புல்லட் ரயில் திட்டம் : சீனாவுக்கு, 'நோ!'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புல்லட் ரயில் திட்டம் : சீனாவுக்கு, 'நோ!'

Added : செப் 09, 2017 | கருத்துகள் (59)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
புல்லட் ரயில் திட்டம்,Bullet Rail Project,  சீனா,China, புல்லட் ரயில், Bullet Rail, டோக்லாம் எல்லை பிரச்னை,Tokelam border issue, மத்திய அரசு, Central government,இந்தோனேஷியா,  Indonesia, சிங்கப்பூர் , Singapore, கோலாலம்பூர் அதிவிரைவு ரயில் திட்டம்,Kuala Lumpur superfast rail project, ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே,Japan Prime Minister Shinzo Abe, ஜப்பான், Japan,சென்னை - புதுடில்லி, Chennai - New Delhi,  புதுடில்லி - மும்பை, New Delhi - Mumbai, ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில், Ahmedabad - Mumbai Bullet Train, புதுடில்லி, New Delhi,

புதுடில்லி: நம் நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புல்லட் ரயில் திட்டங்களை, டோக்லாம் எல்லை பிரச்னையைத் தொடர்ந்து, சீனாவுக்கு பதில், ஜப்பானுக்கு கொடுப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஆசிய பிராந்தியத்தில், புல்லட் ரயில்கள் திட்டத்தில், சீனா - ஜப்பான் இடையே, கடும் போட்டி உள்ளது. இந்தோனேஷியா, சிங்கப்பூர் - கோலாலம்பூர் அதிவிரைவு ரயில் திட்டம், தாய்லாந்தில் அதிவேக ரயில் திட்டம் ஆகியவற்றை சீனா பெற்றுள்ளது. அடுத்ததாக, தாய்லாந்து - மலேஷியா இடையேயான ரயில் திட்டப் பணிக்கு, ஜப்பானும், சீனாவும் மோதி கொண்டிருக்கின்றன.


புல்லட் ரயில் திட்டம் : சீனாவுக்கு மறுப்பு

பாதுகாப்பானது

மிகவும் பாதுகாப்பானது, பராமரிப்பு செலவு மிகவும் குறைவு போன்றவை, ஜப்பானுக்கு சாதக மாக உள்ளன. அதே நேரத்தில், மிக குறைந்த விலை என்பது, சீனாவுக்கு சாதகமாக உள்ளது. 50 ஆண்டுகளாக புல்லட் ரயில்களை இயக்கி வரும் ஜப்பானில், இதுவரை விபத்து நடந்ததில்லைஎன்பது, அதற்கு சாதகமாக உள்ளது. நம் நாட்டில், முதல் அதிவேக ரயில் திட்டமான, ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தம் ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும், 14ல் நடக்க உள்ள, அதன் துவக்க விழாவில் பங்கேற்க, ஜப்பான் பிரதமர், ஷின்சு அபே வருகிறார்.
அடுத்தகட்டமாக, சென்னை - புதுடில்லி, புதுடில்லி - மும்பை இடையே புல்லட் ரயில்களை இயக்குவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வை, சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், டோக்லாம் பிரச்னை எழுந்ததால், மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர, ஜப்பானுடனான உறவும் வலுவடைந்து வருகிறது. பல்வேறு துறைகளில் ஜப்பானுடன் இணைந்து, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால், மற்ற புல்லட் ரயில் திட்டங்களையும், ஜப்பானுக்கு அளிப்பது குறித்து, மத்தியஅரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள்தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
grg - chennai,இந்தியா
09-செப்-201717:01:39 IST Report Abuse
grg first whey do we need bullet trains?
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
09-செப்-201714:48:14 IST Report Abuse
bal நல்ல முடிவு. இது போல் எல்லா சீனா பொருட்களையும் வெளியே துரத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Den Haag,நெதர்லாந்து
09-செப்-201714:29:57 IST Report Abuse
Dynamo குளத்துமேல கோச்சிக்கிட்டு கால் கழுவாம போனா யாருக்கு நட்டம்? ஆனா ஒன்னு இந்தியாவிற்கு புல்லட் ரயில் திட்டம் தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201713:57:39 IST Report Abuse
Sundar If the project cost is cheap why not consider China leaving political problem. We can give a chance to china and with the condition of quality and cheap maintenance as prevailed from Japan. Moreover this will give a good rapport from China.
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
09-செப்-201714:24:50 IST Report Abuse
AarkayNo need We needn't support a nation which constantly meddles with our border and peace. Let's ban all imports from China however it impacts our market. We can survive without mobiles, TVs and sundries from China. Let us shun chinese products...
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
09-செப்-201713:56:53 IST Report Abuse
Appu மக்களின் பயண பாதுகாப்பு அடங்கிய அம்சம் என்பதாலும்,,,டோக்லாமில் வாலாட்டிய சீனாவுக்கு சிறிய பாடம் புகட்டும் வகையில் ஜப்பான் நிறுவனத்துக்கு பட்ஜெட் அதிகமானாலும் தரத்தை கணக்கில் கொண்டு மாற்றி கொடுப்பதை கண்டிப்பாக எல்லா இந்தியரும் வரவேற்பார்கள் என்பதில் ஐயம் இல்லை....
Rate this:
Share this comment
Shriram - Chennai,இந்தியா
09-செப்-201718:21:45 IST Report Abuse
ShriramSuper appu...
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201713:23:10 IST Report Abuse
கணேசன் சீனாவை நாம் பொருளாதார ரீதியாக வீழ்த்த வேண்டும் சீனா பொருள்கள் தடை செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-செப்-201713:09:19 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) மும்பை சாலைகளில் ( போரிவலி டு மும்பை சென்ட்ரல் ) முன்பு லாங் கிங் என்று சைனாவின் சொகுசு பேருந்துகளை விட்டார்கள். அடிக்கடி செயல்படாமல் நின்று விடும். அதுவே வோல்வோ பேருந்துகள் , சீராக நன்கு செல்லும் .( மும்பை வாசிகள் இது பற்றி கருத்து தெரிவிக்கலாம்). . சீனாவின் தயாரிப்புகள் தரக்குறைவு தான் .
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-செப்-201713:07:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சீனாவுக்கு பதில், ஜப்பானுக்கு கொடுப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இன்னும் யோசிக்கிறாங்க.. புல்லட் வர்றதுக்குள்ளே மோசடி ஆட்சியே போயிருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Kamalakannan Paramasivam - Chennai,இந்தியா
09-செப்-201712:54:31 IST Report Abuse
Kamalakannan Paramasivam காஷ்மீருக்கும் கன்னியகுமாரிக்கும்தான் முதலில் BULLET ட்ரெயின் இரண்டு ட்ராக்க்குகளில் விடவேண்டும்.பிரான்ஸ் நாட்டிலும் BULLET ட்ரெயின் தயாரிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
09-செப்-201711:39:40 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு இப்ப இருக்கற நிலைமையில யாரையும் பகைச்சிக்க முடியல. எப்படியும் ரெண்டு ட்ராக்கு வேணும்- போக ஒண்ணு வர ஒண்ணு... சீனாவுக்கு ஒண்ணு ஜப்பானுக்கு ஒண்ணு... ஆளுக்கொண்ணா பிரிச்சு கொடுத்துடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை