2025க்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க...தீவிரம்! மத்திய அரசுக்கு உலக சுகாதார மையம் உதவி Dinamalar
பதிவு செய்த நாள் :
தீவிரம்!
2025க்குள் காசநோயை முழுமையாக ஒழிக்க..
மத்திய அரசுக்கு உலக சுகாதார மையம் உதவி

மாலே: வரும், 2025க்குள், காசநோயை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது; இதற்கு தேவையான உதவிகளை அளிப்பதாக, டபிள்யு.எச்.ஓ., எனப்படும், உலக சுகாதார மையம் உறுதி அளித்துள்ளது.

காசநோயை,ஒழிக்க,மத்திய அரசு,உதவி


'தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில், 2030க்குள், காசநோயை ஒழித்துக் கட்ட வேண்டும்' என, அந்நாடுகளுக்கு, உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.

28 லட்சம் பேர்இது குறித்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான, உலக சுகாதார மையத்தின், பிராந்திய இயக்குனர், கேத்ரபால் சிங், மாலத்தீவின், மாலே நகரில் நேற்று கூறியதாவது:தென்கிழக்கு ஆசிய நாடுகளில், காசநோயை ஒழித்துக்கட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2030க்குள், இந்நாடுகளில், காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும். இந்தியாவில், 2025க்குள், இந்நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான உதவிகளை அளிப்பதாக, உலக சுகாதார மையம் உறுதி அளித்துள்ளது. மாலத்தீவுகளில், 2020க்குள், காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

2015ல், இந்தியாவில், 28 லட்சம் பேர், காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
அந்த ஆண்டில், 4.8 லட்சம் பேர், காசநோயால் உயிரிழந்தனர்.காசநோயால், இந்தியா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இந்த நோயை ஒழிக்க, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

விழிப்புணர்வு


இந்தியாவில் ஏராளமானோர், காசநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், 2025க்குள், அந்நோயை முற்றிலும் ஒழிக்க உதவுவோம். இதற்கு தேவையான அணுகுமுறைகளை, இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்கி தருவோம்.காசநோயை ஒழித்துக் கட்ட வேண்டும் என, மார்ச்சில், இந்திய சுகாதார அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.தென் கிழக்காசிய நாடுகளில், பொது சுகாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்க, பிராந்திய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில், இந்தியா, வங்கதேசம், பூட்டான், வட கொரியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட, 11 நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சகங்களை சேர்ந்த உயரதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

உயிர் கொல்லி நோய்!


தென்கிழக்கு ஆசிய நாடுகளில், காசநோய் பரவலாக காணப்படுகிறது. இந்நாடுகளில், உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக, காசநோயே உள்ளது. தொற்று நோய்களில், காசநோயே, மிகவும் ஆபத்தானதாக திகழ்கிறது.
உலக மக்கள் தொகையில், 25 சதவீதம் பேர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளனர்.

Advertisement

இருப்பினும், உலகளவில், காசநோயால் பாதிக்கப்படுவோரில், 40 சதவீதம் பேர், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளனர். இதை கருத்தில் வைத்து, 2030க்குள், காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை, 90 சதவீதத்துக்கு மேல் குறைக்க, தென் கிழக்காசிய நாடுகளில், பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு'


உலக சுகாதார மையத்தின், பிராந்திய இயக்குனர், கேத்ரபால் சிங், மேலும் கூறியதாவது: காசநோயை ஒழிப்பதில், உலக நாடுகள், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. அந்தந்த நாடுகளுக்கு, பிரத்யேகமாக உள்ள பிரச்னைகளை அறிந்து, அதற்கு ஏற்ப, தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும்.
காசநோயால் பாதிக்கப்பட்டோரை, துவக்கத்தில் கண்டறிந்து, அவர்களுக்கு தக்க சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். நோயை துரிதமாக குணமாக்கும் மருந்துகளை கண்டுபிடிக்க, ஆராய்ச்சிகளுக்கு, அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ibnusalih - Thaif.ksa.,சவுதி அரேபியா
12-செப்-201713:18:10 IST Report Abuse

Ibnusalihஉலக சுகாதார மையம் வழங்கும் நிதியை முறையாக செலவு செயதாலே நோய் காணாமல் போய் விடும்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201708:59:01 IST Report Abuse

Srinivasan Kannaiyaடபிள்யு.எச்.ஓ., எனப்படும், உலக சுகாதார மையம் வழங்கும் நிதியை முறையாக செலவு செயதாலே நோய் காணாமல் போய் விடும்...

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
12-செப்-201707:36:30 IST Report Abuse

தேச நேசன் நீண்ட காலத்துக்கு மருந்துகள் உட்கொள்ள வேண்டியிருக்கும் அதனை ஒரு நாள் கூட விடாமல் உண்ணவேண்டும் ஓரிரு நாள் விட்டுப்போனாலும் நோய் முற்றிவிடும் மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்துமுண்டு கவனமாக இல்லாதவர்களால் மருந்து எதிர்ப்புத்தன்மை( Drug resistance )அதிகமாகிறது. தினமும் SMS மூலம் நினைவூட்டும் சேவையைத் தொடங்கலாம் ஊட்டசத்து குறைபாடும் நோய்பரவ முக்கிய காரணம் . குழந்தைகளுக்கு சமவிகித உணவளிப்பதை படித்த தாய்மார்களே கடைபிடிக்காதபோது ஏழைகளை என்ன சொல்வது?

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-செப்-201704:38:34 IST Report Abuse

Kasimani Baskaranஉடற்பயிற்சி, எளிய மூச்சுப்பயிற்சி, சத்தான ஆகாரம், தூசியில்லாத சுற்றுச்சூழல் போன்றவை காசநோயை வெகுவாக குறைக்கும்... தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement