மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு| Dinamalar

மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு

Added : ஜூன் 13, 2010 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், 1926ம் ஆண்டு, நவம்பர் 23ம் தேதி பிறந்தவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா. இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜு. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், வெளியில் தெரியாத ஒரு கிராமமாக இருந்தது புட்டபர்த்தி. ஆனால், தற்போது இக்கிராமத்தில் அமைந்துள்ள சத்ய சாய்பாபாவின் 'பிரசாந்தி நிலையம்' ஆசிரமத்தால், புட்டபர்த்தி என்ற பெயர் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பல்வேறு நாடுகள், மாநிலங்கள், இனம், மதம், கலாசாரம் ஆகியவற்றை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள், தினந்தோறும் இந்த ஆசிரமத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடந்த 70 ஆண்டு காலத்தில், பல லட்சக்கணக்கான பக்தர்கள், ஆசிரமத்தின் தங்கும் விடுதி அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் 185 நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இந்த ஆசிரமத்திற்கு செல்லும் வழியில், பல்கலைக்கழகம், பள்ளிகள், கல்லூரிகள், இரண்டு பெரிய மருத்துவமனைகள், கோளரங்கம், விமான நிலையம் மற்றும் அருங் காட்சியகம் ஆகியவை அமைந் துள்ளன. அமைதியான சூழ்நிலையில் அமைந்திருக்கும்சத்ய சாய் பாபாவின் 'பிரசாந்தி நிலையம்' ஆசிரமத்தில், பக்தர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன.
சத்ய சாய் பாபாவின் தத்துவங்கள், இனம், மதம் அல்லது இடம் ஆகிய அனைத்தையும் கடந்து நிற்கிறது. தன்னலமற்ற சேவை மூலமான சத்ய சாய் பாபாவின் அன்பினால், உலகளவில் ஆயிரக்கணக் கான பக்தர்கள், சத்ய சாய் அமைப்பில் உறுப்பினர் களாக உள்ளனர். இவரது வாழ்க்கை மற்றும் சிந்தனை ஆகியவை மிகவும் ஆற்றல் வாய்ந்தது. இவரது எல்லை கடந்த அன்பு, சர்வதேச அளவிலான அணுகுமுறை மற்றும் இவர் நிகழ்த்திய பல அதிசயங்கள் ஆகியவை, உண்மையில் இவர் யார்? என்ற கேள்வியை பலரும் எழுப்ப காரணமாகியது.
இதற்கு பகவான் சத்ய சாய் பாபா அளித்த பதில்: நானும் கடவுள் நீங்களும் கடவுள். உங்களுக்கும் எனக்கும் <உள்ள ஒரே வேறுபாடு, நான் அதை உணர்ந்திருக்கிறேன்; நீங்கள் அதை உணரவில்லை என்பது தான். நான் யாருடைய நம்பிக்கையையும் அழிக்க வரவில்லை. அவரவர் நம்பிக்கையில், அவரவர் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு கிறிஸ்துவன் சிறந்த கிறிஸ்துவனாகவும், முஸ்லிம் சிறந்த முஸ்லிமாகவும், இந்து சிறந்த இந்துவாகவும் திகழ முடியும்.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினுள் இருக்கும் ஆன்மாவிலும், கடவுளின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்பதை அவர்களை உணர வைத்து, கடவுளை சென்றடையும் வழியின் மூலம் அவர்களை சகோதரத்துவம் என்ற பிணைப்பின் கீழ், ஒரே குடும்பமாக இணைப்பதே என் குறிக்கோள். அதற்காக நான் வருகை தந்துள்ளேன். உண்மை, நேர்மை, அமைதி, அன்பு மற்றும் அகிம்சை ஆகிய ஐந்தும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கான வழி. கடவுளிடம் அன்பு செ<லுத்துதல், தவறு செய்ய அஞ்சுதல் மற்றும் ஒழுக்க நெறிகள் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். 'எனது வாழ்க்கை எனது செய்தி', தன்னலமற்ற சேவை மூலம் பாவங்களில் இருந்து விடுபெற முடியும். மனிதனுக்கு செய்யும் சேவை; கடவுளுக்கு செய்யும் தொண்டு. இதுவே பகவான் சத்ய சாய் பாபாவின் செய்தி.
உலகின் பல்வேறு நாடுகளிலும், அப்பகுதியில் உள்ள மக்கள் நலனுக்காக, சாய் அமைப்பு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. பொறாமை, லஞ்ச ஊழல், வன்முறை மற்றும் பயங்கரவாதம் போன்றவை பெருகி உள்ள தற்போதைய சூழ்நிலையில், பலரும் பகவான் சத்ய சாய் பாபாவை தங்கள் முன்னுதாரணமாக பார்க்கின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.palanivel - saudiyanbu,இந்தியா
25-டிச-201020:21:17 IST Report Abuse
R.palanivel Jay sree Ram
Rate this:
Share this comment
Cancel
வ சிடரமேன் - hyderabad,இந்தியா
08-ஜூலை-201008:08:54 IST Report Abuse
வ சிடரமேன் ப்ரத்யக்ஷமான கண் கண்ட தெய்வம். மனித வர்க்கத்துக்கு சேவை செய்வோம் சாய் பகவானின் கிருபைக்கு பாத்திரமாவோம்.
Rate this:
Share this comment
Cancel
ஜே - Chennai,இந்தியா
07-ஜூலை-201006:32:26 IST Report Abuse
ஜே "கிறிஸ்துவன் சிறந்த கிறிஸ்துவனாகவும், முஸ்லிம் சிறந்த முஸ்லிமாகவும், இந்து சிறந்த இந்துவாகவும் திகழ வேண்டும் ." இந்த கருத்து இந்த உலகத்திற்கு மிக அவசியம். பலவேறு நாடுகளில், பலவேறு இனத்தவர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருக்கும் இந்நிலையில், எல்லா இனத்தவரையும் சேர்த்து வைக்கும் சாயி பாபாவிற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர் கூறும் நல்ல விடயங்களை ஏற்று நடப்போமாக.
Rate this:
Share this comment
Cancel
chitra - coimbatore,இந்தியா
05-ஜூலை-201020:24:56 IST Report Abuse
chitra சாய் ராம். சுவாமி எங்கும் இருக்கிறார். தூய எண்ணத்தோடு தியானம் செய்தால் சுவாமியின் அருகாமையை உணர முடியும். சுவாமி " whoever u are u are mine. i will not give u up.wherever u are u are near me.u cannot go beyond my reach". so swami s everywhere and swami s in u......... sai ram.
Rate this:
Share this comment
Cancel
Vinayagamoorthy - MarkhamOntarioCanada,கனடா
02-ஜூலை-201007:38:38 IST Report Abuse
Vinayagamoorthy ஓம் சாய் ராம்
Rate this:
Share this comment
Cancel
r.raghunathan - newdelhi,இந்தியா
22-ஜூன்-201012:05:43 IST Report Abuse
 r.raghunathan I am interested to know about Prashant Shanti to participate in social work
Rate this:
Share this comment
Cancel
ARJUN KALAI SATHYASAIRAM - PUDUKKOTTAI,இந்தியா
20-ஜூன்-201012:08:43 IST Report Abuse
 ARJUN KALAI SATHYASAIRAM WE ARE SAI BABA DEVOTEE SO LONG WE PRAY FOR EVERY ONE SAIRAM
Rate this:
Share this comment
Cancel
மாணிக்கம் ROJAS KUMAR - QUTO,ஈக்வடார்
20-ஜூன்-201006:12:50 IST Report Abuse
 மாணிக்கம் ROJAS KUMAR நான் அவரைப்பார்க்க வேண்டும் எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்குமா ? கிடைத்தால் நான் பெரிய பாக்கியசாலி. அது கிடைக்குமா AANDAVANAA
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201006:07:15 IST Report Abuse
 மாணிக்கம் ரோசஸ் kumar nan sathya shay பாபாவை நம்புகின்‌றேன். எனக்கு அவரைப் parka சரியான ஆசை எனக்கு anthe santharppam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை