செல்ல நாய்க்காக எம்.பி.பி.எஸ்., படிப்பை துறந்தவருக்கு 21 பதக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செல்ல நாய்க்காக எம்.பி.பி.எஸ்., படிப்பை துறந்தவருக்கு 21 பதக்கம்

Updated : செப் 08, 2017 | Added : செப் 08, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எம்.பி.பி.எஸ்.,MBBS, கால்நடை படிப்பு, Veterinary Study, மருத்துவ படிப்பு, Medical Study, தமிழ்நாடு, Tamil Nadu,கால்நடை மருத்துவ பல்கலை,  Veterinary Medical University, பட்டமளிப்பு விழா,Graduation Ceremony,  சென்னை, Chennai,கவர்னர் வித்யாசாகர் ராவ், Vidyasagar Rao,  பல்கலை துணைவேந்தர் திலகர், University Vice Chancellor Thilakar, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக துணைத் தலைமை இயக்குனர் நரேந்திர சிங் ரத்தோர், Deputy Director General of Indian Agricultural Research Institute Narendra Singh Rathore,பால்,Milk,  கோழி, Poultry , இறைச்சி ,meat கால்நடை அமைச்சர் ராதாகிருஷ்ணன், Veterinary Minister Radhakrishnan,
அமைச்சர் ராதாகிருஷ்ணன், Minister Radhakrishnan,

தான் வளர்த்த நாய்க்குட்டியின் மீதான அன்பால், மருத்துவ படிப்பை துறந்து, கால்நடை படிப்பில் சேர்ந்த மாணவர், 21 பதக்கங்களை பெற்று, அசத்தி உள்ளார்.
தமிழ்நாடு, கால்நடை மருத்துவ பல்கலையில், பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், 175 மாணவியர் உட்பட, 257 பேருக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், பட்டங்களை வழங்கினார். இளநிலை கால்நடை படிப்பில் அதிகபட்சமாக, 214 பேர் பட்டம் பெற்றனர்.
பல்கலை துணைவேந்தர், திலகர் பேசுகையில், ''இந்த ஆண்டு, 320 இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு, 15 ஆயிரத்து, 869 விண்ணப்பங்கள் வந்தன. இதில் இருந்து, இப்படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதை அறியலாம்,'' என்றார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக துணைத் தலைமை இயக்குனர், நரேந்திர சிங் ரத்தோர் பேசுகையில், ''பால், கோழி, இறைச்சி தொழில்களை துவங்குவது பிரபலமாகி வருகிறது.
''நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்தாலும், கறவை மாடுகளின் தனித்திறன் குறைந்து வருகிறது. எனவே, பட்டம் பெற்றுச் செல்லும் உங்களின் சேவை, அதிகம் தேவை,'' என்றார்.

பல்கலையில் சிறந்து விளங்கியோருக்கு, 86 பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த, நெசவு ஆலை உரிமையாளரின் மகன், ராஜமாணிக்கம், 21 பதக்கங்களை வென்றார். முதுகலை பயிலும் அவர் கூறியதாவது:

எனக்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் கிடைத்தது. நான், சிறுவயதில், 'ஜிம்மி' என்ற நாய் வளர்த்தேன். அதன் மீது ஏற்பட்ட பிரியத்தால், கால்நடைகளுக்கு உதவ முடிவு செய்தேன்.
அதனால், மருத்துவ படிப்பில் சேராமல், கால்நடை மருத்துவத்தில் சேர்ந்தேன். எதிர்காலத்தில், கால்நடைகளுக்கு, ரத்தசோகை நோயை குணப்படுத்த ஆய்வு செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடை அமைச்சர் ராதாகிருஷ்ணன், துறை செயலர், டாக்டர் கோபால், கால்நடை இயக்குனர், செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-செப்-201713:15:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இப்படியும் சொல்லலாம்.. சரித்திரம் என்னான்னு யாருக்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
08-செப்-201720:07:24 IST Report Abuse
தாமரை மகனே ராஜமாணிக்கம் உன்னை மன நெகிழ்வோடு வாழ்த்துகிறேன். MBBS -இல் சேர்ந்து காசு சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் இந்தக் காலத்தில் வளர்த்த நாயின் மீது கொண்ட பாசத்தால் கால்நடை மருத்துவரானது மட்டுமல்லாமல் அளவில்லாத பதக்கங்களை வேறு அள்ளி அசத்தியுள்ளேர்கள். மேல்படிப்பிலும் இதுபோலவே சிறப்பான செயல்பாடுகளுடன் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
pu.ma.ko - Chennai,இந்தியா
08-செப்-201719:52:35 IST Report Abuse
pu.ma.ko சாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள் ...
Rate this:
Share this comment
Cancel
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-201712:36:12 IST Report Abuse
 Palanivel Naattaar வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-செப்-201709:10:51 IST Report Abuse
Srinivasan Kannaiya மனிதன் செய்யமுடியாதை நாய்கள் செய்யும்... ஒருவரின் மனதை மாற்றும் சக்தி பெற்றது.,..... நாய்களை வளர்ப்பவர்களுக்குதான் அதன் அருமை பெருமை தெரியும்.,.புரியும்... சுத்தமான அன்பின் வங்கிகள் அவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை