19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை

Updated : ஆக 24, 2017 | Added : ஆக 24, 2017 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
19  எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா  பரிந்துரை

சென்னை: முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்த 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து அரசு கொறடா ராஜேந்திரன் அளித்த பேட்டி: 14.2.2017 ல் அதிமுகவை சேர்ந்த அனைத்து சட்டசபை எம்எல்ஏக்களும் ஒரு மித்த முடிவிற்கு எதிராக எந்தவித தீர்மானமோ, முடிவோ எடுக்கப்படாத நிலையில், 19 எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக கவர்னரிடம் மனு கொடுத்துள்ளதாக மீடியாக்களில் செய்தி வந்துள்ளது. அவர்கள் மீடியாக்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்கள். இந்த செயல், தான் சார்ந்துள்ள கட்சி உறுப்பினர் பதவியை தானாகவே விட்டு கொடுக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவதால், இ ந்திய அரசியலமைப்பு சட்டம், பத்தாவது அட்டவணையின்படி, 19 எம்எல்ஏக்கள் தகுதியின்மைக்கு ஆளாகிறார்கள். இதனை சுட்டிக்காட்டி, 1986ம் ஆண்டு தமிழக சட்டசபை விதி பிரிவு 6ன் கீழ் மாண்புமிகு சபாநாயகரிடம் அந்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

தொடர்ந்து அளித்த பேட்டி: எம்.எல்.ஏ.,க்கள் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அவர்களாகவே சென்று மனு அளித்தனர். எனது கோரிக்கையை அளித்துவிட்டேன். இறுதி முடிவை சபாநாயகர் தான் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

19 எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை

Advertisement


வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஆக-201707:52:56 IST Report Abuse
D.Ambujavalli 19 பேரை தகுதி நீக்கம் செய்யும் இந்த 'கொறடா' அன்று பன்னீரையும் + 12 எம் எல் ஏக்களையும் ஏன் செய்யவில்லை? Long rope கொடுத்து, கடைசியில் ஒரு நாள் நமக்கு இக்கட்டு வரும்போது இழுத்துக்கொள்ளலாம் என்றுதானே இதே கேள்வியை தினகரனும் எதிர் கட்சியும் கேட்கப்போகிறார்கள் பார்க்கலாம் கூத்தை
Rate this:
Share this comment
Cancel
Ahamed Fazal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-201700:46:13 IST Report Abuse
Ahamed Fazal அணைய போற விளக்கு பிரகாசமாக எரியுது
Rate this:
Share this comment
Cancel
Vasanthan Velsamy - Aruppukottai,இந்தியா
24-ஆக-201723:48:17 IST Report Abuse
Vasanthan Velsamy என்று பெருந்தலைவர் அந்த விளக்கை அணை என்று கூறினாரோ அன்றே தமிழகத்தின் விளக்கு அணைந்து விட்டது. நல்லவேளை அந்த மகான் கண் மூடினார் இது போன்ற காட்சி பாராமல்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X