பதிலடியை துவங்கியது தமிழக பா.ஜ., அதிரடியாக களம் இறங்கிய தலைவர்கள்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பதிலடியை துவங்கியது தமிழக பா.ஜ.,
அதிரடியாக களம் இறங்கிய தலைவர்கள்!

திருச்சி:'நீட்' தேர்வை எதிர்க்க, அனிதா தற்கொலையை கையில் எடுத்துள்ள தமிழக எதிர்க்கட்சிகளுக்கு, தகுந்த பதிலடி கொடுக்கும் பணியில், பா.ஜ., தலைவர்கள் தீவிரமாகி உள்ளனர்.

 தமிழக பா.ஜ.,Tamilnadu BJP, நீட் தேர்வு, Neet Exam,அனிதா தற்கொலை,Anita Suicide, அ.தி.மு.க,ADMK, நம்பிக்கை துரோகம்,betrayal, தமிழக மாணவர்கள், Tamil nadu Students, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK chief executive Stalin, கறுப்புப் பணம் ,Black Money , தமிழக பா.ஜ தலைவர் தமிழிசை ,Tamilnadu BJP leader Thamilisai, மருத்துவப் படிப்பு, medical study, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி, Trichy Government Medical College,அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், Minister, Pon Radhakrishnan,அனிதா,anitha, neet 2017, நீட் , Neet, அரியலுார் மாணவி அனிதா,Ariyalar student Anita,தி.மு.க., DMK,


'நீட்' தேர்வு எழுதி, குறைந்த மதிப்பெண் எடுத்த அரியலுார் மாணவி அனிதாவின் தற்கொலை, தமிழக அரசியலில், சுனாமியாக சுழன்றடிக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, மாநில அரசியலில், அ.தி.மு.க.,வுடன் நேரடி மோதலிலும், மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ., வுடன் அரசல், புரசலாக உரசிக் கொண்டிருந்த பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., அனிதாவின் தற்கொலை விவகாரத்தை, கையில் எடுத்துள்ளது.

எதிர்க்கட்சி வரிசையில்உள்ள, அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, பா.ஜ.,வை முதல் குற்றவாளி ஆக்கியும்,அ.தி.மு.க.,வை அதற்குஉடந்தையாக இருந்ததாகவும் குரலை உயர்த்தியது. இது தவிர, தமிழகம் முழுவதும் பரவலாக நடந்த

மாணவர் போராட்டங்களுக்கு நேரடியாக, தி.மு.க., மற்றும், பா.ஜ., எதிர்ப்பு கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன.

அதன் உச்சமாக திருச்சியில், 8ம் தேதி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில், நீட் தேர்வுக்கு எதிராக அணி வகுத்தனர். அதில் பேசிய அனைவரும், 'நீட் தேர்வு மூலம், மத்திய, மாநில அரசுகள் தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டன' என்ற ரீதியில் குமுறினர்.
தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், 'நீட் தேர்வுக்கு ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்கப்படும்' என, நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை, கறுப்புப் பணம் மீட்பு விவகாரம் போன்றவை தொடர்பாக கேள்விகள் எழுப்பினார்.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதே இடத்தில், மறுநாளே, பா.ஜ.,வினர், நீட் தேர்வுக்கு எதிராக பிரசாரம் செய்தவர்களை கண்டித்து, பொதுக் கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

'தமிழகத்தில் எதிர்மறை அரசியலை, பணத்தின் மீதும், பிணத்தின் மீது நடத்துவதை, பா.ஜ., ஒரு போதும்அனுமதிக்காது.'எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மறுநாள், அதே இடத்தில், போராட்டம் நடத்தி பதிலடி கொடுக்கப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை எச்சரித்துள்ளார்.

Advertisement

நீட் தேர்வு காரணமாக, தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதை பட்டியலிட்ட மத்திய இணை அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன், 'மாணவர்கள் உயிரை பணயம் வைத்து அரசியல் நடத்தும், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க் கட்சியினருக்கு, சமூக நீதி பற்றி பேச யோக்கிதை இல்லை' என்றார்.

