ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் சவால் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் சவால்

பெரம்பலுார்:''ஜெ., ஆன்மா எங்களோடு இருக் கும் வரை, ஆட்சியை அசைக்கமுடியாது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஆட்சியை,அசைக்க,முடியாது,முதல்வர்,சவால்

அ.தி.மு.க., அணிகள் இணைப்புக்கு பின், முதல் அரசு விழாவாக, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, அரியலுாரில் நேற்று மாலை நடந்தது. சபாநாயகர் தனபால் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமிபேசியதாவது:

மக்கள், நம் பக்கம் இருக்கின்றனரா என்பதை விட, நாம் மக்கள் மனதில் இருக்கிறோமா என்பதே இப்போதைய நிலையாக உள்ளது. என்னை நம்பிய மக்களுக்கு, எதையும் எதிர் பாராமல், ஜெ., ஆசியோடு தொடர்ந்து உழைப் பேன்.ஆட்சிக்கும், கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் துடிக்கின்றனர். ஜெயலலிதா

ஆன்மா எங்களோடு இருக்கும் வரை, ஆட்சியை அசைக்க முடியாது. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் ஆன்மாக்களால், இந்த ஆட்சி இயங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு தரிசனம்:


எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க, விமானம் மூலம் திருச்சி வந்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், கார் மூலம் அரியலுார் சென்றார். வழியில், சமயபுரம் அடுத்து உள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அங்கு பிரம்மா,சிவன், அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வழிபாடு நடத்தினார். இந்த கோவிலின் விசேஷமே, வழிபாடு நடத்துபவ ரின் தலையெழுத்து மாற்றப்படும் என்பது தான்.

15 கிராமங்களில் கறுப்பு கொடி


'விவசாயிகள் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து, அரியலுார் வரும் முதல்வ ருக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும்' என, தி.மு.க., மாவட்ட செயலர் சிவ சங்கர் அறிவித்திருந்தார். இதன்படி, நேற்று அரிய லுார் மாவட்டத்தில் குறிச்சிக்குளம்,தாமரைபூண்டி,

Advertisement

கீழப்பழுவூர் உள்பட, 15கிராமங்களில், 1,000த் துக்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடியேற்றப்பட்டது.

பன்னீர்ஆவேசம்


''எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும், அ.தி. மு.க., வை அசைக்க முடியாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார். அரியலுா ரில் நேற்று நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆகியோர், 42 ஆண்டுகள் காலம் கட்டிக் காத்து இந்த இயக் கத்தை, எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத, இரும்பு கோட்டையாக உருவாக்கி தந்திருக் கின்றனர்.

இந்த இயக்கத்திற்கு, நம்முடைய உயிரை கொடுத்தாவது, தொடர்ந்து, ஜெ.,யின் நல்லாட் சியை நிலைநிறுத்துவோம் என்கிற பணி யில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டில் சபத மேற்போம். இவ்வாறு அவர்பேசினார்.

இருஅணிகளாக பிரிந்து இருந்த, முதல்வர் பழனிசாமியும், பன்னீர் செல்வம் தலைமையி லான அணிகள் இணைந்த பின்,முதல் முறை யாக இருவரும் ஒரே மேடையில் பேசினர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
30-ஆக-201711:27:55 IST Report Abuse

A shanmugamஆட்சிக்கு வரப்போகுது கூடிய விரைவில் ஒரு பெரிய "ஆப்பு"

Rate this:
24-ஆக-201718:36:22 IST Report Abuse

அப்பாவிஅதென்ன கொம்பாதி கொம்பன்? இவருக்கெல்லாம் யார் தமிழ் சொல்லிக் கொடுத்தது? ஏகத்துக்கு பேசி உதார் உடாதீங்க.... அப்புறம் மோடிஜியை அடிக்கடி மரியாதை நிமித்தமா சந்திக்க நேரிடும்.

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
24-ஆக-201717:52:51 IST Report Abuse

Indianஇந்த அடிமைகள் தமிழகத்தையே மோடியிடம் அடகு வைத்து விட்டனர், சிபிஐ மிரட்டலுக்கு பயந்து

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201717:00:45 IST Report Abuse

Visu Iyerகால் ஒடிந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுவது இவர்களுக்கு வழக்கம்.. இவர்களை நம்பாதீர்கள்.. தமிழ்நாட்டை இவர்களால்.. ஜெ விற்கு பிறகு காப்பாற்ற முடியாது..

