உடல் குள்ளமாக இருந்தாலும் உழைப்பால் சிறக்கும் வாழ்க்கை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடல் குள்ளமாக இருந்தாலும் உழைப்பால் சிறக்கும் வாழ்க்கை!

Added : செப் 11, 2017 | கருத்துகள் (4)
Advertisement
குள்ள மனிதர்கள்,Dwarf People,  தமிழக அரசு ,Tamil Nadu Government,  உதவித்தொகை, Scholarship,  எலும்பு வளர்ச்சி, Bone Growth, நாளமில்லா சுரப்பி, Endocrinology, பரம்பரை, hereditary, சிறுதொழில், Small Industries,மனிதர்கள்,Humans, புதுக்கோட்டை,Pudukottai, வாழ்க்கை, Life, திருமணம் ,Marriage,

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள குள்ள மனிதர்கள், தங்களின் குறையை கண்டுகொள்ளாமல், உழைத்து சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டுநிலை, அரிமளம் பகுதிகளில், குள்ள மனிதர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.


3 அடி உயரம்:


இவர்கள், உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும், மனம் தளராமல், சொந்தமாக தொழில் செய்தும், வேலைக்கு சென்றும், பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெரும்பாலும், 3 அடி உயரம் தான் உள்ளனர். ஒரு சிலருக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது. இவர்கள் குள்ளமாக இருப்பதால், பலரும் இவர்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.


உதவித் தொகை:


ஆனாலும், அதை பொருட்படுத்தாமல், பணிகளை தொய்வின்றி செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், ஒரு சிலருக்கு மட்டுமே, 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:

குள்ளமாக பிறப்பதற்கு, ஹார்மோன் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாற்றம், ரத்த சொந்தத்தில் தொடர்ந்து திருமணம் செய்வது, பரம்பரை, பரம்பரையாக குள்ளமாக பிறப்பது ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
நெருங்கிய ரத்த சொந்தத்தில், திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தை, எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு குள்ளமாக பிறக்கும் குழந்தைகளை உயரமாக்க, மருத்துவ ரீதியாக எதுவும் செய்ய முடியாது.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.


கடனுதவி வேண்டும்:


குள்ளமாக உள்ள ஜரினா பேகம், 40 என்பவரது தந்தை முகமது ஜபருல்லா கூறியதாவது:
எனக்கு ஜரினாபேகம் முதல் குழந்தை. அவர் பிறந்து, 40 ஆண்டுகள் ஆகி விட்டன. அப்போது, போதிய மருத்துவ வசதிஇல்லை. அவர் வயதுடையவர்களுடன் சேர்ந்து நிற்கும் போது, எனக்கு சில நேரத்தில் மனவருத்தம் ஏற்படும். நாளடைவில் அதுவும் கடந்து போய் விட்டது.
மிரட்டு நிலை பகுதியில், குள்ள மனிதர்கள் அதிகம் உள்ளனர். பலர் பிழைப்புக்காக, வெளியூர் சென்று விட்டனர். என் மகளுக்கு திருமணமாகவில்லை.
எனக்கு பின், அவர் எப்படி காலம் கடத்துவார் என்பது தான், கவலையாக இருக்கிறது. எனவே, இவர்களின் வாழ்க்கை சிறக்க, சிறுதொழில் துவங்க அரசு கடனுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chails ahamad - doha,கத்தார்
11-செப்-201713:23:55 IST Report Abuse
chails ahamad நம்மையாளும் ஆட்சியாளர்கள் கருணையுள்ளத்துடன் நம்மில் ஒருவராக நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து வரும் இந்த உயரம் குறைந்தவர்களுக்கு , தகுந்த உதவிகளையும், மருத்துவ வசதிகளையும் மனிதநேயத்துடன் செய்து கொடுப்பது அவசியமாகும் , சிந்திப்பார்களா ?.
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
11-செப்-201712:03:11 IST Report Abuse
Meenu இன்றைக்கு உள்ள எல்லா கட்சிக்காரர்களும் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அதிகாரத்துக்கு வரவில்லை. மாறாக அவர்களை செல்வந்தர்களாக ஆக்கிக்கொள்ளவே வந்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. உங்களை போன்றோரை திரும்பி கூட பார்க்க நேரமிருக்காது... என்ன பண்றது இந்த நாட்டில் நாம் பிறந்தது தான் குற்றம்.
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
11-செப்-201707:30:46 IST Report Abuse
MaRan அரசாங்கம் இன்றைக்கு இருக்கும் நிலையில் உங்களை போன்றோரை கவனிக்க அவர்களுக்கு மனம் இல்லை,, தேவை இன்னொரு உத்தம தலைவன்,, அனைவரும் கடவுளை , எல்லாம் வல்ல இயற்கையை வணங்குவோம்,, சீக்கிரம் இந்த கபட தாரிகளிடம் இருந்து விடுதலை பெற,,
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
11-செப்-201706:31:08 IST Report Abuse
Amirthalingam Sinniah அவர்களுக்கு அரசாங்கம் போதிய உதவி செய்யவேண்டும். அவர்களின் உடல். குறைகளைப் போக்க மருத்துவ வசதிகளை செய்துகொடுங்கள். அவர்களை காட்சிப்பொருள் ஆக. மாத்தாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை