அகிலேஷ், ஸ்டாலின் இல்லையா? வாாிசு அரசியல் குறித்து ராகுல் கேள்வி Dinamalar
பதிவு செய்த நாள் :
அகிலேஷ், ஸ்டாலின் இல்லையா?
வாாிசு அரசியல் குறித்து ராகுல் கேள்வி

வாஷிங்டன்: ''வாரிசுகள் பதவிக்கு வருவது, ஒரு பிரச்னைதான். அதே நேரத்தில், அதை தவிர்க்க முடியாது; பல்வேறு நாடுகளில் இதுதான் நடக்கிறது,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

 அகிலேஷ்,Akhilesh,  ஸ்டாலின், Stalin, அரசியல் வாாிசு,Political heir, கலிபோர்னியா பல்கலை, California University,  காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்,Congress Vice President Rahul,  அமெரிக்கா, USA,  இந்தியா , India, நடிகர் அபிஷேக் பச்சன்,Abhishek Bachchan,  அம்பானி, Ambani,ராகுல்,Rahul,அரசியல்,Political,

அமெரிக்கா சென்றுள்ள, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், கலிபோர்னியா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்; அவர் கூறியதாவது: அரசியல் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் வாரிசுகள் பதவிக்கு வருவது, ஒரு பிரச்னையாகவே உள்ளது. அதே நேரத்தில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இதுதான் நடக்கிறது.
நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் வாரிசு தான்; பிரபல தொழிலதிபர்கள் அம்பானிகளும் வாரிசு தான்.அரசியலில்,

சமாஜ்வாதி யின் அகிலேஷ் யாதவ், தி.மு.க., வின், ஸ்டாலின், பா.ஜ.,வில் பிரேம்குமார் துமாலின் மகன் அனுராக் தாக்குர் ஆகியோரும் வாரிசு தான். வாரிசுகள் பதவிக்கு வருவது, இந்தியாவில் சகஜமான ஒன்றுதான்.
ஆனால், என்னை மட்டும் ஏன் வாரிசுத் தலைவர் என குறிவைக்கின்றனர் என தெரியவில்லை.காங்., தலைமையை ஏற்பீர்களா என்றால்,அதற்கு தயாராக உள்ளேன். ஆனால், முறைப்படி, உள்கட்சி தேர்தல் மூலம் முடிவெடுக்கப்பட வேண்டும்.
மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத அரசியல்வாதி என்றும், முட்டாள் என்றும் என்னை விமர்சிக்கின்றனர்; இது, அவதுாறை பரப்பும் மிஷினான, பா.ஜ.,வின் வேலை தான். அந்த அவதுாறு பரப்பும் வேலையை செய்பவர், நாட்டை நடத்துபவராகவும் உள்ளார்.

இந்த பொய் பிரசார மிஷினில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், என்னைப் பற்றிய பொய் செய்திகளை பரப்புவதை மட்டுமே வேலையாக செய்து வருகின்றனர். தான் சொல்ல வரும் செய்திகளை சிறந்த முறையில் சொல்ல கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி. அதில் என்னை விட அவர் மிகச் சிறந்தவர். ஆனால், மிகப் பெரிய கூட்டத்தில், குறிப்பிட்ட ஒரு சிலருக்கானதாக மட்டுமே அவரது செய்தி இருக்கும்.

எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்கக்

Advertisement

தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு செயல்படக் கூடியதாக, காங்., உள்ளது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கான காரணம், கட்சியினர் இடையே
ஏற்பட்ட ஆணவம் தான். தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைத்ததால், 2012ல், கட்சியின்மூத்த தலைவர்களிடம் ஏற்பட்ட ஆணவத்தால், மக்களை சந்திக்க மறந்து விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வியடைந்த வாரிசு தலைவர்


அமெரிக்க பல்கலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசியது குறித்து, மத்திய ஜவுளித் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ஸ்மிருதி இரானி கூறியதாவது:அரசியலில் தோல்வியடைந்த வாரிசுத் தலைவர் ராகுல், வாரிசு அரசியல் குறித்து பேசியுள்ளார்.
நம் நாட்டில் தகுதியின் அடிப்படையில் வந்தவர்களே, அரசியலிலும் முன்னேறி உள்ளனர். இதற்கு, மோடி உள்ளிட்டோர், சிறந்த உதாரணங்களாக உள்ளனர். அரசியல் குடும்பத்தில் இருந்து அவர்கள் வரவில்லை; சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அரசியலில் தோல்வியடைந்த ஒருவர், பிரதமரை சிறுமைப்படுத்தும் வகையில், வெளிநாட்டில் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:



வாசகர் கருத்து (36+ 74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
13-செப்-201716:59:02 IST Report Abuse

anandராகுல் அறிவு வளரவே இல்லை..தொழிலும், சினிமாவும், அரசியலும் ஒன்றா? எது கூட எதை ஒப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..உங்களுக்கு இனி அறிவு வளர வாய்ப்பு இல்லை..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
13-செப்-201716:51:35 IST Report Abuse

