‛சொந்த ஊருக்கு கூட வர முடியாது': நாஞ்சில் சம்பத்துக்கு எச்.ராஜா எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛சொந்த ஊருக்கு கூட வர முடியாது': நாஞ்சில் சம்பத்துக்கு எச்.ராஜா எச்சரிக்கை

Added : ஆக 31, 2017 | கருத்துகள் (176)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நாஞ்சில் சம்பத்,Nanjil Sampath, எச்.ராஜா,H. Raja, நாகர்கோவில், Nagarcoil, அ.தி.மு.க., AIADMK, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palani, தினகரன், Dinakaran, கட்சி தாவல் தடைச் சட்டம், Party Tabulation Act,

நாகர்கோவில்: ''நாஞ்சில் சம்பத் அவதுாறு பேசுவதை நிறுத்தா விட்டால், அவர் சொந்த ஊருக்கு கூட வரமுடியாத நிலை ஏற்படும்,'' என, பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா கூறினார்.

நாகர்கோவிலில், நேற்று அவர் அளித்த பேட்டி: தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், பிரதமரையும், பா.ஜ., தலைவர்களையும் தரக்குறைவாக பேசி வருகிறார். இதை அவர் நிறுத்த வேண்டும். இப்படியே தொடர்ந்தால், அவர் சொந்த ஊருக்குள் கூட வர முடியாத நிலை ஏற்படும். வைகோவுடன் இருந்த போது, ஜெ.,யை தரக்குறைவாக பேசியவர் இவர்.

அ.தி.மு.க., இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், தினகரனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இதனால், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என கோரியுள்ளனர். அரசின் மீது நம்பிக்கை இல்லை என்றால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியும். முதல்வரை மாற்றுவது என்பது, கட்சியில் எடுக்க வேண்டிய முடிவு. இதை கவர்னரும் தெளிவுபடுத்தி உள்ளார்.

நாஞ்சில் சம்பத்துக்கு ராஜா எச்சரிக்கை

ஒரு கட்சியில், 50 சதவீத உறுப்பினர்கள் வெளியேறினால் தான், அது பிளவாக கருதப்படும். அல்லாத பட்சத்தில், கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (176)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Ashburn,VA,யூ.எஸ்.ஏ
07-செப்-201702:34:48 IST Report Abuse
Vijay எச். ராஜா மீது எந்த குற்றச்சாட்டும் இதுவரையில் இல்லை நாஞ்சில் சம்பத் "துப்பினா துடைச்சிருவேன் " முதல் எல்லா அநாகரீக வார்த்தை பயன்படுத்தி கொண்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு எல்லோரும் வக்காலத்து . வருத்தமாக இருக்கிறது எங்கு தர்மம் இல்லையோ அங்கு அழிவு நிச்சயம் என்று ஏன் தோன்றவில்லை தமிழ்நாட்டை இறைவன் காக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
06-செப்-201700:49:37 IST Report Abuse
rajarajan தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. இவரை நாடு கடத்தினாலும் தப்பில்லை
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
31-ஆக-201721:17:33 IST Report Abuse
Devanatha Jagannathan சொந்த ஊரை பற்றி கவலை படமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X