இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள்

Updated : ஆக 31, 2017 | Added : ஆக 31, 2017 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,

சென்னை: சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வலியுறுத்தி, தி.மு.க., கூட்டணி, எம்.பி.,க்கள், இன்று(ஆக.,31) டில்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளனர்.

கவர்னரை, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து, 'முதல்வர் மீது நம்பிக்கையில்லை' என, கடிதம் அளித்து, நீண்ட நாட்கள் ஆகியும், கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து தி.மு.க., - காங்., - இ.கம்யூ., - மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த, எம்.பி.,க்கள் அனைவரும், ஜனாதிபதியை சந்தித்து முறையிட நேரம் கேட்டிருந்தனர். இதனையடுத்து இன்று(ஆக.,31) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்று ஜனாதிபதியை தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள் சந்திக்கும்பட்சத்தில் தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான பிரச்னைகள் குறித்து, ஜனாதிபதியிடம், முறையிடுவர் எனத் தெரிகிறது.



ஜனாதிபதியைச்சந்திக்கும் தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்கள்

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
31-ஆக-201713:22:07 IST Report Abuse
Aarkay எதற்கு இந்த desperation என புரியவில்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாலே, தானாகவே கவிழ்ந்து விடப்போகிறது இந்த அரசு. இவர்களை இன்னும் ஆளவிட்டால், இவர்கள் அடிக்கும் கூத்து, திமுகவுக்கு சாதகமாகவே இருக்க போகிறது. திமுகவின் இந்த அவசரம் கொஞ்சம் ஓவராகவே படுகிறது. இவர்களுக்கு மட்டும் என்ன மக்கள் மேல் அக்கறையா? அல்லது, தமிழகத்தை முதல் மாநிலமாக்க ஆசையா? எல்லாம் அரியணை மேல் உள்ள ஆசைதானே ஆட்சிக்கவிழ்ப்புக்கு இவர்கள் அலைவது, கொஞ்சம் அசிங்கமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
31-ஆக-201713:17:37 IST Report Abuse
Nancy கருணாநிதி மவனும் மவளும் மற்றும் மாறன் - என்று அழியும் இந்த குடும்ப அரசியல் , குடியரசு தேர்தல்ல இவனுவ அவருக்கு ஓட்டு போடல இப்போ எந்த மொகத்தை வச்சிட்டு போய் பிச்சை கேட்கிறார்கள் - வேண்டாம் வேண்டாம் குடும்ப அரசியல் வேண்டாம் , வேண்டாம் வேண்டாம் குடும்ப அரசியல் வேண்டாம் ,வேண்டாம் வேண்டாம் குடும்ப அரசியல் வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
31-ஆக-201712:54:06 IST Report Abuse
rajan அங்கே சிட்டிசனுக்கு கவர்னர் பூமரங்கா திருப்பி விட்டார். இங்கே சுடலைக்கு ஜனாதிபதி கையால இருட்டு கடை அல்வா டபுள் ஜீ யா கொடுப்பாரோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X