Endrum Indianஎன்ன முக்கி மோதினாலும் ராஹுலால் அரசில் அங்கம் வகிக்க முடியவில்லையே இது வரை, வெறும் வெத்து வெட்டு, புஷ்வானம்? இதிலிருந்தே அவர் பல வருடமாக 4 ஆம் வகுப்பு கூட தாண்டமுடியாத ஒரு மடச்சாம்பிராணி என்று தெரிகின்றதே வெட்ட வெளிச்சமாக.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
13-செப்-201716:15:56 IST Report Abuse

Karuthukirukkanவாரிசாக இருந்தாலும் மக்கள் ஏற்று கொண்டால் தான் வர முடியும் .. தகுதி இருந்தால் தான் நிலைக்க முடியும் என்றும் சொன்னார் .. அதை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை .. சரி வாரிசாக இருந்தாலும் .. அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிவராக இருந்தாலும் 10 வருடங்கள் பிரதமராக வாய்ப்பு இருந்தும் ஆகவில்லையே ?? இந்த ஆளை கலாய்த்து கொண்டு இருக்கீங்க ?? பிரதமர் ஆக முடியாதவர் என்று .. மன்மோஹனுக்கு பதில் இவர் பிரதமர் ஆகி இருக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும் ??

Rate this:
s t rajan - chennai,இந்தியா
13-செப்-201714:14:44 IST Report Abuse

s t rajanசேர்மன் மகனை சேர்மனாக்குங்க. மேனேஜர் மகனை மேனேஜர் ஆக்குங்க. கலெக்டர் மகனை கலெக்டர் ஆக்குங்க. டீ எஸ் பி மகனை டீ எஸ் பி ஆக்குங்க. அ அப்புறம் மேடை ஏறி பிற்படுத்தோருக்கே போராடுவோம்ன்னு கோஷம் போட்டு ஊரை ஏமாத்துங்க.

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
13-செப்-201713:20:10 IST Report Abuse

siriyaarAt least 1 crore brilliant and talented indians in india than raghul, even some childrens are more matured tha raghul. He is good to be the leader of congress

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
13-செப்-201712:54:59 IST Report Abuse

Aarkayஉனக்கும் ஸ்டாலின் கதிதான் பப்பு வயது ஏறிக்கொண்டே இருக்கிறது.... வடிவேலு, நானும் ரௌடிதான் என சொல்லிக்கொண்டு போலீஸ் ஜீப்பில் ஏறியது போல, நீயும், நானும் ஒரு அரசியல் வியாதிதான் என கூறிக்கொள்ளலாம் உங்கள் frustration எங்களுக்கு புரிகிறது.... ஐயோ பாவம்

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
13-செப்-201711:48:45 IST Report Abuse

Solvathellam Unmaiவெளி நாட்டு சென்று பொய் சொல்லும் ஒருத்தருக்கு, வெளிநாடு போயி ...படி கொடுத்ததற்கு நன்றி...

Rate this:
SRH - Mumbai ,இந்தியா
13-செப்-201711:02:26 IST Report Abuse

SRHஇந்தியாவில் பேசத்தெரியாதவைகள் அமெரிக்காவில் போய் ...கின்றன..

Rate this:
SRH - Mumbai ,இந்தியா
13-செப்-201710:49:02 IST Report Abuse

SRHகாங்கிரஸ் கட்சி என்பது நேருவுக்கு முன்னரே தோன்றிய கட்சி,, சுதந்திரப் போராட்ட வீரர்கள் உருவாக்கிய கட்சி,, அதில் நேரு சேர்ந்து கொண்டு காந்தியின் மூலம் ஆட்டைய போட்டு பிரதமரானார்,, அதிலிருந்து அது என்னமோ உங்க குடும்ப சொத்தாட்டம் ஆகிப்போச்சு,, இதெல்லாம் இங்கே சொன்னால் நான் பிஜேபி சொம்பு. இருந்து விட்டுப்போகிறேன்,, இந்தக்கட்சிக்கு சப்போர்ட் பண்ணி எனக்கு புனிதர் பட்டம் கொடுத்தாலும் தூசிக்கு சமானம்,, இதை என் சொல்றேன்னா இந்த மடையன் இத்தகைய வீரர்களின் தியாகத்தால் உருவான இந்தக்கட்சியை எப்படி அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துகிறான் என்று நீங்களே பாருங்கள் ,,

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
13-செப்-201710:34:49 IST Report Abuse

Mohamed Ilyasராகுல் ஜி நீங்க மறந்த ஒன்றை நினைவு ஊட்டுகிறேன் ஜார்ஜ் புஷ் அண்ட் ஜூனியர் புஷ் ,கிளின்டன் அண்ட் ஹிலாரி , ஜுலேபிக்ர் பூட்டோ அண்ட் பென்சீர் பூட்டோ , பண்டார நாயகி அண்ட் ஸ்ரீமதி பண்டாரநாயகே , இப்படி பல பேர் உள்ளனர்

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்