ஒரு வாரம் பிச்சை எடுக்கணும்! : பாட்டிக்கு உத்தரவிட்ட பஞ்சாயத்து| Dinamalar

ஒரு வாரம் பிச்சை எடுக்கணும்! : பாட்டிக்கு உத்தரவிட்ட பஞ்சாயத்து

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பிச்சை,Begging, பாட்டி,grandmother, பஞ்சாயத்து,Panchayat, பா.ஜ., BJP,மத்தியப் பிரதேசம்,  Madhya Pradesh, கன்றுக்குட்டி,Calf, கங்கை நதி, Ganga River,சிவ்ராஜ் சிங் சவுகான், Shriraj Singh Chauhan, கமலா தேவி,Kamala Devi, பசு,cow, விசாரணை, Investigation, போலீஸ், Police, அனில் சிங் குஷ்வாஹா,  Anil Singh Kushwaha,கலெக்டர் இளையராஜா, Collector Ilayaraja,
Share this video :
பெண்ணை பிச்சையெடுக்க உத்தரவிட்ட கிராம பஞ்சாயத்து

பிண்ட்: ம.பி., மாநிலம், பிண்ட் மாவட்டத்தில், கன்றுக்குட்டி இறப்பதற்கு காரணமான, 60 வயது பாட்டி, ஒரு வாரம் பிச்சை எடுத்து, கங்கை நதியில் குளித்து, பாவத்தை கழுவும்படி, கிராம பஞ்சாயத்து உத்தரவிட்ட, அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ம.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், பிண்ட் மாவட்டத்தை சேர்ந்தவர், கமலா தேவி, 60. கணவரை இழந்த இவர், தன் வீட்டில்,
பசுக்களை வளர்த்து வருகிறார்.

பரபரப்பு : சமீபத்தில், ஒரு பசுவிடம், பால் குடிக்க சென்ற கன்றுக்குட்டியை, அதை கட்டியிருந்த கயிறால், கமலாதேவி இழுத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, கயிறு இறுகி, கன்றுக்குட்டி இறந்து விட்டது. கமலாதேவி சார்ந்த, பிற்பட்ட வகுப்பு தலைவர்கள், பஞ்சாயத்தை கூட்டி விசாரணை நடத்தினர். கன்றுக்குட்டியை கொன்ற பாவத்தை போக்க, கிராமத்துக்கு வெளியே, ஒரு வாரம் பிச்சை எடுக்க வேண்டும் என்றும், கங்கை நதியில் குளித்து பாவத்தை கரைக்க வேண்டும் என்றும், பஞ்சாயத்து தலைவர்கள் உத்தரவிட்டனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார் வரவில்லை : இதுகுறித்து, போலீஸ் கண்காணிப்பாளர், அனில் சிங் குஷ்வாஹா கூறுகையில், ''கமலா தேவி, பிச்சை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது தொடர்பாக, புகார் வரவில்லை. ஊடகங்கள் மூலம் அதை தெரிந்து கொண்டேன்,'' என்றார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக, மாவட்ட கலெக்டர், இளையராஜா தெரிவித்தார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4+ 58)
 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
06-செப்-201714:48:27 IST Report Abuse
PrasannaKrishnan Just arrest those ....
Rate this:
Share this comment
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
06-செப்-201713:06:25 IST Report Abuse
Vmmoorthy Moorthy தமிழ்நாட்டை விட எருமை மாடுகள்தான் ம பி இல் அதிகம். அவர்கள் புத்தி அப்படித்தான்.
Rate this:
Share this comment
Cancel
06-செப்-201708:56:32 IST Report Abuse
அப்பாவி மாவட்ட கலெக்டர் இளையராசா... சீக்கிரம் அவிங்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை பத்தி சொல்லிக்குடுங்க ராசா.... அவிங்க நம்மள விடக் கேவலமா இருப்பாங்கன்னு தெரியுது.
Rate this:
Share this comment
Cancel
ShaHameed -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-201708:07:10 IST Report Abuse
ShaHameed மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்தை நாட்டுக்கு கொடுத்தால் உண்மையிலே நாடு நாடு தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.