மிகையதார்த்த புகைப்படங்கள்| Dinamalar

மிகையதார்த்த புகைப்படங்கள்

Updated : செப் 09, 2017 | Added : செப் 09, 2017 | கருத்துகள் (1)
Advertisement



திருச்சி ரமணனின் மிகையதார்த்த புகைப்படங்கள்...
இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிய திருச்சி ஜெ.ரமணன் என்ற ஒரு அற்புதமான புகைப்படக்கலைஞனின் படைப்புகளே சென்னை லலித்கலா அகாடமியில் நடந்துவரும் மிகையதார்த்த(சர் ரியலிசம்)புகைப்பட கண்காட்சியாகும்.

கனவு காணாத மனிதன் கிடையாது பல கனவுகள் கற்பனை கூட செய்யமுடியாத வடிவங்களில் வந்து மோதும் அந்த கனவு காட்சிகள் பல வியப்பை ஏற்படுத்தும் விந்தையை கூட்டும் சில மிரட்டும்.
இந்த கனவுகள் நனவானால் எப்படி இருக்கும் என்று தான் உலகம் முழுவதும் பயணித்த போது எடுத்த படங்களைக் கொண்டு நடந்துவரும் இந்த கண்காட்சியில் முற்றிலும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைதரும்.

புகைப்பட கண்காட்சி என்றால் விலங்குகள்,இயற்கை காட்சிகள்,நிலங்கள்,நினைவு சின்னங்கள்,பூச்சிகள் என்றுதான் பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த கறுப்பு வெள்ளை கண்காட்சியில் அதெல்லாம் இருக்காது.

மனித வாழ்வு நீர்க்குமுழி போன்றது இருக்கும் கொஞ்ச காலத்தில் ஏன் இந்த கோபம் தாபம்,அமைதியும் சந்தோஷமும் ஆனந்தமும் நிலவவேண்டும் என்ற ஆழமான கருத்தை படங்கள் சுமந்து இருக்கிறது.

கண்காட்சி குறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் ரமணனை பாராட்ட நினைப்பவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9443359747.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை