' டவுட்' பட்டம் - காமெடி செந்தில் நெகிழ்ச்சி| Dinamalar

' டவுட்' பட்டம் - காமெடி செந்தில் நெகிழ்ச்சி

Added : செப் 03, 2017
Advertisement
' டவுட்' பட்டம் - காமெடி செந்தில் நெகிழ்ச்சி

பற்கள் இல்லாத குழந்தைகள் முதல் பற்கள் போன முதியவர்கள் வரை, இவரது 'டவுட்'களை கேட்டால் சிரித்து விடுவார்கள். காட்டில் புலியாக இருப்போர் பலரும் வீட்டில் எலியாகத் தான் இருக்கிறார்கள் என்பதை தனது காமெடியால் வெட்ட வெளிச்சமாக காட்டி வரும் 'டவுட்' செந்தில், தற்போது சினிமாவிலும் தனது காமெடி சரவெடியால் சாதித்து வருகிறார்.'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் அளித்த பேட்டி:
* உங்களை பற்றி...முழுப்பெயர் செந்தில்குமார். தனியார் 'டிவி' யில் 'டாடி எனக்கொரு டவுட்' நிகழ்ச்சியில் நடித்த பின், தினமலர் 'டவுட் செந்தில்' என்ற பட்டத்தை கொடுத்தது. அதுவே காலப்போக்கில் நிலைத்து விட்டது. சொந்த ஊர் திருச்சி மாவட்டம் முசிறி. எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளேன். * பள்ளி, கல்லுாரியில் ஆசிரியர்களிடம் டவுட் கேட்டுள்ளீர்களா?அதிகமாக கேட்பேன். அதனால் ஆசிரியர்கள் என்னை பேசவே அனுமதிக்க மாட்டார்கள். ஆசிரியர்களுக்கு பயந்தாலும், அவர்களை போலவே 'இமிடேட்' செய்து அனைவரையும் சிரிக்க வைப்பேன். என் நண்பர்கள் அனைவரும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பதால், சிரிப்பிற்கு பஞ்சம் இருக்காது.
* நிஜவாழ்விலும் நகைச்சுவையாகத்தான் பேசுவீர்களா?நான் சீரியசான பையன், சென்டிமென்டாக இருப்பேன். 'டிவி' நிகழ்ச்சி மற்றும் சினிமாவிற்காக காமெடிக்கு என்னை தயார் படுத்தி கொண்டேன்.
* 'டிவி',- சினிமா வேறுபாடு?காட்சியை மெருகேற்ற சினிமாவில் அதிக நேரம் எடுத்து கொள்ளலாம். ஆனால் அதற்கு 'டிவி' நிகழ்ச்சிகளில் நேரமிருக்காது. உடனடியாக யோசித்து பேச வேண்டும். அதிக நேரம் எடுத்து கொண்டால் தான், புதிய புதிய காமெடிகளை உருவாக்கி மக்களை சிரிக்க வைக்க முடியும்.
* வடிவேலு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்களின் இடத்தை பிடிப்பீர்களா...அவர்கள் இடம் அவர்களுக்கானது. எனக்கென்று காமெடியில் ஓர் இடம் உருவாக்குவேன். அதற்காக குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களின் அரட்டை, இணையதளம், புத்தகங்கள் என அனைத்தையும் படித்து என்னை தயார்படுத்தி வருகிறேன்.
* 'டிவி'யில் காமெடி நிகழ்ச்சி தயாரிக்கும் நீங்கள், முழுநீள காமெடி படம் எடுப்பீர்களா?நல்ல காமெடி படம் இயக்க வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது.'காமெடி'களை அடுத்த 'லெவலுக்கு' கொண்டு செல்லவேண்டும்.
* நீங்கள் ஹீரோ ஆகலாமே...நிறைய வாய்ப்புகள் வருகிறது. தவிர்த்து கொண்டு வருகிறேன். எனக்கு நல்ல காமெடி நடிகராக இருக்க வேண்டும் என்பதே ஆசை.
*அடுத்த படங்கள் பற்றி....எனது முதல்படமான 'வெண்ணிலா வீடு' நான்கு ஆண்டிற்கு முன் வெளியானது. காந்திராமன் என்ற படம் ரிலீசாக உள்ளது. 4 புதிய படங்களில் காமெடியனாக நடித்து கொண்டிருக்கிறேன்.இவரை பாராட்ட nskadithya@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X