எந்த வயதிலும் மலையேறலாம்| Dinamalar

எந்த வயதிலும் மலையேறலாம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

எந்த வயதிலும் மலையேறலாம்சொல்கிறார் 76வயது மலையேற்ற சாதனையாளர் அய்ட்வால்

சென்னையில் ஒரு இனிய நிகழ்வு
இமயமலையை மையமாக வைத்து பல முறை புகைப்படம் எடுதுவரும் ஜெ.ரமணன் எடுத்த படங்களின் கண்காட்சி சென்னையில் நடந்துவருகிறது, இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக ஒரு மூதாட்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

அவரை பற்றி அறிமுகம் செய்யும் போது நமது நாட்டின் மிக உயரமான நந்ததேவி மலைச்சிகரம்(7816 அடி உயரம்) உள்பட பல்வேறு சிகரங்களில் 36 ஆண்டுகளாக ஏறி இறங்கி சாதனை படைத்தவரும்,இதற்காக நாட்டின் உயர்ந்த பத்மஸ்ரீ,அர்ஜூனா விருதுகள் பெற்றவருமான சந்திரபிரபா அய்ட்வால் என்றனர்.
சந்திரபிரபா உத்தர்கண்ட் மாநிலம் பித்தகாரா மாவட்டம் தர்சுலாவில் 1941ம் ஆண்டு பிறந்தவர்.ஏழ்மையான குடும்பம்.வீட்டில் சமையல் செய்வதற்கு தேவையான விறகு பொறுக்க காடு மலைகளில் சிறு வயதில் ஏறி இறங்கிய அனுபவம் உண்டு.

படிப்பை முடித்து உள்ளூர் பள்ளியில் ஆசிரியர் வேலை என்று சராசரி பெண்ணாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.நேரு மலையேற்ற பயிற்சியகத்தில் இருந்து பள்ளிக்கு ஒரு சுற்றறிக்கை வந்தது அதில் மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்பதுதான் அறிக்கையின் சராம்சம்.
இந்த அழைப்புதான் சந்திரபிரபாவின் வாழ்க்கையை அடியோடு மாற்றியது இன்றைக்கு இந்திய மலையேறும் பெண்களின் முன்னோடியாக இவர் மாறக்காரணமாக இருந்ததும் இந்த அழைப்புதான்.

இந்த அழைப்பை ஏற்று இவர் பயிற்ச்க்கு சென்ற போது வயது 30 அதுவரை சிகரங்களில் மலையேறுவது பற்றி எதுவும் தெரியாது அங்கு வழங்கப்பட்ட பயிற்சியும் சிகரம் ஏறும்போது கிடைத்த சிலிர்க்கும் அனுபவமும் சந்திரபிரபாவிற்கு பிடித்துப் போனது.
அதன்பிறகு மலையேறுவதையே வாழ்நாள் விருப்பமாகக் கொண்டுவிட்டார் நாட்டில் உள்ள அனைத்து சிகரங்களிலும் கால்பதித்துவிட்டார்.

1981நந்தாதேவி சிகரம் ஏறும்குழுவினர் அபாயம் அதிகம் என்று சொல்லி பெண்களை தவிர்த்து வந்தனர்.அது என்ன அபாயம் பார்த்துவிடுவோமே என்று சொல்லி அந்த சிகரத்தை 1 தொட்டவர்தான் சந்திரபிரபா.பனிப்புயல் ஆக்சிஜன் குறைவு, அபாயகரமான சறுக்கு என்று அனைத்தையும் கடந்து சென்று திரும்பிய முதல் இந்திய பெண் என்பதால் இவருக்கு பல்வேறு விருதுகள் தேடிவந்தது.
அதன்பிறகு மலையேறும் குழுவிற்கு பயிற்சியாளராக இருந்து மாடிவீட்டிற்கு போவது போல பல மலைச்சிகரங்களுக்கு ஏறி இறங்கியிருக்கிறார்.இந்த சாகசபயண ஈடுபாடு காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை. 76 வயதாகிறது இருந்தும் இப்போதும் கூட பல பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து மலையேற்ற பயிற்சிக்கு ஊக்கம் தந்துவருகிறார்.

புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்றிருந்த இமயம் தொடர்பான படங்கள் வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது, இவர் அந்த படங்களைவிட அதிகம் வியப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தினார் என்பதே நிஜம்.

---எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்