ஆதரவற்ற குழந்தைகள் புடைசூழ திருமணம் சோமனூரில் நடந்த நெகிழ்ச்சி வைபவம்| Dinamalar

ஆதரவற்ற குழந்தைகள் புடைசூழ திருமணம் சோமனூரில் நடந்த நெகிழ்ச்சி வைபவம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஆதரவற்ற குழந்தைகள், Unsupported children, திருமணம்,  marriage, சுப்ரமணியன்,Subramanian,  பிரபாவதி, Prabhawati, அரவிந்த், Aravind,விஸ்வநாதன் ,Viswanathan, மணிமேகலை, Manimegalai, சாதனா,Sadhana,  கோவை, Coimbatore, destitute children,

திருப்பூர்:பல லட்சங்களை செலவிட்டு ஆடம்பர திருமணத்தை நடத்துவது 'பேஷன்' ஆகிவிட்ட இக்காலத்தில், ஆதரவற்ற சிறுவர்கள் முன்னிலையில், சோமனுாரில் நடந்த திருமணம், பலரையும் நெகிழ செய்துள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வசிக்கும், ஓய்வு பெற்ற குடிநீர் வாரிய அதிகாரி சுப்ரமணியன். அவரது மனைவி பிரபாவதி. இவர்களின் மூத்த மகன் அரவிந்த். பி.இ., பட்டதாரியான அவர், திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

அரவிந்துக்கும், கோவை ஒண்டிப்புதுாரை சேர்ந்த விஸ்வநாதன் ---- மணிமேகலையின் மகள் சாதனாவுக்கும், சோமனுார் கொங்கு கலையரங்கில், திருமணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆதரவற்ற இல்லத்தில் தங்கியுள்ள சிறுவர்,சிறுமியரை அழைக்க வேண்டும் என்ற எண்ணம் சுப்ரமணியனுக்கு ஏற்பட்டது. இதை, குடும்பத்தினரும் வரவேற்றனர்.

அதன்படி, நல்லகவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் தங்கியுள்ள, 150 குழந்தைகளை, இரண்டு பஸ்களில், சோமனுார் ஈஷா மைய தன்னார்வலர்கள், 20 பேர் அழைத்து வந்தனர். மேடையில் இருந்த மணமக்களுடன் குரூப் போட்டோ எடுத்து, வாழ்த்துப்பாடலை பாடினர். அவர்களுக்கு, அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வு, திருமணத்துக்கு வந்திருந்தோர் மத்தியில், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சுப்ரமணியன் கூறுகையில், ''பலர் என்னை தொடர்பு கொண்டு, மகிழ்ச்சி தெரிவித்ததோடு, தாங்களும் இதை பின்பற்றப்போவதாக கூறினர்,'' என்றார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Grace Leela.A - theni,இந்தியா
15-செப்-201710:33:23 IST Report Abuse
Grace Leela.A உண்மையில் இந்த குழந்தைகளை சந்தோஷப்படுத்துவது நற்செயலே...
Rate this:
Share this comment
Cancel
Karunakaran - Chennai,இந்தியா
09-செப்-201700:43:25 IST Report Abuse
Karunakaran மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
07-செப்-201720:38:55 IST Report Abuse
Rahim மனிதநேயம் இன்னமும் வாழ்ந்து கொண்டிருப்பது உங்களை போன்றவர்களால் தான் அய்யா நீங்க நல்லா இருக்கனும் , நீடுழி வாழனும்.....
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
07-செப்-201718:02:13 IST Report Abuse
M.Guna Sekaran புது மண தம்பதிகளுக்கு நல் வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட நல்ல மனிதர்களை பற்றி அடிக்கடி பேப்பரில் பெயர் வரும் என்று மைக் கிடைத்தால் எதைவேண்டுமாலும் பேசும் பரதேசிகள் இப்போ மட்டும் ஏதுனும் பேச மாட்டான் ,அப்புறம் நாளை கேள்வி கேட்பான் என்று ................ அட நாதாரிகளே ..............
Rate this:
Share this comment
Cancel
V.Murugesan - Coimbatore,இந்தியா
07-செப்-201716:07:49 IST Report Abuse
V.Murugesan வாழ்த்துகள் நல்ல மனம் கொண்டவர்களால் தான் இந்த பூமியில் மழை அவ்வப்பொழுது வருகிறது. நாமும் அவர்களைப் பின்பற்றுவோம்.👍
Rate this:
Share this comment
Cancel
Arasan - Thamizhnadu,இந்தியா
07-செப்-201714:09:02 IST Report Abuse
Arasan நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எண்ணம் போல சிறப்புற்று வாழவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
07-செப்-201713:44:20 IST Report Abuse
Rafi புது மண தம்பதிகளுக்கு நல் வாழ்த்துக்கள். அனைவரும் பின்பற்றக்கூடிய முன் உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
Baskar -  ( Posted via: Dinamalar Android App )
07-செப்-201713:11:52 IST Report Abuse
Baskar This is a good move helping others.
Rate this:
Share this comment
Cancel
raj - Madurai,இந்தியா
07-செப்-201712:50:46 IST Report Abuse
raj உங்கள் முயற்சி வாழ்த்துக்கள் இது போன்று நாமும் பின் போற்றுவோம் ஆடம்பர திருமண நிகழ்ச்சியை தவிர்த்து பண விரயத்தை குறைத்து இந்த ஏழை குழந்தைகளின் எதாவது படிப்பிற்கு உதவலாமே
Rate this:
Share this comment
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
07-செப்-201711:13:27 IST Report Abuse
Pillai Rm மகிழ்ச்சி .....பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.