பல் மருத்துவம் படிக்க ஆசை : தடுக்கிறது ஏழ்மை நிலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல் மருத்துவம் படிக்க ஆசை : தடுக்கிறது ஏழ்மை நிலை

Updated : செப் 09, 2017 | Added : செப் 08, 2017 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பல் மருத்துவம்,Dentistry,  ஏழ்மை, Poverty, மாணவி ரீனா , Student Reena, நீட் தேர்வு , Neet Exam,பி.டி.எஸ்,PDS சென்னை மாணவி ,Chennai Student, கல்லுாரி,college, ரீனா,Reena,  கவுன்சிலிங்,Counseling, பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லுாரி, Priyadarshini Dental college,மருத்துவ கனவு,Medical Dreams,  மருத்துவம், Medicine,சென்னை,Chennai,

சென்னை: 'நீட்' தேர்வின் பலனாக பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மையால், சென்னை மாணவி கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர், சுரேஷ் மகள் ரீனா. பிளஸ் 2 தேர்வில், 983 மதிப்பெண் பெற்றார். 'நீட்' தேர்வில் பங்கேற்ற இவர், தேர்ச்சி பெற்று, 121வது இடம் பெற்றார்.
அரசு நடத்திய கவுன்சிலிங்கில், திருவள்ளூரில் உள்ள, பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லுாரியில், பி.டி.எஸ்., என்ற பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

கல்லுாரி கட்டணமாக, 4.25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். குடும்ப ஏழ்மையால், கட்டணம் செலுத்த வழியின்றி, மாணவி திணறி வருகிறார். இதனால், அவரின் மருத்துவ கனவு, கனவாக முடிந்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, மாணவி ரீனா கூறியதாவது:


என் தந்தை, அரசு அலுவலக உதவியாளராக உள்ளார். அவர் வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்தவோ, மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவோ போதுமானதாக இல்லை. பிளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் பெற்றாலும், 'நீட்' தேர்வால், பி.டி.எஸ்., படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றாலே, அதை, கட்டுவது பெரிய விஷயம். இப்போது, 4.25 லட்சம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்.

ஏழ்மையால், கல்லுாரியில் சேர முடிய வில்லை. சேவை மனம் உள்ள யாராவது, உதவிக்கரம் நீட்ட முன் வந்தால், நான் மருத்துவத் துறையில் சாதிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், 98841 14742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
09-செப்-201717:38:42 IST Report Abuse
Siva Subramaniam போராட்டம் நடத்தும் நம் அரசியல் கட்சிகள் இவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு உதவி செய்வார்களா. ?
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
09-செப்-201717:21:04 IST Report Abuse
சூரிய புத்திரன் பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா.... அப்பா.அரசு ஊழியா் ? .....
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201716:10:31 IST Report Abuse
PrasannaKrishnan Better chose any graduation and try civil service.
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201716:10:31 IST Report Abuse
PrasannaKrishnan Better chose any graduation and try civil service.
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201716:10:31 IST Report Abuse
PrasannaKrishnan Better chose any graduation and try civil service.
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
09-செப்-201714:46:41 IST Report Abuse
G  Mahalingam I think this community don't have much vote banks. Political parties who are against NEET, don't care this student.
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201714:20:32 IST Report Abuse
ARUN.POINT.BLANK Why to display her picture ? Dinamalar please take care next time.
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
09-செப்-201713:49:34 IST Report Abuse
V.Rajeswaran இந்த கல்லூரி காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஒருவருக்கு சொந்தமானது ஏழைகள் மேல் அக்கறை கொண்ட அவரது கட்சியும் அவரும் உதவலாமே
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Chennai,இந்தியா
09-செப்-201712:43:45 IST Report Abuse
தமிழன் நான் படிக்கும் போது நீட் இருந்தால் நானும் டாக்டர் ஆகி இருப்பேன்.
Rate this:
Share this comment
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
09-செப்-201710:37:39 IST Report Abuse
kurinjikilan பிச்சைபுகினும் கற்கை நன்றே ..இந்த 4.25 மொத்தசெலவு என்றால் வங்கியில் பிணையம் இன்றி 4 லட்சம் கடன் பெறலாம்..இல்லை வருடாவருடம் 4.25 லட்சம் என்றால் 5 வருடங்கள் + அதன்பின் மேற்படிப்பு படித்தால்தான் பிரயோஜனம்..மேற்படிப்பிற்கோ இடங்கள் மிக குறைவு..கிடைப்பது சிரமம் எனும் பட்சத்தில் வேறு படிப்பை தேர்வு செய்வது உசிதம்..பி டி எஸ் படித்து வேலைஇல்லாமல் 15000 - 20000 ரூபாய்க்கு சிரம்ப்படும் பலரை நான்கண்டுள்ளேன். எனது அனுபவம்..சிந்தித்து முடிவெடுக்கவும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை