‛நீட்' டுக்கு எதிரான அமைதியான போராட்டத்திற்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

‛நீட்' டுக்கு எதிரான அமைதியான போராட்டத்திற்கு தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

Updated : செப் 08, 2017 | Added : செப் 08, 2017 | கருத்துகள் (152)
Advertisement
நீட்,neet, சுப்ரீம் கோர்ட், Supreme Court of India, மாணவர்கள் போராட்டம்,Students strike, அனிதா,anitha, தடை, ban, புதுடில்லி,New Delhi, நீட் தேர்வு,neet exam, தமிழகம்,Tamilnadu,  அரியலூர் மாணவி அனிதா தற்கொலை,Ariyalur student Anitha suicide, அரியலூர் மாணவி, Ariyalur student, அனிதா தற்கொலை,Anitha suicide,அரியலூர், Ariyalur,  மாணவி அனிதா , student Anitha, தற்கொலை,suicide, திமுக, DMK,

புதுடில்லி: நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


போராட்டம்:

இந்த வருடம் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை. இந்த தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உறுதியுடன் கூறியது. இதனையடுத்து, அதிக மதிப்பெண் கிடைத்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. ‛நீட்' தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராடி வருகின்றனர்.


நீட்டுக்கு எதிராக போராடலாமா? சுப்ரீம் கோர்ட் விளக்கம்

பொதுநல வழக்கு:

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும், அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஜிஎஸ் மணி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.


அவமதிப்பு:

விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ‛நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தனிநபர்கள் போராடக்கூடாது. சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் நடத்தக்கூடாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ‛நீட்' சட்டத்திற்கு எதிராக போராடக்கூடாது. கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது கோர்ட்டை அவமதிக்கும் செயல்.


நடவடிக்கை:

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக இருக்கும் என்பதால், எந்தவகையான போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்னைகளை அரசு கையாள வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி அனிதா மரணம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என உத்தரவிட்டனர். மேலும், தலைமை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.,15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


திமுக போராட்டம் நடக்குமா?

இதனிடையே, நீட் தேர்வில் விலக்கு , அனிதா தற்கொலைக்கு நீதி விசாரணை கேட்டு, இன்று திருச்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு திமுக சாரபில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், போராட்டம் நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால், இந்த மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


அமைதியான போராட்டத்திற்கு தடையில்லை


இந்நிலையில் இன்று இரவு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது: நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு தடையில்லை . அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என்பதை சுப்ரீம் கோர்ட் உணர்ந்தே இருக்கிறது.சட்ட ஒழுங்கு பிரச்னைக்கும் அமைதியான வழி போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
15-செப்-201700:04:49 IST Report Abuse
தாமரை எப்படி ? மதுக்கடைக்கு கொடுத்த தடைபோலவா?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-செப்-201723:27:01 IST Report Abuse
Rajendra Bupathi எல்லாம் சரி ?அமைதியான முறையில போராட்டங்கறது சரியா படல? கடைசியா தடை விதிச்சதே உச்சம்தான் ? ஆனா போராட்டத்துக்கு அனுமதி? ஏன்னா அது அடிப்படைஉரிமை? ஏங் கோவாலு ஜண்டுபாம் ஏதாவது ஒங்ககிட்ட இருக்கா?
Rate this:
Share this comment
Iron Cooper - Mangalore,இந்தியா
09-செப்-201701:30:01 IST Report Abuse
Iron Cooperகலக்கறீங்க......
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-செப்-201723:23:07 IST Report Abuse
Rajendra Bupathi என்ன இது அநியாயம இருக்கு? ஏய்யா எங்கேயாவது, எந்த போராட்டமாவது அமைதியா நடந்த சரித்திரம் ஊண்டா? இல்ல ?எந்த போலீசாவது அப்படி அமைதியா போராட்டம் நடத்த அனுமதிச்ச சரித்திரம்தான் உண்டா? ஆக்ரோக்ஷ போராட்டத்துக்கு அடிப்படைகாரணமே போலீஸ்தான்?
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
08-செப்-201723:15:28 IST Report Abuse
J.Isaac மக்களுக்கத்தானே நீதிமன்றம் . நீதித்துறையிலும் மறைமுகமாக அரசாங்க தலையீடு இருக்கின்றதோ என்ற சந்தேகம் உருவாகின்றது . NEET னால் கிராமப்புற ஏழை மாணவர்களின் MBBS ஆசை நிறைவேறாது.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
08-செப்-201722:15:23 IST Report Abuse
தங்கை ராஜா மனசாட்சி குத்திருகிச்சு போலருக்கு. உத்தரவு பேக்கடிக்குது. சட்டம் தெரியாமல் நீதிபதிகள். கிண்டல் அதிகமானதும் சட்டம் எங்களுக்கும் தெரியும்லன்னு வடிவேலு வசனம் வேற.
Rate this:
Share this comment
Cancel
sunil karthick - madurai,இந்தியா
08-செப்-201721:36:34 IST Report Abuse
sunil karthick அப்படி பாத்தா 10th ,+2 கூட தடை செய்யணும்னு சொல்லுவாங்க போல இந்த நாக்கில் எலும்பில்லாத அரசியல் வாதிகள் +2 ல fail அறவங்க நெறைய பேர் தற்கொலை பண்றங்களே அதை பற்றி சற்று விளக்குங்க ப்ளீஸ்? உலகலியே தமிழன் தான் மிக புத்திசாலி ஆனால் இப்போது இந்த அரசியல் மற்றும் வியாபார பிசாசுகளால் முட்டாள் ஆக்க படுகிறான், நாம் விவசாயிகளுக்கு போராடுவதற்கு ஒரு நியாயம் இருக்கிறது அதை செய்ய முன் வர வில்லை, வாழ்க்கையை வாழ தைரியம் இல்லாத ஒரு பெண்ணுக்காக போராடுவது வெறும் அரசியலுக்கு தான்
Rate this:
Share this comment
Iron Cooper - Mangalore,இந்தியா
09-செப்-201701:32:51 IST Report Abuse
Iron Cooperஇப்படி பொதுவா சொன்னா எப்படிங்க. அரசியல்வாதிங்க போராட்டம் எல்லாம் சும்மா தான். ஆனா அந்த பொண்ணு சாவு இவ்ளோ ஈஸியா சொல்லாதீங்க சார். Introducing NEET is good but central goverment cannot escape the blame by pointing to the state for not changing state syllabus and pattern. Since NEET is at national level, Center also should take equal responsibility to make sure that every state has done necessary reforms and then introduce it. There should be a proper transition period where students are not affected. Court or center cannot allow innocent students to die should because state has failed in its duties. Also when talking of quality of doctors what is the justification court has provided with respect to management seats which is bought by paying money rather than merit....
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
08-செப்-201721:14:10 IST Report Abuse
Appu அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம்....எல்லாரும் கலைஞ்சு போங்க...போராட்டம் இதையும் மீறி நடத்துனா அதிமுக காரன் அதுல விரலை உட்றானோ இல்லையோ காவி தீவீரவாதிகள் உள்ளே நுழைந்து இதை சீர்கெடுத்து போராட்டம் செய்ய விடாமல் அமைதியற்ற நிலையை உருவாக்கி தடுப்பார்கள்....பின்னர் அவர்களே வாய் கிழிய சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துவிட்டார்கள் என்று டுபாக்கூர் விடுவார்கள்....ஏற்கனவே ஜல்லிக்கட்டு பிரச்சனையில் இதை செய்தவர்கள் தானே???
Rate this:
Share this comment
Cancel
E.PATHMANABAN - vikramasingapuram,இந்தியா
08-செப்-201720:17:35 IST Report Abuse
E.PATHMANABAN பணம் கொளிக்கும் தொழில் மெடிக்கல் படிப்பு, பணத்திற்காக அலையும் அரசியல் வாதிகள் உள்ள நாடு இது ,இங்கு உயிருக்கு மதிப்பு கிடையாது
Rate this:
Share this comment
Cancel
08-செப்-201720:04:19 IST Report Abuse
சிருதொண்டன் Supreme court, however supreme it may can not block peaceful protest for the peoples right. Constitutional bench will any such ruling by the apex court as it violates fundamental rights promised in the indian constitution
Rate this:
Share this comment
Cancel
Tamilan - JERSEY CITY,யூ.எஸ்.ஏ
08-செப்-201719:58:33 IST Report Abuse
Tamilan நீதிமன்றம் முதலில் மக்கள் பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை