67 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் தினமலர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

67 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் தினமலர்

Updated : செப் 07, 2017 | Added : செப் 06, 2017 | கருத்துகள் (144)
Advertisement

மக்கள் பணியே மகேசன் பணி என்ற குறிக்கோளுடன், நாட்டுப்பற்று, மொழிப்பற்றுடன் கடந்த 66 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்திற்கு சேவை செய்து வரும் உங்கள் தினமலர் இன்று (செப்.,6), 67 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.1951 ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ( இன்றைய கேரள மாநிலத்தின் ஒரு பகுதி) இருந்த நாஞ்சில் நாட்டை ( இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தின் போர் வாளாக, சிங்கத்தை அதன் குகையிலேய சந்திக்கும் வகையில், திருவனந்தபுரத்தில் துவக்கப்பட்டதுதான் தினமலர் நாளிதழ். இணைப்பு போராட்டத்தில் வெற்றி பெற்ற பின், 1957 ல் திருநெல்வேலிக்கு மாறிய தினமலர், அதற்குப் பிறகு, திருச்சி, சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, புதுச்சேரி, சேலம் நாகர்கோவில், வேலூர் என தமிழகம் முழுவதும் பரவி, கால் பதித்து, தமிழ்ச் சமுதாயத்திற்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது.


தினமலர் நாளிதழும் வாசகர் உறவும்தினமலர் நாளிதழுக்கும் வாசகர்களுக்கும் இடையே என்றும் பிரிக்க முடியாத நல்லுறவு நிலவுகிறது. இது தமிழகத்தில் எந்த பத்திரிகைக்கும் கிடைக்காத அரிய கவுரவம். வாசகர் தேவை அறிந்து, அவர்கள் கவலை அறிந்து செய்திகள் வெளியிடுவதால் மட்டும் ஏற்பட்ட உறவு அல்ல. மகிழ்ச்சியிலும், சோகத்திலும் வாசகர் குடும்பங்களில் ஒரு அங்கமாய் திகழ்கிறது தினமலர். அவர்கள் நினைப்பது தினமலரின் செய்தியாகிறது. அவர்கள் சிந்தனைக்கும், எதிர்ப்பார்ப்பிற்கும் ஏற்ப தினமலர் செயல்படுகிறது.
கும்பகோணத்தில் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி இறந்த போதும், சுனாமி இயற்கை சீரழிவால் பலர் மாண்டபோதும் வாசகர்களோடு தினமலரும் கண்ணீர் சிந்தியது. இதற்காக பல இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் பொது இடத்தில் கூடி ஒற்றுமையுணர்வை வலியுறுத்தினர்.
வாசகர்களிடம் நிதி வசூலித்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு அனுப்பியது தினமலர். அதே போன்று சுனாமியால் உடமைகளை இழந்தவர்களுக்காக நிவாரண நிதி வசூலித்து அரசிடம் வழங்கியது. இவையெல்லாம் தினமலர் வேண்டுகோளை ஏற்று உடனடி உதவிக்கரம் நீட்டும் வாசகர்களால் சாத்தியமாகிறது.

இந்திய சுதந்திர பொன் விழாவின் போதும், வைர விழாவின் போதும் ஏராளமான வாசகர்கள் கலந்து கொண்ட ஒருமைப்பாட்டு நிகழ்ச்சிகளை தினமலர் நடத்தியது. ஜாதி, இன, மத வேறுபாடுகளை களைந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, பொதுமக்கள் ஒற்றுமையுணர்வுடன் ஓரிடத்தில் நின்று சபதமேற்றனர்.

வாட் வரி முறையை அரசு அமல்படுத்தியதும் வணிகர்களுக்கு வழிகாட்ட விளக்க நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது தினமலர். பெருநகர மக்கள் மட்டுமல்ல மற்றவர்களும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஏதுவாக ஷேர் விளக்க நிகழ்ச்சிகளை தினமலர் நடத்தியது. பண்டிகை காலங்களில் வாசகர்களின் உற்சாகத்தில் தன்னையும் இணைத்து கொள்கிறது தினமலர். கோலப்போட்டி, கொலுப்போட்டி, கிறிஸ்துமஸ் குடில் போட்டி நடத்தி வாசகர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியத்தை நன்கு உணர்ந்த நிறுவனர் டி.வி.ஆர்., அவர்களின் லட்சியத்தை உயிர் துடிப்போடு தினமலர் பின்பற்றி வருகிறது. இதற்கு உதாரணம் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக தினமலர் நடத்தும் "ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சி. தினமலர் மீதுள்ள நம்பிக்கையில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் இதில் கலந்து கொள்கின்றனர். இதே போன்று பிளஸ் 2 வென்ற மாணவர்கள் உயர்கல்வி பெற வழிகாட்டி நிகழ்ச்சிகளை தினமலர் நடத்துகிறது. "அறிவு வளர்க்கும் நாளிதழ்' என்று வாசகர்களால் தினமலர் போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தரும் போது தினமலர் அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இப்படி "வாசகர் சமூகத்தின்" அத்தனை தேவைகளையும் உணர்ந்து செயலாற்றுகிறது தினமலர். இதனால் இன்று தமிழ் குடும்பங்கள் இருகரம் நீட்டி நெஞ்சார நேசித்து வாசிக்கும் நாளிதழாகி விட்டது தினமலர். தாய் மண்ணின் உணர்வாய், தமிழ் மண்ணின் பிரதிபலிப்பாய் இருக்கும் தினமலருக்கும் வாசகர்களுக்கும் உள்ள உறவு என்றும் தொடரும்.

டி.வி.ஆரின் தாரக மந்திரமான "மக்கள் நலனே உயிர் மூச்சு' என்ற லட்சியப்பாதையில் "தினமலர்' நாளிதழின் மக்கள் பணி தொடர்கிறது.

"செய்தது குறைவு; அதை நினைத்து பெருமைப்பட கூடாது. செய்ய வேண்டியது அதிகம்; அதையும் உடனே செய்க'' - -டி.வி.ஆர்., முழங்கும் மந்திரச் சொல்

Advertisement
வாசகர் கருத்து (144)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-செப்-201705:46:49 IST Report Abuse
Rajendra Bupathi நெஞ்சார்ந்த வாழ்த்துகள்? தமிழகத்தில் இருக்கும் ஒரே நடு நிலை நாளீதழ் என்ற பெருமை பல்லாண்டு தொடர வாழ்த்துகிறேன்?
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
12-செப்-201705:37:30 IST Report Abuse
Ray வாழ்த்துக்கள் பல்லாண்டு வளர்க்க
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
12-செப்-201705:20:09 IST Report Abuse
ராமசாமி ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையாக இருந்தது. ப.சிதம்பரம் , புலிகளை பத்தி சொல்றது பிரதானமான செய்தியாக இருக்கும். காலம் ரொம்ப வேகமாக ஓடுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X