சசிகலா குறித்த ஜெயலலிதா பேச்சு சிடி வெளியீடு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலா குறித்த ஜெ., பேச்சு சிடி வெளியீடு

Updated : ஆக 31, 2017 | Added : ஆக 31, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எடப்பாடி பழனிசாமி, Edappadi Palaniasamy,ஜெயலலிதா,Jayalalitha, சசிகலா, Sasikala, உதயகுமார்,Uthayakumar,  தினகரன்,Dinakaran,  சென்னை, Chennai, அமைச்சர் உதயகுமார், Minister Uthayakumar, அதிமுக, ADMK,

சென்னை: அமைச்சர் உதயகுமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சசிகலா குறித்து ஜெயலலிதா, அதிமுக கூட்டத்தில் பேசிய இரண்டு சிடிக்களை வெளியிட்டார்.


எச்சரிக்கை:

அதில் சிடி ஒன்றில், ஜெயலலிதா பேசியுள்ளதாவது, கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது. சிலர் விடப்படியாக அழைத்து நாங்கள் மீண்டும் வருவோம். வந்தால் பழி வாங்குவோம் என்றும் மிரட்டி வருகின்றனர். இது போன்றவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. துரோகம் செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.மற்றொரு சிடியில் பேசியுள்ளதாவது: சோதனை காலகட்டத்தில் கட்சி தலைமைக்கும் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. கடந்த 1996 தேர்தலில் தோல்விக்கு பின்னர் கட்சியை உடைக்க சில துரோகிகள் முயன்றனர். தொண்டர் வீட்டிற்கு சென்று கட்சி கட்டுபாட்டை காப்பாற்ற வேணடும். உறுதுணையாக இருக்க வேண்டும் என வீடு வீடாக சென்று எடப்பாடி வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


விமர்சனம்:

இதன் பின்னர் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு தீவிர விசுவாசமாக இருந்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கட்சியை சிலரின் சுயநலத்திற்கு பழி கொடுக்க முடியாது. கட்சி ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் குடும்பத்தின் நிலை, தெரியவந்துள்ளது. அவரின் குடும்பத்திற்கு ஜெயலலிதா அளத்த நிலை குறித்து அனைவருக்கும் தெரியும். இல்லாத ஒன்றை சொல்லி தொண்டர்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்துகின்றனர். 40 ஆண்டுகள் உழைத்தவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பதை ஏற்க முடியாது. அதிமுக வளர்ச்சிக்கு, ஜெயலலிதாவின் கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்ட ஜெயா டிவியில் ஜெயலலிதா அரசை விமர்சிக்கன்றனர். தனி நபரை முன்னிலைபடுத்த முயற்சி நடக்கிறது. தேவையில்லாத குழப்பம் ஏற்படுத்துபவர்கள் அமைதி காக்க வேண்டும். குழப்பம் ஏற்படுத்துபவர்களை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஜெ., அரசு நீடிக்க வேண்டும் எனு தொண்டர்கள் விரும்புகின்றனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டால், விமர்சனம் செய்வது சகஜம். ஜெ., அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஒன்றாக சேர்ந்துள்ளோம். ஜெ., மறைந்த அதிர்ச்சியில் இருந்த போது கட்சி, ஆட்சியை காப்பாற்ற சசிகலாவை ஆதரிக்க வேண்டியாகிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.சசிகலா குறித்த ஜெ., பேச்சு சிடி வெளியீடு

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kc.ravindran - bangalore,இந்தியா
31-ஆக-201718:16:04 IST Report Abuse
kc.ravindran ஜூலியஸ் சீசரை கொலை செய்த அவரது அமைச்சர்கள் செய்த சதி உலகத்திற்கே தெரியுமே. அதே கதைதான் இங்கேயும் நடந்திருக்கிறது. அன்று கொல்லும் அரசின் ஆணை மழுங்கிவிட்டது. நின்று கொல்லும் தெய்வம் எங்கே மறைந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
31-ஆக-201717:51:55 IST Report Abuse
Veeraiyah (இந்திய பிரதமராக ஆசை) ஆமாம், கோமளவல்லியின் 50 ஆயிரம் கோடி சொத்துக்களும் நேர்மையான வழியில் சம்பாதித்தது.. இறைவன் தண்டித்தது சரியே..
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
31-ஆக-201717:49:48 IST Report Abuse
KMP Her speech is excellent in this video as political stand but again she accepted sasi her close aide with a letter and she did not walk, and became ill slowly over the years 2012-2016 as one could remember that all her govt schemes launched, functions only through video conference mode mostly except one or two. The TN-2016 assembly election campaign also the best example for her health. she suffered lot lot and died suddenly without announcing next one to head the party. myself inspired by her schemes and governance except her politics and planned to meet her in person to take a photo but missed her really. still we have a lot of rumours and misbeliefs over her life end.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X