delhi ush | பயத்தில் அமைச்சர்கள்| Dinamalar

பயத்தில் அமைச்சர்கள்

Updated : ஆக 27, 2017 | Added : ஆக 27, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
delhi ush, டில்லி உஷ், மத்திய அமைச்சர்கள், cabinet ministers, pm, பிரதமர், modi, மோடி, அமித்ஷா,amit shah, dinakaran, தினகரன், அரியானா, hariyana, கட்டார்

அடுத்த ஒரு வாரத்தில், மத்திய அமைச்சரவை மாற்றம் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கள் பதவிக்கு ஆபத்து வருமோ என, மத்திய அமைச்சர்கள் பயத்தில் உள்ளனர். ஒரு சிலர், தங்கள் வேலைக்கு மதிப்பு கொடுத்து, இணை அமைச்சர் பதவியிலிருந்து, கேபினட் அந்தஸ்திற்கு பதவி உயர்வு கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.அமைச்சரவையிலிருந்து, யார் யார் வெளியேற்றப்படுவர் என்பதும், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும், பிரதமர் மோடிக்கும், பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கும் மட்டும் தான் தெரியும். அந்த அளவுக்கு, இது பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.தற்போது, இணை அமைச்சராக உள்ள ஒரு தமிழருக்கு, கேபினட் அமைச்சராக பதவி உயர்வு கிடைக்கும் என, சொல்லப்படுகிறது. அந்த அமைச்சர், சமீபகாலமாக, தமிழக விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அடுத்த லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள, 2019க்கு முன் நடக்கவுள்ள, முக்கியமான அமைச்சரவை மாற்றமாக, இது இருக்கும் என்கின்றனர்.


லட்சம் கோடிகள்!

தமிழக அரசியல் நிலவரம் குறித்து, டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் பரபரப்பாக அலசப்படுகிறது. அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம், பழனிசாமி அணியினர், எப்போது இணைவர் என, பா.ஜ., தலைமை காத்திருந்தது. 'இணைந்தால் பிரச்னை முடியும்; பா.ஜ.,வுக்கு உதவியாக இருக்கும்' என, நினைத்தனர்.இணைந்ததும், பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஒரு வழியாக பிரச்னை முடிந்தது என்றிருந்த நிலையில், தினகரன் அணியின், 19 எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர்; இது, பா.ஜ., தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'பழனிசாமி அரசு கவிழ்ந்தால், தி.மு.க.,வுக்கு இடம் கிடைத்துவிடும்; அது நடக்கக் கூடாது' என்பதில், பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த தலைவர் ஒருவர், டில்லியில், அ.தி.மு.க., முக்கிய பிரமுகரிடம், சமீபத்தில் பேசினார். 'தினகரன் ஏன் இப்படி செய்கிறார்; அந்த அம்மா, உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையே, சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை நடத்தினார்; அவர் கடுமையாக உழைத்து, ஏற்படுத்தி தந்த ஆட்சியை, கோட்டை விடலாமா' என, கேட்டார்.அதற்கு அந்த, அ.தி.மு.க., பிரமுகர், 'தினகரனிடம் எவ்வளவோ சொல்லி விட்டோம்; நீங்கள் பகிரங்கமாக செயல்படாமல், பின்னால் இருங்கள்; உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை செய்து தருகிறோம் எனச் சொல்லியும், அவர் கேட்க மறுக்கிறார்' என்றார்.'அ.தி.மு.க.,வினர், சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இன்னும் ஆதரவு தெரிவிப்பது ஏன்' என, அந்த, பா.ஜ., தலைவர் கேட்டார். அதற்கு, அந்த, அ.தி.மு.க., தலைவர், 'அவர்களிடம் உள்ள பணம் தான், இதற்கு காரணம்' என்றார், அந்த, பா.ஜ., பிரமுகர், 'என்ன, ஒரு, 20 ஆயிரம் கோடி ரூபாய், அவர்களிடம் இருக்குமா' என, கேட்க, 'சார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்; அவர்களுக்கு, தமிழகம் முழுவதும் சொத்து உள்ளது; பணத்துக்கு பஞ்சமே இல்லை; அவர்களிடம் லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது' என, சிரித்தபடி கூறினார். இதை கேட்ட, பா.ஜ., தலைவருக்கு, மயக்கமே வந்து விட்டது.


ஹரியானா முதல்வருக்கு கல்தா?

டில்லிக்கு அருகே உள்ள, ஹரியானா மாநிலம், இப்போது பெரும் பிரச்னையில் உள்ளது. பாலியல் பலாத்கார வழக்கில், ராம் ரஹீம் எனப்படும், ஒரு சாமியார், குற்றவாளி என, தீர்ப்பு வெளியானதால், இந்த மாநிலத்தில் கலவரம் வெடித்துள்ளது. இந்த சாமியாருக்கு, ஹரியானா மற்றும் பஞ்சாபில், லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் உள்ளனர்.இந்த கலவரத்தை அடக்க, சரியான நடவடிக்கையை கையாளாத காரணத்தால், பா.ஜ.,வைச் சேர்ந்த, ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருடைய பதவி பறிக்கப்பட உள்ளது. வழக்கமாக, இந்த மாநிலத்தில், பெருபான்மை ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்கள் தான், முதல்வராக நியமிக்கப்படுவர்.ஆனால், ஜாட் இனத்தைச் சாராத, கட்டார், முதல்வராக, பா.ஜ.,வால் நியமிக்கப்பட்டார். கட்சி தலைவர் அமித் ஷா, 'கட்டார் வேண்டாம்' என்றார். ஆனால், மோடி, 'கட்டாரை தான், முதல்வராக நியமிக்க வேண்டும்' என, பிடிவாதமாக இருந்தார்.மோடிக்கு, இவர் மீது அப்படி என்ன பாசம்? 20 ஆண்டுகளுக்கு முன், குஜராத்திலிருந்து, கட்சி தலைமையால் வெளியேற்றப்பட்டார், மோடி. இவருக்கு, ஹரியானா மாநில பொறுப்பு அளிக்கப்பட்டது. அப்போது, மோடியும், மனோகர்லால் கட்டாரும், ஒரே அறையில் தங்கியிருந்தனர். அப்போது, கட்டார் தான் சமைப்பாராம். இவர் சமைக்கும் கிச்சடி-, மோடிக்கு ரொம்ப பிடிக்குமாம். அவ்வளவு நெருக்கம் இருவரும். இதனால், அமித் ஷா மறுத்தும் கூட, 'இவர் தான் முதல்வராக வர வேண்டும்' என, உறுதியாக இருந்தார், மோடி.கட்டார், ஹரியானா முதல்வரான பின், அந்த மாநிலத்தில் நடக்கும் மூன்றாவது கலவரம் இது. எனவே, 'முதல்வர் பதவியில், அவர் தொடரக் கூடாது' என்பது, அமித் ஷாவின் கருத்து. இந்த கலவரம் வெடித்த உடனேயே, பிரதமரைச் சந்தித்து, தன் கருத்தைச் சொல்லி விட்டார், அமித் ஷா.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-செப்-201705:20:01 IST Report Abuse
D.Ambujavalli எங்க ஊரில் 'அக்கா' வுக்கு பார்த்துப்பார்த்து டிபன் கட்டி அனுப்பி, ஐஸ்க்ரீமாக வாங்கிக்கொடுத்ததால் முதல்வர் ஆக வேண்டுமென்று இருந்த 'தங்கச்சி' கதை போலவே இருக்கிறதே 1
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை