நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரி ஸ்டாலின் வழக்கு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரி ஸ்டாலின் வழக்கு

சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளும் கட்சிக்கு அழைப்பு விடுக்க,கவர்னருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.

நம்பிக்கை ஓட்டெடுப்பு,Trust vote, ஸ்டாலின்,Stalin, கவர்னர் வித்யாசாகர்ராவ்,  Governor Vidyasagar Rao, பெரும்பான்மை, majority,சென்னை உயர் நீதிமன்றம்,Chennai High Court, சட்டசபை,Assembly, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,Opposition leader Stalin,  குதிரை பேரம்,horse bargain, தமிழக கவர்னர், முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, அ.தி. மு.க பொதுக்குழு , AIADMKGeneralCouncil, வழக்கு,Case,  சென்னை,Chennai,

உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தமிழக சட்டசபையில், தற்போது, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு, 117 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருக்க வேண்டும்.

தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள்,21பேர், அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அதனால், சபாநாயகர் தவிர்த்து, முதல்வர் பழனிசாமிக்கு,113 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தான் உள்ளது. அரசு மீது நம்பிக்கை இழந்த, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 117 ஆளும்

கட்சியை சேர்ந்த, 19 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என, ஆக., 22ல், கவர்னரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்து உள்ளனர்.

எதிர் கட்சி தலைவர் என்ற முறையில், பெரும்பான்மை நிரூபிக்க கோரினேன். தற்போது, 21 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கூறியுள்ளனர். எனவே, இந்த அரசு, பெரும்பான்மையை இழந்து விட்டது.தமிழக கவர்னர், அரசியலமைப்பு சட்ட கடமையை நிறைவேற்றதவறுகிறார்.

வேண்டும் என்றே, நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தாமதம் செய்கிறார். அவ்வாறு தாமதம் செய்வது, குதிரை பேரத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது. இதற்கிடையில், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிரானவர்களை நீக்கி, பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளும் அரசு பல்வேறு தந்திரங்களை கையாள்கிறது.எனவே, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளும் கட்சிக்கு அழைப்பு விடுக்கும்படி, கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.

உயர் நீதிமன்றம் நியமிக்கும் மேற்பார்வையாளரின் கீழ், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த, உத்தர விட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, கொள்கை முடிவு எதுவும் எடுக்க, முதல்வர் பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, விரைவில்

Advertisement

விசாரணைக்கு வருகிறது.'பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும்' : ''சட்டசபையை கூட்டினால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

சென்னையில், அவரது பேட்டி:

என் தலைமையில், தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக், எம்.எல்.ஏ.,க்கள், 10ம் தேதி,கவர்னர் வித்யாசாகர்ராவை சந்தித்தோம்.'முதல்வர் பழனிசாமி அரசுக்கு, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என, வலியுறுத்தினோம்; ஆனால், கவர்னர், எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே, கவர்னர் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்.

கவர்னர், தன் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.சட்டசபையை கூட்டும் அதிகாரம், கவர்னருக்கு மட்டுமே உள்ளது. சபையை கூட்டினால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். பெரும்பான்மை இருந்தால், முதல்வர் பழனிசாமி நிரூபிக்கட்டும்.
பெரும்பான்மையை நிரூபித்த பின், முதல்வர் பழனிசாமி, என்னை விமர்சிக்கட்டும். அ.தி. மு.க., பொதுக்குழு தீர்மானத்தில் தலையிட விரும்பவில்லை. தினகரனுக்கு, எந்த விளம்பரமும் தேடிதர விரும்பவில்லை. எனஸ்டாலின் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
13-செப்-201714:48:43 IST Report Abuse

Snake Babuதமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை, ஆட்சி நடக்கிறபோல ஒரு மாயை உண்டு பண்ணி பிஜேபி கூத்து நடத்திக்கொண்டிருக்கிறது. பழைய கொள்ளைக் கூட்டம் எல்லாம் இனிமேல் ஆட்டம் போட முடியாது. சுடலை வந்தாலும் முன்புபோல தைரியமாக கொள்ளை அடிக்க முடியாது, அராஜகம் செய்ய முடியாது. ஆகையால் சுடலை ஆட்சியை கட்டாயம் வரவேற்கலாம்.

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
13-செப்-201712:51:19 IST Report Abuse

narayanan iyerசரி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றிபெற்றால் தாங்கள் தங்களது எதிர் கட்சி பதவியில் இருந்தும் , எம் எல் ஏ பதவியில் இருந்தும் வெளியேறி விடவேண்டும் .செய்வீர்களா?ஏன் இந்த ஆட்டம் ?

Rate this:
Vimal Kumar - Chennai,இந்தியா
13-செப்-201714:32:48 IST Report Abuse

Vimal Kumarஎங்களுக்கு தான் வெ.மா.சூ.சொ எதுவுமே கிடையாதே......

Rate this:
Chandra prabu - Ang Mo Kio,சிங்கப்பூர்
13-செப்-201712:31:13 IST Report Abuse

Chandra prabuஎன்னை பொறுத்தவரை சுடலையன் வழக்கு போட்டதுதான் சரி. அவசியமானதும் கூட. தமிழ் மக்கள் நம்மை கேனையர்களாக நினைக்கும் தினகரனுக்கும் அவர்களின் அல்லக்கை எம் எல் ஏ-க்களின் முகத்திரை இதனால் கிழிபடும்.

Rate this:
Krishna Prasad - Chennai,இந்தியா
13-செப்-201710:39:41 IST Report Abuse

Krishna Prasad"தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள்,21பேர், அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்" அவர்கள் அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லவில்லை CM மீது தான் நம்பிக்கை இல்லை என்று சொன்னார்கள். கேஸ் நிலைக்குமா

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
13-செப்-201709:40:52 IST Report Abuse

mindum vasanthamசெப்டம்பர் 20 திமுகவில் குண்டு வெடிக்கும் நாள்

Rate this:
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
13-செப்-201715:30:17 IST Report Abuse

சூரிய புத்திரன்ஹாஹாஹா.... 2G ஸ்பெக்ட்ரம் ஊழல்..... தீர்ப்பு..... கனிமொழி.... திஹார் சிறை ..... கொசுக்கடி..... லக லக லக லக லக.........

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201708:43:18 IST Report Abuse

Srinivasan Kannaiyaகடல் அலை கூட ஓய்ந்து விடும் போல உள்ளது... இவரது அளப்பரிய ஆசை ஓயாது போல உள்ளது...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-செப்-201711:07:20 IST Report Abuse

Sanny ஆசையே அலைபோல, நாம் எல்லாம் அதுக்கு மேலே என்று ஒருவர் பாடிட்டு போய்விட்டார். தெரியுமா?...

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
13-செப்-201708:15:04 IST Report Abuse

mindum vasanthamStalin is too late

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-செப்-201707:50:21 IST Report Abuse

Darmavanஆளுநர் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை... யோசனை சொல்லவும் அதிகாரம் இல்லை.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-செப்-201707:21:06 IST Report Abuse

Darmavanகருத்துக்கள் தெரியவில்லை

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
13-செப்-201706:59:52 IST Report Abuse

தேச நேசன் ரொம்ப ஆட்சிக்கனவு காண்கிறார் தேர்தலே வந்தாலும் ஆர் கே நகர்போல பணவினியோகம் தாராளமாக நடக்கும் தேர்தல் கமிஷன் அதே வழியில் தேர்தலை ரத்து செய்துவிடும் ஆண்டுக்கணக்கில் ஜனாதிபதி ஆட்சிதான்

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement