அயோத்தி நிலம் பராமரிப்பு பணி: நீதிபதிகளை நியமிக்க உத்தரவு| Dinamalar

அயோத்தி நிலம் பராமரிப்பு பணி: நீதிபதிகளை நியமிக்க உத்தரவு

Added : செப் 12, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அயோத்தி நிலம்,Ayodhya Land, நீதிபதி,Judge, உத்தர பிரதேசம், Uttar Pradesh,உச்ச நீதிமன்றம் , Supreme Court, ராம ஜென்மபூமி, Rama Zenmabhoomi, சர்ச்சை, Controversy, அலகாபாத் உயர்நீதிமன்றம், Allahabad High Court, முதல்வர் யோகி ஆதித்யநாத்,Chief Minister Yogi Adityanath, பாபர் மசூதி ,Babri Masjid, நீதிபதி தீபக் மிஸ்ரா,Justice Deepak Mishra, புதுடில்லி, New Delhi, அயோத்தி,Ayodhya, நிலம், Land,

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் பராமரிப்பு மற்றும் துாய்மைப் பணிகளை கண்காணிக்கும் குழுவுக்கு, புதிதாக இரண்டு கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும்படி, அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.


இறுதி கட்ட விசாரணை:

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் ராம ஜென்மபூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை, வரும், டிச., 5ம் தேதி துவங்க உள்ளது.

அயோத்தி நில பராமரிப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு


விசாரணை:

இந்நிலையில், சர்ச்சைக்குரிய நிலத்தின் பராமரிப்பு மற்றும் துாய்மைப் பணிகளை கண்காணிக்க, மூன்று கூடுதல் மாவட்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டிருந்தது.இந்தத் குழுவில் இருந்த ஒரு நீதிபதி ஓய்வு பெற்றுள்ளார். மற்றொரு நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதனால் புதிதாக வேறு இருவரை நியமனம் செய்வது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது.


உத்தரவு:

அப்போது, 'குழுவுக்கு யாரை நியமிக்கலாம் என்பதை அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்து, 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்' என, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

Advertisement
வாசகர் கருத்து (4)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Appu - Madurai,இந்தியா
12-செப்-201709:16:46 IST Report Abuse
Appu இவிங்க ஆட்சில இவிங்களுக்கு சாதகமான முடிவுகளும் பதில்களும் மட்டுமே 99% எதிர்பார்க்க முடியும்...அப்படி தான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது...நீதிமன்றங்களும் இப்போது இவர்கள் கையில் எனும் அளவு தான் நடக்கும் சம்பவங்கள் நினைக்கவைக்கிறது....2018 ல கட்டுறது இவிங்க டார்ஜெட்டா இருக்கும்..அதுக்கு நீதிமன்றம் மூலமாவே எல்லாத்தயும் செஞ்சிட்டு இருக்காங்க...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-செப்-201708:27:45 IST Report Abuse
Srinivasan Kannaiya நீங்கள் தீர்ப்பு சொல்வதற்குள் மறுபடியும் பாபரும் ராமரும் பிறந்து அவர்களே சமாதானமாக போய்விடுவார்கள்...
Rate this:
Share this comment
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
12-செப்-201709:42:42 IST Report Abuse
எமன்அப்போ மக்கள் சமாதானமாக போவதை நீர் விரும்பவில்லை அவர்கள் மதத்தின் பெயரில் அடித்துக்கொண்டு சாகவேண்டும், நீர் மட்டும் ஓமானிலிருந்து சுகமாக வாழவேண்டும் என்ன ஒரு பேராசை???...
Rate this:
Share this comment
Appu - Madurai,இந்தியா
12-செப்-201715:31:54 IST Report Abuse
Appu///எமன் - எமபுரம்,அன்டார்டிகா///"நீர் மட்டும் ஓமானிலிருந்து சுகமாக வாழவேண்டும் என்ன ஒரு பேராசை???"" நீங்களும் அண்டார்டிக்கா தானே எமன் சார்?இந்தியா இல்லையே?அப்டியே உங்க எருமை வாகனத்துல வந்து இங்க தமிழ்நாட்டுல ரெண்டு பழனிசாமிகள் இருக்காங்க அவங்களுக்கு கயிறு கண்ணி போட்டு புடிச்சிட்டு போறேளா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X