delhi ush | சோனியா மருமகன் ஊழல் அம்பலம்? | Dinamalar

சோனியா மருமகன் ஊழல் அம்பலம்?

Updated : செப் 10, 2017 | Added : செப் 09, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
டில்லி உஷ், சோனியா, ராபர்ட் வத்ரா, ஹரியானா, அரியானா,  புபேந்தர் சிங் ஹூடா, தீபேந்தர் சிங் ஹூடா, ராகுல், காங்கிரஸ், பா.ஜ., மோடி,  தமிழக கவர்னர், மஹாராஷ்டிரா, வித்யாசாகர் ராவ்,  கல்ராஜ் மிஸ்ரா, உ.பி., வழக்கறிஞர், delhi ush

மத்தியில், ஆட்சியில் உள்ள, பா.ஜ., பல மாநிலங்களில், காங்., கட்சியை உடைத்து வருகிறது. கட்சி தலைமை சரியில்லாத காரணத்தால், காங்கிரசாரும் வெறுத்துப் போயுள்ளனர். இதை, தங்களுக்கு சாதகமாக, பா.ஜ., பயன்படுத்திக் கொள்கிறது. இந்த விதத்தில், தற்போது, ஹரியானா மாநிலத்தில், கைவரிசையைக் காட்ட தயாராகி வருகிறது, பா.ஜ.,ஹரியானாவில் தற்போது, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மனோகர்லால் கட்டார், முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், இதற்கு முன், காங்.,கை சேர்ந்த, புபேந்தர் சிங் ஹூடா, முதல்வராக இருந்தார். இவர் மகன், தீபேந்தர் சிங் ஹூடா, காங்., - எம்.பி.,யாக உள்ளார். சமீப காலமாக, அப்பா, மகன் இருவருடன், ராகுல் பேசுவதே இல்லையாம். கட்சியில் நமக்கு, மரியாதையே இல்லை என, வெறுத்துப் போயுள்ளனர், அப்பாவும் மகனும்.இதை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது, பா.ஜ., பிரதமர் மோடியை இரு முறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ள, புபேந்தர் சிங், புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்னாராம். அவருக்கு முழு ஆதரவு தருவதாக, மோடி உறுதியளித்துள்ளாராம். புபேந்தர் சிங் ஆட்சியில் இருந்தபோது, சோனியா மருமகனும், பிரியங்கா கணவருமான, ராபர்ட் வாத்ரா, ஏராளமான சொத்து வாங்கி குவித்தாராம்.இந்த விபரங்களையெல்லாம் வெளியே சொல்ல தயாராகி விட்டாராம், புபேந்தர் சிங் ஹூடா. இதனால், ஹரியானாவில் காங்., உடைவதோடு, சோனியா குடும்பத்திற்கு பெரும் பிரச்னையும் வர உள்ளதாக, பா.ஜ.,வினர், குஷியாக உள்ளனர்.


தீபாவளிக்கு முன் புதிய கவர்னர்?

தமிழக அரசியல், திக்கு தெரியாமல், தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக கவர்னரின் பொறுப்பு மிகவும் முக்கியம். வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக இருப்பதால், பல பிரச்னைகள்; மஹாராஷ்டிராவையும், தமிழகத்தையும் அவரால் கவனிக்க முடியவில்லை. இது தொடர்பாக, சமீபத்தில், டில்லி வந்தபோது, விரைவில், புதிய கவர்னரை நியமிக்கும்படி, மத்திய அரசிடம், ராவ் கேட்டுக் கொண்டாராம்.ஏற்கனவே சில கவர்னர் பதவிகள் காலியாக இருப்பதால், அனைத்திற்கும், விரைவில் நியமனம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது, தமிழகத்திற்கும் புதிய கவர்னர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. தீபாவளிக்கு முன், தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.இதற்கிடையே, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகிய, உ.பி., அரசியல்வாதி, கல்ராஜ் மிஸ்ரா, தமிழக கவர்னராக நியமிக்கப்படுவார் என, செய்தி அடிபட்டது. ஆனால், இது தவறு, என, பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.உத்தரப் பிரதேசத்திலிருந்து லோக்சபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மிஸ்ரா. அவர், கவர்னராக நியமிக்கப்பட்டால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பிறகு அதற்கு தேர்தல் நடைபெறும். இப்போதுள்ள சூழ்நிலையில், இந்த தேர்தலை, பா.ஜ., விரும்பவில்லை.ஒருவேளை வெற்றி பெறாமல் போனாலோ, குறைவான ஓட்டுகளில் வெற்றி பெற்றாலோ அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும். அதனால், மிஸ்ரா, கவர்னர் ஆவது கடினம் என்கின்றனர், பா.ஜ.,வினர்.உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ., இமாலய வெற்றி பெற்றாலும், சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிடாமல், எம்.எல்.சி., பதவிக்கு போட்டியிடுகிறார், முதல்வர் ஆதித்யநாத். எதற்கு, இப்போதைக்கு வீண் பிரச்னை என்கிறதாம், பா.ஜ., இதையெல்லாம் பார்க்கும்போது, மிஸ்ரா, எப்படி கவர்னர் ஆவார் என, பா.ஜ.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.


வக்கீல், 'பீஸ்'ரூ.1 கோடியா?

சமீபத்தில், தமிழகத்தின் முக்கிய கட்சி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசியல் ரீதியாக வழக்கு தொடர்ந்தது. அந்த கட்சி சார்பாக வாதாட, டில்லியிலிருந்து, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக திகழும், மூத்த வழக்கறிஞர் ஒருவர், சென்னை வந்தார். தன் வாதத் திறமையால், கட்சிக்கு சாதகமான தீர்ப்பை வாங்கிக் கொடுத்தார், அந்த வழக்கறிஞர்.இந்த வழக்கிற்காக, அவருடைய கட்டணம், ஒரு கோடி ரூபாயாம். ஆச்சரியப்படும் வகையில் சம்பளம் பெறுவதற்கு, வழக்கறிஞர் தரப்பில் விளக்கம் தருவோர், 'டில்லியில், ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் 10 வழக்குகளில் வாதாடுகிறார். ஒரு வழக்கிற்கு, 13 லட்ச ரூபாய் கட்டணம். சென்னை வருவதாக இருந்தால், ஒரு நாள் முழுவதும் போய்விடும். அதை சரிகட்ட, டில்லியிலிருந்து வெளியூர் வந்து வாதாடினால், குறைந்த பட்சம், ஒரு கோடி ரூபாய் சம்பளம் தர வேண்டும். இது, எங்களைப் பொறுத்தவரை, குறைவான கட்டணம்' என்கின்றனர். இத்துடன், விமான கட்டணம், ஸ்டார் ஓட்டல் கட்டணம் தனி, என்றும் அவர்கள் சொல்கின்றனர். இந்த வழக்கிற்கு, பில் குறித்து, அந்த வழக்கறிஞரிடம் கேட்டபோது, 'உங்கள் கட்சி தலைவரின் நண்பன், நான்' என, பதில் தந்தாராம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
11-செப்-201711:53:40 IST Report Abuse
Cheran Perumal கபில் சிபல் காசில்லாமல் எந்த வழக்கிலும் ஆஜராக மாட்டார். லவ் ஜிஹாத் வழக்கில் அமைதி மார்க்கம் சார்பில் ஆஜரானதுக்கு எத்தனை கோடிகளோ? எங்கிருந்து கொடுத்தனரோ?
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
14-செப்-201700:33:32 IST Report Abuse
vadiveluதமிழ் நாட்டில் சிறந்த வக்கீல்கள் இல்லை என்று ஒப்பு கொள்கிறார்களோ? உண்மையாகி இருக்குமா, வக்கீல்கள் ஏன் போராட்டம் நடத்தவில்லை? மாணவர்களுக்கும் பொழுது போகுமே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை