தினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரனால் நெருக்கடி: முதல்வர் ஆலோசனை

தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டலை சமாளிப் பது குறித்தும்,அவரது அணியில் உள்ள, எம்.எல். ஏ.,க்களை இழுப்பது குறித்தும், முதல் வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

 தினகரன் ,Dinakaran,   முதல்வர், chief minister,ஆலோசனை, consulting, எம்.எல். ஏ, ML A, துணை முதல்வர் ,Deputy Chief Minister, அமைச்சர்கள் , Ministers, அ.தி.மு.க.,  ADMK,சசிகலா , Sasikala, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy,பெரும்பான்மை,Majority, தி.மு.க.,Majority, காங்கிரஸ் , Congress,துணை முதல்வர் பன்னீர்செல்வம், Deputy Chief Minister Panneerselvam,அரியலுார், Ariyalur, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா,MGR century ceremony,MGR centenary celebration ,பன்னீர்செல்வம், Panneerselvam,

அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், சசிகலா குடும்பத்தினர், ஆட்சியையும், கட்சியையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க, பகீரத பிரயத் தனத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 19 பேர் உதவியுடன், ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளனர். கவர்னரை சந்தித்து, 19 பேரும், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்துள்ளனர்.

இதனால், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.சட்டசபையில், அ.தி. மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள்; தி.மு.க., விற்கு, 89; காங்கிரசுக்கு எட்டு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ.,வும் உள்ளனர். ஒரு தொகுதி காலியாக உள்ளது.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், தி.மு.க., தலைவர் கருணா நிதி, உடல் நலக்குறைவால், சட்டசபைக்கு வருவது சிரமம்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், சபாநாயகர் தனபால், ஓட்டளிக்க இயலாது. சம நிலை ஏற்படும் போது மட்டுமே, அவர் ஓட்டளிக்க முடியும். மீத முள்ள, 134அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் களில், 19 பேர் தினகரன் அணியில் உள்ளனர்.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கூட்டணி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், இன்னமும் முடி வெடுக்கவில்லை என, தெரிவித்துள்ளனர்.

எனவே, தற்போதைய நிலையில், முதல்வர் பழனி சாமிக்கு ஆதரவாக, 112 எம்.எல்.ஏ.,க் கள் மட்டுமே உள்ளனர். மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க, இன்னும், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தேவை.

எனவே, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தினகரன் அணி எம்.எல்.ஏ.,க்களை, தங்கள் பக்கம் இழுக்க, முதல்வர் தரப்பினர் முயற்சித்து வருகின்ற னர்.ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை குறித்து, நேற்று முன்தினம் தலைமை செயலகத் தில், முதல்வர்பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள், இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

நேற்று காலை, 10:00 மணிக்கு, முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், அரிய லுார் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ப தற்காக, ஒரே விமானத்தில் சென்றனர். அப்போதும்,

Advertisement

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து உள்ளனர்.திருச்சியில் இருந்து காரில், பெரம்ப லுார் சென்றனர். அங்கு, மதிய உணவு முடித்த தும், அமைச்சர்களுடன் ஆலோசித்தனர். அப்போது, தினகரன், துணைப் பொதுச்செயலர் எனக்கூறி, அமைச்சர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தினகரன் வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினரிடம் பேசி, அவர்களை தங்கள் பக்கம் இழுப்பது குறித்தும், ஆலோசிக்கப்பட் டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த கட்டமாக பொதுக் குழுவை கூட்டுவது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் அனைவரையும் சென்னை வர முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Vizg,இந்தியா
24-ஆக-201723:23:06 IST Report Abuse

Rajasekaranஒரு காரியம் ஆக வேண்டுமானால் பிறருடைய காலில் விழுவது தப்பே இல்லை அதைதான் இவர்கள் செய்தார்கள் ஒரு முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே இவர்கள் ஆட்டிப்படைத்தார்கள் என்றால் இவர்கள் எம்மாத்திரம் மக்களை ஒன்று கேக்கிறேன் உங்களுக்கு ஒரு காரியம் ஆகுனுமனா எப்படி காய் நகர்த்துகிறீர்கள் உங்களுக்கு ஒன்று இவர்களுக்கு ஒன்றா இன்று வரை எவரும் ஒட்டு கேட்டு வருபவரிடம் எங்களுக்கு எந்த வகையில் நீங்கள் நல்லது செய்வீர்கள் யாராவது கேட்டது உண்டா அல்லது அவர்கள் நாங்கள் மக்களுக்கு இவ்வாறு செய்கிறோம் என்று எழுதி அவர்கள் கையொப்பம் பெற்று இருக்கிறீர்களா இல்லை அவர்கள் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு முத்திரை குத்திகிறீர்கள் ( சில பேர் ) இதில் எவருடையது தவறு நீங்களா அல்லது அரசியல் கட்சியா

Rate this:
skandh - chennai,இந்தியா
24-ஆக-201718:25:48 IST Report Abuse

skandhநடந்துகொண்டிருப்பது பீ ஜெ பி ஆட்சி ஆ தீ முல்லை கா ஆட்சியல்ல. அம்மாவின் சாயல் சிறிதும் தெரியவில்லை இந்த ஆட்சியில். பழனிசாமியும் பன்னீரும் விலகி செங்கோட்டையன் தலைமையில் ஆ தீ முல்லை கா ஆட்சி வர வேண்டும் நீட்டில் தோல்வி, உதய் திட்டத்தில் தோல்வி அம்மா எடுத்த முடிவுக்கு எதிராக தீர்மானித்த பழனியும், பன்னீரும் ஆட்சியிலிருந்து இறங்கி செங்கோட்டையனிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும். எங்களுக்கு உண்மையான ஆ தீ முல்லை கா ஆட்சியே வேண்டும். மோடியோ, குருமூர்த்தியோ தலையிடும் ஆட்சி தேவையில்லை.

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஆக-201717:02:35 IST Report Abuse

Visu Iyerமிரட்டி வாங்கிய ராஜினாமா என்றார்.. இன்று மிரண்டு இருக்கிறார்கள் மக்கள்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
24-ஆக-201715:49:30 IST Report Abuse

Balajiதமிழகத்தில் நடக்கும் அரசியல் விநோதங்கள் அனைத்தும் தமிழக மக்களால் சகித்துக்கொள்ளும் விதத்தில் இல்லை........ எதிர்வரும் தேர்தலில் (இப்போதே வந்தாலும் சரி இல்லை நான்கு வரும் இந்த ஆட்சி முடிந்த பிறகு வந்தாலும் சரி) இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பது மட்டும் உண்மை.......... ஜெ இருக்கும் போதே தமிழர்கள் அதிமுகவுக்கு மெகாத்தோல்விகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதை தற்போது பதவி போட்டியிடும் இவர்கள் மறந்துவிட்டார்கள் என்று தான் தெரிகிறது.......... என்ன ஒரு குறையென்றால் இவர்களை விரட்ட மீண்டும் திமுகவை தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான்..............

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
24-ஆக-201715:13:57 IST Report Abuse

Prabaharanகாங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் என்றால் உடனே (ஒழுங்காக இருந்தாலும்) நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். மத்திய அரசுக்கு தமிழ்நாடு கோமா அரசாங்கத்தின் மீது அவ்வளவு அக்கறை

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
24-ஆக-201713:31:59 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranநேற்று ஜெயா டிவியில் இந்த ஓபிஎஸ் /இபிஎஸ் .திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் ,ஜெயக்குமார் ,வேலுமணி மற்றும் பல அமைச்சர்கள் சசிகலா காலில் விழுந்து கும்பிட்ட விடியோக்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. இப்படிப்பட்ட கயவாளிகளை நம்பிக்கைத் துரோகிகளை வைத்து எப்படி அம்மா சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு தந்தார்கள் என்று வியப்பாக இருக்கிறது .காலில் விழுந்தே காலை வாரும் துரோகிகள்

Rate this:
kandhan. - chennai,இந்தியா
24-ஆக-201718:09:46 IST Report Abuse

kandhan.இதுதான் எட்டப்பர்களின் கூட்டம் ராஜாமணி இந்த கூட்டத்தால் தமிழக மக்களுக்கும் எந்த துறையினருக்கும் ஒரு நன்மையையும் ஏற்பட போவது இல்லை எனவே மறு தேர்தல் நடத்தினால்தான் இவர்களின் நிலை தெரியும் கந்தன் சென்னை...

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
24-ஆக-201713:26:45 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஇனி அடுத்த வருடம் தான் பொறுப்பு ஆளுநர் தமிழகம் வருவார் .ஓபிஎஸ் -இபிஎஸ் இணைப்பு அன்று விரைவாக வந்தார் .ஆயினும் இணைப்பு தாமதப்பட்டது .உடனே குருமூர்த்தி ஓபியேசிடம் பொறுப்பு ஆளுநர் சென்னை வந்துவிட்டார் .இப்போதும் நீங்கள் நிபந்தனைகள் போட்டுக்கொண்டிருந்தால் மறுபடியும் நீங்கள் பதவி பெறமுடியாது. சசிகலா வெளியில் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் .நீங்கள் இபிஎஸ்சுடன் இணைந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு பொறுப்புகளை அதிகரித்து பழனிச்சாமியை ஓரம் கட்டுவோம் எங்களை நம்புங்கள் என்று அறிவுரை கூறினார். ஆளுநர் இருவரையும் கையை குலுக்கி பதவி பிரமாணமும் செய்து வைத்தார். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் எடுபிடி பழனி சாமிக்கு எதிரான நிலையெடுத்தபின் பிஜேபி ஒற்றர் மைத்ரேயனுடன் விவாதித்துவிட்டு மும்பை சென்றுவிட்டார். இனி அடுத்தவருடம் கட்டாயம் தமிழகம் வருவார் .

Rate this:
sachin - madurai,இந்தியா
24-ஆக-201711:53:03 IST Report Abuse

sachinஅன்று கூவத்தூரில் சசிகலாவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு முதல்வராக மற்றும் அமைச்சர்களாக வர தெரிந்தது அது இனித்தது ....இன்று அதே தினகரன் புதுவைல செய்வது கசக்குதாகும் எடபடியாருக்கு ...........அன்று இனித்த பழம் இன்று முதல்வருக்கு கசக்குதாக்கும் ......ஓ பி எஸ் பத்தி தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் பதவி குடுத்தாள் என்ன வேண்டுமானாலும் செய்வார் ...தியானம் செய்வதில் அதிலும் கல்லறைல நன்றாக செய்வார் ....ஓ பி எஸ் ஒரு பூனை தோல் போர்த்திய புலி .....பதவி கொடுங்கள் சிரித்து கொண்டே இருப்பார் ஒன்றும் தெரியாதது போல

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
24-ஆக-201711:37:18 IST Report Abuse

Prabaharanஇப்பொழுது எம் எல் எ . ரேட் எவ்வளவோ. மோடி ஆட்சியில் எம் எல் எ க்களின் விலை தான் மிக அதிகமாக இருக்கிறது. இதற்கும் ஜி எஸ் டி வரி வைக்க வேண்டும்

Rate this:
SARAVANAN SATHAPPAN - bangalore,இந்தியா
24-ஆக-201711:01:17 IST Report Abuse

SARAVANAN SATHAPPANநெருக்கடி ஏன்? இவர் மிகவும் திறமையானவர். கட்சியின் ஒற்றுமையை பாதுகாப்பவர். ஒரு நிமிடமேனும் பதவியிலிருந்து அகல விரும்பாதவர். அம்மாவின் ஆத்மாவை ஒட்டி வாழ்பவர். எப்பாடு பட்டேனும் கழகத்தின் ஆட்சியை பாதுகாப்பது என்ற குறிக்கோளுடன் வாழ்பவர். ஆனால் விசுவாசம்? நன்றி? மக்கள் சிந்திப்பார்கள்தானே

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement