இல்லை. பிரிடீஷ் காலத்திய தொழில் நுட்பம் இல்லை...

Rate this:
Ram Babu - Trivandrum,இந்தியா
24-ஆக-201710:01:52 IST Report Abuse

Ram Babuஏன் தேவையில்லாமல் ஜாதியே இழுக்கிறீர்கள் . ரயில்வே ஊழியர் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் நடவடிக்கை எடுங்கள் . எந்த ஜாதியாக இருந்தால் என்ன ? பிரபு ஒரு நல்லவர் . அரசியல்வாதிக்கு அப்பாற்பட்டவர். அதனால் தான் அவர் ராஜினாமா செய்கிறார் .

Rate this:
Balaraman Madhavan - Chennai,இந்தியா
24-ஆக-201709:55:36 IST Report Abuse

Balaraman Madhavanஇந்தியாவில் ஆட்சித் தான் மாறியிருக்கிறது. நிர்வாகத்திலிருக்கும் ஊழல் அதிகாரிகள் மாறவில்லை. அவர்களை களைப்பிடுங்க இந்த அமைச்சரவை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது எனது கருத்து.

Rate this:
Manian - Chennai,இந்தியா
26-ஆக-201708:05:32 IST Report Abuse

Manianகளை எடுக்க சட்ட மாற்றம் தேவை. அது இல்லாதவரை யூனியன்கள் எதுவும் செய்யவிடாது. பணி கொடுக்கும் போதே சொத்துள்ள சொந்தங்கள் 1 லட்சம் பணயத்திற்கு கையெழுத்து போட்டு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். ஸ்டிரைக் செய்வதால் ஏற்படும் நஷ்டத்திற்கு அது நஷ்ட ஈடாகும். அப்படி நடந்தால் ஒன்று ஒழுங்காக வேலை செய்வார்கள் அல்லது வேலையை விட்டு ஓடுவார்கள். 1800 கட்சிகள், லஞ்ச வியாதிகள் இதை செய்ய விடுவார்களா? நமது போலி ஜனநாயகத்தில் மந்திரி கொலைக்கத்தான் முடியுமே தவிர கடிக்க முடியாதே மேலும், 70-80% லஞ்சம் கொடுப்பதை-வாங்குதை சரிதான் என்னும்போது, 20% லஞ்சம் வாங்காதவர்களால் என்ன செய்யமுடியும்? இதற்கு தீர்வும் சொல்லுங்களேன்....

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
24-ஆக-201709:24:00 IST Report Abuse

தாமரை ரயில்வேக்கு கிடைத்த மிகச் சிறந்த அமைச்சர் திரு பிரபு. ராஜினாமாவால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. இவர் ஆரம்பித்துள்ள பல பணிகள் ரயில்வேக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இவரால் முடிக்கப்பட வேண்டும். போர்க்கால அடிப்படையில் அத்தியாவசிய பணிகளுக்கான பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Rate this:
தலைவா - chennai,இந்தியா
24-ஆக-201711:20:45 IST Report Abuse

தலைவா தாமரை படத்தை போட்டபின் நேர்மையான கருத்தையா எதிர்பாக்க முடியும். சிறந்த பொய்யர்கள் புழுகர்கள் போட்டி நடந்தால் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-ஆக-201721:24:04 IST Report Abuse

Manianசொந்த வாழ்க்கையில் உண்மையே பேசும் உத்தமரா நீங்கள்?...

Rate this:
தலைவா - chennai,இந்தியா
29-ஆக-201709:48:55 IST Report Abuse

தலைவா ஆமாம் நான் பொய் பேசியதில்லை......

Rate this:
Udaya Kumar - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-201709:10:37 IST Report Abuse

Udaya Kumarநாட்டிற்கு தேவை நிறைய ரயில் பாதைகள் .நாடு முழுக்க சாலைகள் போடுகிறாரகள் அது போல புதிய வழித்தடங்கள் வந்தால் விபத்தும் குறையும் மக்களும் பயன் அடைவார்கள்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-ஆக-201721:21:57 IST Report Abuse

Manian1% பேரே வருமான வரி செத்தும் போது, 70-80% மக்கள் ஓட்டை விற்கும் போது அதை செய்ய காசு நர்ற ஏமாளி யாருங்க? சிங்கப்பூர்லெ அப்படி செய்யுறாங்களா?...

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement