அரசை கவிழ்க்க மக்களை திரட்டி போராட்டம்: ஸ்டாலின்| Dinamalar

அரசை கவிழ்க்க மக்களை திரட்டி போராட்டம்: ஸ்டாலின்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
கவர்னர், Governor, ஜனாதிபதி,President, ஸ்டாலின், Stalin, தமிழக அரசு, Government of Tamil Nadu,கவர்னர் வித்யாசாகர் ராவ், Governor Vidyasagar Rao,தஞ்சாவூர்,Thanjavur, தமிழகம் ,Tamil Nadu,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ,DMK Act Leader Stalin,  மெஜாரிட்டி, பெரும்பான்மை, Majority, சட்டசபை,Assembly, சட்டம் ஒழுங்கு ,  Law Order,
Share this video :
தமிழக அரசை கவிழ்க்கும் வரை மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Powered by Sathya

தஞ்சாவூர்: தமிழக அரசை கவிழ்க்கும் வரை மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


நொடிப்பொழுதில்...

திமுக நிர்வாகி அஞ்சகம் பூபதி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் தற்போது செயல்படாத அரசு உள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என சொல்கின்றனர். நொடிப்பொழுதில் கூட ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பு உண்டு. 19 பேர், அரசு மீது நம்பிக்கையில்லை எனக்கூறி, கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சி உள்ளது. திமுக சார்பிலும், மெஜாரிட்டியை நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் அளித்திருந்தோம். கவர்னர், ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை.


கால நிர்ணயம்:

முதல்வர் கூட்டத்தில் பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. வரும் 10ம் தேதி திமுக காங்கிரஸ் சார்பில் கவர்னரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். எங்களை அவர் சந்திக்க நேரம் ஒதுக்க வாய்ப்பு உண்டு. அப்போது பிரச்னையை கூறி, சட்டசபையை கூட்டுங்கள். மெஜாரிட்டி நிரூபிக்க உத்தரவிடுங்கள் என கோரிக்கை விடுப்போம். அப்போது, இதற்கு குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்வோம்.
அதற்குள் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், ஆட்சியை கவிழ்க்கும் வகையில், சட்ட ரீதியாகவும், மக்களை திரட்டியும் போராடுவோம். ஆட்சியை கவிழ்க்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.


மோசம்:

மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. இன்று நாடு குட்டிச்சுவராகியுள்ளது. சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளது. நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மோடி தலைமையிலான அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (129)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
09-செப்-201702:55:16 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே தமிழர்களின் வாழ்வை நன்றாக வைத்து கொள்ள சொன்னால் தமிழ் நண்டுகளாய் மாறிடுறாங்களே திமுகவினர்?
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
08-செப்-201721:47:56 IST Report Abuse
Appu சி சி தேர்ட் கிளாஸ் பெல்லோஸ்.....
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
08-செப்-201721:41:26 IST Report Abuse
Appu ஆட்சியை கலைக்க இவரும் படாத பாடு பட்டு தான் பாக்குறாரு...இவரு தகப்பன் உடல் நலத்தோட இருந்திருந்தா இந்நேரம் கவுத்திருப்பாரு ..இவருக்கு அந்த திறமையும் சமயோஜித சூசகமும் போதலை போலநல்ல தமிழக ஆட்சி நல்ல திராவிட காட்சிகள்....பாஜகவினர் ஓரமா நில்லுங்க...உங்களுக்கு சப்போட் கிடையாது..என்னிக்கு மதவாதத்தை கழட்டி வச்சு எல்லோரையும் சமமா பாத்து மைண்டை செஞ்சபண்றீங்களோ அன்னக்கி யோசிக்கலாம் உங்களை பத்தி..அது வர தமிழகத்தில் உங்களுக்கும் நோ...
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
08-செப்-201721:12:11 IST Report Abuse
sankar கல்யாண வீட்டில் மங்களமாக பேசுவது குடும்ப வழக்கம் -
Rate this:
Share this comment
Cancel
varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ
08-செப்-201720:24:36 IST Report Abuse
varagur swaminathan Even hard core DMK veterans do not like Stalin -His coming to DMK power is not welcome by old party colleaguesHe needs medical councilng
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - Mannai,இந்தியா
08-செப்-201720:22:40 IST Report Abuse
சூரிய புத்திரன் மக்களை திரட்டி.போராட்டமா... அது முடியாது ....
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
08-செப்-201719:55:15 IST Report Abuse
Krish Sami கோமாளி ஸ்டாலின், 2016 தேர்தலில் உதை வாங்கி விட்டு ஆட்சிக்கு வர துடிப்பது நல்ல நகைச்சுவை. இன்னம் நாலு வருடங்கள் பொறுத்திருங்கள். அதுதான் ஜனநாயகம். உங்களுக்காக மாதா மாதம் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது.
Rate this:
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
08-செப்-201719:48:07 IST Report Abuse
S Rama(samy)murthy பதவி பித்து தலைக்கு ஏறிவிட்டது .ஊழல் கை அரிப்பு எடுக்கிறது . நிச்சயம் திமுக பதவிக்கு வரக்கூடாது .சுபராம காரைக்குடி
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
08-செப்-201719:43:36 IST Report Abuse
sridhar அரசை கவிழ்த்திட்டு?.. . மீண்டும் உங்க 24 மணி நேர பவர் cut அரசை கொண்டு வர வேண்டுமா ? உங்க சேவை இல்லை தேவை.
Rate this:
Share this comment
Cancel
Thiyagarajan - Bangalore,இந்தியா
08-செப்-201719:36:39 IST Report Abuse
Thiyagarajan என்னதான் போராட்டம் போட்டாலும் ஆட்சியை பிடிப்பது கடினம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.