மேலும், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ள துறையூர் மாணவியின் தாய் லட்சுமி பிரபா, நீட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைக்க பட்ட ப்ரவீன் என்ற மாணவர் ஆகியோரை, பா.ஜ., கூட்டத்தில் மேடை ஏற்றி, நீட் தேர்வுக்கு ஆதரவாக பேச வைத்தனர்.
இதன் மூலம், தமிழகத்தில் பதிலடி அரசியல் நடத்தி, வலுவான அடித்தளம் அமைக்கும் முயற்சியில் பா.ஜ., இறங்கியிருப்பது தெளிவு ஆகிறது. பதிலடி கொடுப்பதற்காக, பா.ஜ.க., தலைவர்களும் தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (172)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
D.RAMIAH - RAIPUR,இந்தியா
12-செப்-201711:12:48 IST Report Abuse

D.RAMIAHALL POLITICAL PARTIES ARE TELLING LIES

Rate this:
Kalyani S - Ranipet,இந்தியா
12-செப்-201708:57:41 IST Report Abuse

Kalyani S"ஆனா அவங்க மூலம் கிடைக்குற ஒரு சில நன்மைகள் நமக்கு கிடைக்காம போகும் அவ்ளோ தான் ".. அவர்களை எதிர்த்தால் ஒன்றும் கிடைக்காது சூப்பர் கருத்து திரு இளிச்சவாயன் அவர்களே. ஒரு ஜனநாயக நாடு அதன் ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக எடுத்து கூறியதற்கு நன்றி.

Rate this:
Cheran - Kongu seemai,இந்தியா
11-செப்-201720:05:02 IST Report Abuse

Cheranதீவிர தமிழக அரசியலுக்கு மத்தியில் ஒரு காமெடி செய்தி.

Rate this:
Thamizhan_innum_uyirodirukiran - chennai,இந்தியா
11-செப்-201720:04:57 IST Report Abuse

Thamizhan_innum_uyirodirukiranநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற அனிதா என்று எழுதும் தினமலர், மாநில தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் என்று எழுதாதது ஏனோ.

Rate this:
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
11-செப்-201719:38:38 IST Report Abuse

Siva SubramaniamNEET exam will eliminate capitation and other forms of additional cost to medical seat. This will, therefore affect those who are used to make millions by selling medical seats. Can any student OR parent ( of the previous years) deny this?

Rate this:
11-செப்-201719:33:23 IST Report Abuse

AMichaelRajதமிழகத்தில் என்ன தான் முக்குனாலும் பிஜேபியை பொறுத்தவரை சாண் ஏறினாலும் முழம் சறுக்கும்

Rate this:
rama - johor,மலேஷியா
11-செப்-201716:43:03 IST Report Abuse

ramaமோடியின் கேடி பேசுகிறார் சட்டத்துறையும் உங்கள் கையில் வைத்து ஆடுகிறிர்கள் உங்கள் பலத்தை காஷ்மீரிலும் பாக்கிஸ்தானில் காட்ட வேன்டியதுதானே

Rate this:
shankar - milton,கனடா
11-செப்-201720:21:24 IST Report Abuse

shankarதமிழனை குட்டிச்சுவராக்கும் திராவிட காட்சிகளை ஆதரிக்கும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாது . உண்மைகளை நம்ப மறுக்கும் உங்களை போன்றவர்களே தமிழனித்தின் விரோதிகள் ....

Rate this:
11-செப்-201716:23:06 IST Report Abuse

எப்போதும் வென்றான் பதிலடி... அதிரடி.... கல்லடி.......

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-செப்-201716:19:46 IST Report Abuse

Endrum Indianஅனிதா "ப்ளூ வேல் கேம் அட்மினிஸ்ட்ரேட்டர்" போல இருக்கும் திராவிடக்கட்சிகள் தான் தற்கொலைக்கு தூண்டியது, இது தான் உண்மை. திராவிடக்கட்சிகள் ஒழிந்தால் தான் டாஸ்மாக் நாடு இந்த அறியாமையிலிருந்து, ஏழ்மையிலிருந்து, இலவச மடமையிலிருந்து விடு பெற்று என்னால் முடியும் என்ற நம்பிக்கை அடைந்து நல் புத்தி பெறும்.

Rate this:
Rijzvan Ahmed - Jeddah,சவுதி அரேபியா
11-செப்-201716:03:19 IST Report Abuse

Rijzvan AhmedAgni sir, Tamilian culture is based on Dravidian culture. Don't try to cheat public here by explaining ariyan culture is tamilian culture.... Hinduism is brought to India by Ariyan. So Tamilian culture is first culture of the world. If you want any evidence go to Sinth and Harappa and Arikka medu places and etc... You will not find any statue or temple in their culture. This is the purest Dravidian culture..Dinamalar editor well known about that.

Rate this:
மேலும் 161 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement