ரூ.8.6 லட்சம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு பறிமுதல்| Dinamalar

ரூ.8.6 லட்சம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு பறிமுதல்

Added : செப் 01, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பெங்களூரு: மும்பை, பெங்களூருவில் நடந்த சோதனையில் ரூ.8.58 லட்சம் மதிப்புள்ள ரூ.2ஆயிரம் கள்ள நோட்டுகளை உளவுத்துறை அமைப்புகள் பறிமுதல் செய்தன. இந்த நோட்டுகள் எளிதில் அடையாளம் காண முடியாத அளவுக்கு அசல் நோட்டுகள் போன்று அச்சிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: அசல் ரூ.2 ஆயிரம் நோட்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டில் உள்ளன. இந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால் எளிதில் அடையாளம் காண முடியாது. இவை கலர் பிரிண்டர்கள் மூலம் தயாரிக்ப்படவில்லை. இது தொடர்பாக பெங்களூரு அருகேயுள்ள சித்தலஹட்டாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இன்னும் சில கள்ள நோட்டு கும்பல் பிடிபடும். கைதானவர்களுக்கு, மும்பையில் உள்ள கள்ள நோட்டு கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு அதிகாரி கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள், பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு நேபாளம், வங்கதேசம் வாயிலாக இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த நோட்டுகளை ஆராய்ந்த போது, அசல் நோட்டுகளை விட, சில குறைகள் உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி கடந்த ஜூலை வரை ரூ.2.2 கோடி மதிப்புக்கு ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனன. இவற்றில் பெரும்பாலானவை மிசோரம் மற்றும் கர்நாடகாவில் பறிமுதல் செய்யப்பட்டவை.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X