'நீட்' போராட்ட பின்னணியில் கல்லூரி நிர்வாகம்? யு.ஜி.சி. உத்தரவால் விசாரணை துவக்கம் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'நீட்' போராட்ட பின்னணியில் கல்லூரி நிர்வாகம்? ;
யு.ஜி.சி. உத்தரவால் விசாரணை துவக்கம்

'நீட்' தேர்வுக்கு எதிராக, தனியார் கல்லுாரி மாணவர் போராட்டங்களின் பின்னணியில், கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனரா என, விசாரணை துவங்கி உள்ளது.
'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாததால், பிளஸ் ௨ முடித்த மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.

நீட்,Neet, கல்லூரி, College,யு.ஜி.சி, UGC  விசாரணை ,Inquiry, நீட் தேர்வு, Neet exam, தனியார் கல்லுாரி மாணவர்கள் போராட்டம், Private College Student Strike, மாணவி அனிதா, Student Anitha,தற்கொலை,Suicide, தமிழகம், Tamil Nadu, ஜல்லிக்கட்டு, Jallikattu, மத்திய அரசு,Central Government, உயர்கல்வித் துறை, Higher Education Department, உளவுத்துறை, Intelligence, அனிதா, Anitha, ள்

போராட்டங்கள் :


அதனால், தமிழகம் முழுவதும் மீண்டும், 'நீட்' தேர்வை எதிர்த்து, சில மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதில், இதுவரை இல்லாத அளவுக்கு, மாநிலத்தில்

உள்ள சில தனியார் கல்லுாரிகள், குறிப்பாக, மருத்துவத்துக்கு தொடர்பில்லாத கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல், இந்த போராட்டங்களிலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிடுகின்றனர். இது குறித்து, கலை, அறிவியல் கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,க்கு, சிலர் புகார் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

மாநில தலைநகரான சென்னையில் உள்ள புதுக்கல்லுாரி மற்றும் லயோலா போன்ற தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து, உயர்கல்வித் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். யு.ஜி.சி., அறிவுறுத்தல்படி, இந்த விசாரணை துவங்கி
உள்ளது.

காரணம் என்ன? :


அரசு கல்லுாரிகளில், போராட்டங்கள் நடத்தும் அமைப்புகள் எவை; தனியார் கல்லுாரிகளில் போராட்டங்கள் நடக்க காரணம் என்ன; கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவர்களை துாண்டி விட்டனரா; கல்லுாரிகளில் முறைப்படி மாணவர் பேரவை

Advertisement

தேர்தல் நடத்தப்பட்டதா;போராட்ட பின்னணியில் ஆசிரியர்கள், ஜாதி, மத ரீதியான அமைப்புகள் உள்ளனவா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

உயர்கல்வித் துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவுத்துறை போலீசாரும் இணைந்து, விசாரணையை துவக்கி உள்ளனர். போராட்டத்தில், கல்லுாரி நிர்வாகத்தினரின் தொடர்பு இருந்தால், யு.ஜி.சி., மூலம், கல்லுாரிகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என, தெரிகிறது.


Advertisement

வாசகர் கருத்து (47)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
ARUN KUMAR - TRICHY,இந்தியா
07-செப்-201723:29:36 IST Report Abuse

ARUN KUMARஎல்லாருக்கும் தெரியும் அனிதாவின் மரணம் பல சந்தேகங்களுக்கு உட்பட்டது என்று.. அரசியல், தனியார் தொலைக்காட்சி, தனியார் கல்லூரிகள் என்று பலருக்கும் இதில் தொடர்பு உண்டு... ஒரு அனிதவிற்காக போராடும் உள்ளங்களே நீட் தேர்வில் வெற்றி பெற்ற 33000 தமிழ் மாணவர்கள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா???? அரசியல் கட்சிகளின் தூண்டுதல், மாணவர் இயக்கம் என்ற பெயரில் உள்ள ரவுடிகளின் தூண்டுதல், சிறுபான்மையினர் என்ற பெயரில் உள்ள மத வெறியர்களின் தூண்டுதல் போன்றவற்றினால் உங்கள் எதிர்காலத்தை வீணடித்து விடாதீர்கள்.. உங்களை தூண்டி மேலே சொல்லப்பட்ட பலரும் குளிர்காய்கின்றனர்.. பிரியாணி, குவாட்டர் கலாச்சாரத்திற்கு நீயும் பலியாகத்தே.. முழித்துக்கொள், விழித்துக்கொள்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
07-செப்-201718:46:45 IST Report Abuse

Agni Shivaஇதற்கு எந்த சந்தேகமும் வேண்டாம். கிறிஸ்தவ இயக்கங்கள், மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் மூலம் பெருமளவு நிதியுதவியும் ஆள் உதவியும் இந்த போராட்டங்களுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு உதவுபவை லெட்டர்பேடுகள், மற்றும் ஒரு சில ஜாதிவெறி அரசியல் அமைப்புகளும், தனி தமிழ்நாடு இயக்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள். இவைகளின் தலைமைகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டிற்கு ஒன்றோ இரண்டோ இலவச சீட்டுகள், மற்றும் போராட்டத்தை நீட்டித்து செல்ல பண உதவி என்று அனைத்தும் அளிக்கப்படுகிறது. பதிலாக இந்த லெட்டர்பேடுகளும், ஜாதிவெறி, கம்யூனிஸ்ட் மற்றும் மூர்க்க பயங்கரவாத அமைப்புகள் போராட்டக்களத்திற்கு ஆட்களை தயார் செய்கின்றன. இது தான் நடந்து கொண்டு இருக்கிறது. கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை. சந்தேகம் வரும் மருத்துவ கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்யுங்கள்..மற்றும் ஜாதியமைப்புகள் ,கிறிஸ்தவ மற்றும் மூர்க்க அமைப்பின் மீது கண்காணிப்பை அதிகரியுங்கள். பணம் வரும் வழியை அடையுங்கள்..போராட்டம் தானாகவே பிசுபிசுக்கும்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
07-செப்-201716:55:26 IST Report Abuse

ganapati sbஅருமை மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டும் தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்க வேண்டும்

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X