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஆக-201716:31:01 IST Report Abuse

Malick Rajaகால்கள் இல்லாத நாற்காலியில்தான் முதல்வர் இருக்கிறார் சிலர் உயரமாக தூக்கி பிடித்துக்ள்ளதால் கால் இல்லாதது வெளியில் தெரியவில்லையோ...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
24-ஆக-201716:24:02 IST Report Abuse

Balajiமுன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை ஒருவர் மாத்தி ஒருவர் சுமத்திக்கொண்டு இருந்த இவர்கள் இருவரும் ஒன்றிணைந்ததையே தமிழக மக்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை......... ஒன்றாகிவிடுவோம் என்று இருவருக்கும் எண்ணம் இருந்திருந்தால் கடுமையான விமர்சனங்களை தவிர்த்திருந்தாலாவது மக்கள் ஏற்றுக்கொண்டு இருந்திருப்பார்கள்........... இதில் OPS அணியினர் இணைப்புக்கு முன்னர் ஆளும் அரசு ஊழல் மலிந்து கிடக்கிறது என்று சொன்னதும் அதே அணியுடன் (பேரம் படித்தவுடன்) சென்று ஒட்டிக்கொண்டதும் சற்றும் எதிர்பாராதவை......

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
24-ஆக-201715:14:09 IST Report Abuse

Sundaramமக்கள் ஆதரிக்கும் இக்கட்சியை தினகரன் செயலு போன்ற காமெடி மன்னர்களால் அசைக்க இயலாது

Rate this:
pazhaniappan - chennai,இந்தியா
24-ஆக-201714:10:11 IST Report Abuse

pazhaniappanஒரு முதலமைச்சரா இருந்த உங்களுடன் 10 mla க்கு மேல ஒருபய உம்மேல நம்பிக்கை வைத்து வரலே நீயும் ஊர் ஊற சுத்திப்பார்த்தே ஒரு பப்பும் வேகல ,அதுவும் எதோ ஒரு காரணத்தால் தொண்டர்கள் அதிகம் பேர் உன்கூட இருக்காங்கன்னு தெரிந்தும் ஒரு mla கூட பன்னீர்ப் பின்னால வரலே காரணம் MLA அத்தனைபேரும் பண்ணீரைப் போலவே காசுக்கு வேஷம் போடுற கூட்டம் , அப்புறம் யாரை ஊழல் வாதி என்றும் யாருடைய ஆட்சியை ஊழல் ஆட்சி என்றும் விமர்சித்தாரோ அவர் கூடவே கைகோர்த்து நிதியை பெற்றார் ஒரு MLA வைக்கூட இழுக்கமுடியாத பன்னீரா எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதென்று பேசுவது, மக்கள் மத்தியில் இந்த கொலைகார ,கொள்ளைக்கார கும்பலை யாராவது விரட்டமாட்டார்களா என்ற எண்ணம் வந்து விட்டது ,நீர் மோடியோட ஆசியில் இருக்கிறோம் ஏற்ற மமதையில் பேசுகிறீர் அடுத்து நீர் மக்கள் மன்றத்திற்கு வரும்போது ,நீர் என்ன பாடுபடப் போகிறீர் என்பது தெரியும் ,பொறுத்திருந்து பாருங்கள்

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
24-ஆக-201713:02:13 IST Report Abuse

ganapati sbops eps இருவரும் எப்போதும் பழம் பெருச்சாளிகளுக்கே வாய்ப்பு கிடைக்கும் திமுக காங்கிரஸில் யாரேனும் முதல் தடவை mla ஆகி இருந்தால் அவர்களை வளைத்துப் போட்டு தினகரன் மூலம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்

Rate this:
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
24-ஆக-201712:53:57 IST Report Abuse

Mayilkumarஅதிமுக (புரட்சித் தலைவி அம்மா) + அதிமுக (அம்மா) இரண்டும் சேர்ந்து இப்பொழுது "புரட்சித் தலைவி அம்மம்மா அதிமுக" தமிழக மக்கள் இன்னமும் குவாட்டர் சரக்கு குவாட்டர் பிரியாணி பின்னாடி போனால் இப்படித்தான். உங்கள் கையை எடுத்து உங்கள் கண்ணையே குத்துகிறார்கள். இனி வரும் காலங்களிலாவது மரத்துக்கு மரம் தாவும் கூத்தாடிகளுக்கு ஒரு பாடம் புகட்டுங்கள்.

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
24-ஆக-201712:16:13 IST Report Abuse

Rahimஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே... பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே... ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே..... பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே...... ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு...... அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு......

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement