கறுப்பு பணம் சிக்கியதா? : ரிசர்வ் வங்கிக்கு தெரியாதாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கறுப்பு பணம் சிக்கியதா? : ரிசர்வ் வங்கிக்கு தெரியாதாம்

Added : செப் 05, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கறுப்பு பணம், சிக்கியது, ரிசர்வ் வங்கி

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், கறுப்புப் பணம் எவ்வளவு சிக்கியது, எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையானது, என்ற பார்லி குழுவின் கேள்விகளுக்கு, 'தெரியாது' என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, கடந்தாண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த அறிவிப்புக்குப் பின், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்த தகவல்களை தராமல், ரிசர்வ் வங்கி தாமதம் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், 15.28 லட்சம் கோடி ரூபாய், பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து, பார்லிமென்ட் நிதி நிலைக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்தக் குழு கூட்டம், நேற்று நடந்தது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து பிடிபட்ட கறுப்புப் பணம் எவ்வளவு? வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டு, வெள்ளையாக்கப்பட்ட கறுப்புப் பணம் எவ்வளவு போன்ற கேள்விகளுக்கு, 'தெரியாது' என்று, ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. டிபாசிட்கள் குறித்து தொடர்ந்து கணக்கெடுப்புகள், ஆய்வுகள் நடந்து வருவதால், இந்தத் தகவல்களை அளிக்க முடியாது என, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
05-செப்-201708:38:35 IST Report Abuse
K.Sugavanam பேஷ் பேஷ்,ரொம்ப நன்னா இருக்கே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X