இன்ஜி., இடம் கிடைத்தும் பரிதவிக்கும் மாணவி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., இடம் கிடைத்தும் பரிதவிக்கும் மாணவி

Added : செப் 05, 2017 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆத்துார்,Authur, திருச்சி,Trichy, அண்ணா பல்கலை, Anna University, பொறியியல், Engineering,ஏழை மாணவி , Poor family student, கவுன்சிலிங்,counseling,  பிரியதர்ஷினி,Priyadarshini,திருச்சி அண்ணா பல்கலை, Trichy, Anna University,பி.டெக்.,B.Tech,   பயோ டெக்னாலஜி,Biotechnology, இன்ஜினியரிங் , பணம், Money, மாணவி, Student, சீனிவாசன், Srinivasan,

ஆத்துார்: திருச்சி அண்ணா பல்கலையில், பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைத்தும், பணமின்றி, ஏழை மாணவி தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 52; கூலித்தொழிலாளி. இவரது மகள் பிரியதர்ஷினி, 17, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,108 மதிப்பெண், பொறியியல், 'கட் - ஆப்' 196.25 பெற்றார். கவுன்சிலிங்கில், திருச்சி அண்ணா பல்கலையில், பி.டெக்., - பயோ டெக்னாலஜி படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், போதிய வசதியில்லாததால், கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் திணறி வருகிறார்.
மாணவியின் தந்தை சீனிவாசன் கூறியதாவது: கூலி வேலைக்கு சென்று வருகிறேன். மூன்று குழந்தைகளையும், அரசுப் பள்ளியில் படிக்க வைத்துள்ளேன். இரண்டாவது மகள் பிரியதர்ஷினிக்கு, திருச்சி அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைத்துள்ளது.

ஒரு பருவத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய், விடுதிக்கு, 13 ஆயிரம் ரூபாய், உணவுக்கு மாதம், 2,000 ரூபாய் உட்பட, ஆண்டுக்கு, 55 ஆயிரம் ரூபாய் செலவாகும். நான்கு ஆண்டுகள் படிக்க வைக்க, பொருளாதார வசதி இல்லை. பணம் இல்லாததால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை கேட்டு வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

உதவ விரும்புவோர், 94425 11108.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-செப்-201701:24:37 IST Report Abuse
ganapathyphysio engineering waste...agri padikalam
Rate this:
Share this comment
Cancel
ramesh - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-செப்-201701:02:29 IST Report Abuse
ramesh நான் கண்டிப்பா 5000 அனுப்புறேன்
Rate this:
Share this comment
Cancel
NRajasekar - chennai ,இந்தியா
05-செப்-201717:30:15 IST Report Abuse
NRajasekar இந்த எளிய மாணவிக்கு உதவினால், அரசியல் பண்ணமுடியுமா எங்களுக்கு எங்கு ஆதாயம் உள்ளதோ அங்குதான் பொங்குவோம்
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
05-செப்-201717:14:48 IST Report Abuse
MANI DELHI இந்த குடும்பத்திற்கு அறக்கட்டளைகள் பெயர்களை கை காட்டுவதை விட நம்மால் முடிந்ததை அனுப்பலாம். இன்று அவரின் தந்தையிடம் பேசி அந்த பெண்ணின் வங்கிக்கணக்கிற்கு ருபாய் ஐயாயிரம் அனுப்பினேன். மிகவும் மன நிறைவாக உள்ளது. முடிந்தால் வெளி நாட்டு நண்பர்கள் தன்னால் இயன்றதை கொடுக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. நாலு பேருக்கு உதவி செய்யும்போது அதுவும் கல்விக்காக கொடுப்பது பெரிய அளவில் நம்மை வாழ வைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Veera P - Thoothukudi,இந்தியா
05-செப்-201717:07:51 IST Report Abuse
Veera P உடனே vidhyalakshmi வெப் சைட் மூலம் கல்வி கடன் விண்ணப்பம் செய்து படிக்க முயற்சிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
05-செப்-201715:28:23 IST Report Abuse
Swaminathan Chandramouli ஆத்தூர் மாணவி பிரியதர்ஷினி .12 ம் வகுப்பில் பொதுத்தேர்வில் 1108 மதிப்பெண்கள் .பொறியியல் cutoff மதிப்பெண்கள் 196 . 25 . திருச்சி அண்ணா பல்கலை கழகத்தில் இடம் கிடைத்தது ,. ஆனால் கல்வி கட்டணம் கட்ட பணம் இல்லை . தந்தை கூலி தொழிலாளி . அனிதா இறந்ததற்கு கண்ணீர் வடித்தனர் . சென்று பாலும் ஊற்றிவிட்டு வந்தனர் ,நடிகர்கள் ,அரசியல் வியாதிகள் மாணவர்கள் . லெட்டர் பேடு கட்சிகள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுதனர் 'தற்போது இந்த ஏழை மாணவி ப்ரியதர்ஷினிக்கு யார் உதவ போகிறார்கள் . கோடி கோடியாக சம்பாதிக்கும் நடிகர்களா அரசியல் வியாதிகளா , பணக்கார முதலைகளா . பல்கலை கழகத்தில் பணம் கட்ட வில்லை என்றால் கிடைத்த இடம் அம்பேல் . பொது மக்களே யோசனை செய்யுங்கள்
Rate this:
Share this comment
Cancel
jayapal - MUSCAT,ஓமன்
05-செப்-201714:14:30 IST Report Abuse
jayapal Dear All Kindly help this poor girl for education amount what ever each one can contribute.
Rate this:
Share this comment
Cancel
jayapal - MUSCAT,ஓமன்
05-செப்-201714:11:25 IST Report Abuse
jayapal Kindly send your bank account detail to transfer some amount -jayapal
Rate this:
Share this comment
Deevee - Chennai,இந்தியா
05-செப்-201719:47:45 IST Report Abuse
DeeveeI called the number twice and it says the line is busy. If possible Dinamalar should try to get the bank account of the girl and publish it so that people like me can help in a small way. If 100 people send a token amount of Rs.2000 each then she can finish her studies....
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
06-செப்-201715:01:45 IST Report Abuse
MANI DELHIபொது தளத்தில் ஒருவருடைய வங்கி தகவல்களை தருவது சிறந்ததா என்று தெரிய வில்லை. நான் நேரடியாக மாணவியின் தந்தைக்கு பேசி தகல்வகளை பெற்று பணம் பரிமாற்றம் செய்தேன்....
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
05-செப்-201713:03:27 IST Report Abuse
MANI DELHI இங்கு விமர்சனம் செய்யும் நண்பர்கள் யாராவது அந்த பெண்ணின் வங்கிகணக்கு விவரங்களை போடுங்கள். நான் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன். "ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன பிள்ளை தானாக வளரும்" என்ற வாசகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்ற முறையில் என்னால் முடிந்தவரை தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறேன். இப்படியும் ஒரு உதவி செய்வ வாய்ப்பு கிட்டினால் எனக்கு மிக்க மனநிறைவு. எனக்கு இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீது பெரிய அபிப்ராயங்கள் இல்லை. அதனால் நேரடியாக கொடுப்பது தான் சரி என்று நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
05-செப்-201712:29:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளைக்கு தொடர்பு கொள்ளுங்கள் , அவர்கள் உதவுவார்கள், நான்காண்டு படிப்புகளுக்கும் சேர்த்து, அதனுடன் அரசாங்கம் கொடுக்கும் உதவி தொகை கிடைப்பதற்கும் உதவுவார்கள். சுடாலினை நம்பி போகவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை