கவர்னர் மீது மரியாதை குறைகிறது: தினகரன் கடுப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கவர்னர் மீது மரியாதை
குறைகிறது: தினகரன் கடுப்பு

மதுரை: ''கவர்னர் மீதான மரியாதை குறைந்து கொண்டே வருகிறது,''என, தினகரன் தெரிவித்தார்.

கவர்னர், Governor, தினகரன்,Dinakaran, அ.தி.மு.க பொதுக்குழு, AIADMKGeneralCouncil, சசிகலா, Sasikala,இ.பி.எஸ்.,EPS,  ஓ.பி.எஸ்.,OPS,  ஜெயலலிதா ,Jayalalithaa,  பொதுச் செயலர், General Secretary, முதல்வர் பழனிசாமி , Chief Minister Palanisamy,

மதுரையில், நேற்று அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் அதிகாரம் எனக்கும், சசிகலாவுக்கும் மட்டுமே உள்ளது. இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., நிறைவேற்றிய தீர்மானங்கள் செல்லுமா என்பது, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே தெரிய வரும்.இருக்கிற

வரை, கட்சி பதவி மற்றும் ஆட்சியில் இருக்க வேண்டும் என, நினைக்கின்றனர். ஆட்சி தொடர்ந்தால், கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதாலேயே, முதல்வரை மாற்ற முயற்சிக்கிறோம். இந்தஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வேலையை துவங்கி விட்டேன்.

ஜெயலலிதா இருந்த பொதுச் செயலர் பதவியை, யாரும் வகிக்கக் கூடாது என்றால், அவர் வகித்த முதல்வர் பதவியில், பழனிசாமி இருப்பது ஏன்... பிப்., 15ல்,சசிகலா சிறைக்கு சென்ற சமயத்தில், பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தோம். இதற்கு, 12 எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி,வீரமணி, பெஞ்சமின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, வெளியேற முயன்றனர்; நாங்கள் தடுத்தோம்.

செம்மலை எதிர்ப்பு தெரிவித்து,ஓ.பி.எஸ்., அணிக்கு சென்றார். அதனால், எங்கள் மீது அவர்களுக்கு வருத்தமில்லை.பெரும்பான்மை இல்லாத,

Advertisement

முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்து, மீண்டும், எம்.எல்.ஏ.,க்களை கூட்டி பதவி ஏற்கட்டும்.இன்னும் இரு நாட்களில், கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். கவர்னர் மீதான மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
14-செப்-201703:54:00 IST Report Abuse

Sundeli Siththarகட்சிப் பதவிக்கும், அரசுப் பதவிக்கும் வித்தியாசம் தெரியாத ஒருவரை நம்பியா அதிமுகவில் ஒரு சிலர் இருக்கிறார்கள்?

Rate this:
kurinjikilan - Madurai,இந்தியா
13-செப்-201714:46:20 IST Report Abuse

kurinjikilanமரியாதை கெட்டவரெல்லாம் மரியாதையை பற்றி பேசுவது ஆகாது..

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
13-செப்-201714:37:27 IST Report Abuse

Indhuindianகவர்னரின் நிலையை நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் எப்படியாவது பாடு பட்டு திருவாளர் தினகரனின் மரியாதையை சம்பாதிக்க பெரு முயற்சி செய்ய வேண்டும் - இப்படிக்கு தமிழக மக்கள்

Rate this:
s t rajan - chennai,இந்தியா
13-செப்-201714:19:41 IST Report Abuse

s t rajanஇவனெல்லாம் மானம் மரியாதையைப் பற்றி பேசுற நிலை வந்திடுச்சே ? ஜெயா அடித்துத் துரத்திய பைய்யன்... என்னம்மா பேசுரான்... மக்கள் இன்னும் இவரைப் பேசவிடறாங்களே....

Rate this:
RAVICHANDRAN.M - Trichy,இந்தியா
13-செப்-201714:00:31 IST Report Abuse

RAVICHANDRAN.Mயாருமே இல்லாத கடையில் யாருக்காக டீ ஆத்தறீங்க... தலைவரே ................ ஃஃஃ

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
13-செப்-201713:56:03 IST Report Abuse

narayanan iyerதினகரன் AIADMK சட்டப்படி ஒருவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பதவி வகிக்க முடியும் . நீயோ, சசிகலாவோ அப்படி இல்லை . நீங்களே உருவாக்கி உட்கார்ந்து கொண்டு சப்தம் போடுகிறீர்கள் . வெறுமே காலத்தை போக்கி நடக்கின்ற ஆட்சியை கெடுக்காதே . அவர்களை வேலை செய்யவிடு .

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
13-செப்-201713:20:32 IST Report Abuse

Devanatha Jagannathanஉங்களுக்கு பதவியில் இருக்கும் கவர்னர் மேல மரியாதைக் குறையுது ஜெயிலில் இருக்கும் சசி மேல பாசம் அதிகமாகுது.

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
13-செப்-201712:48:04 IST Report Abuse

tamilselvanடேய் தினகரன் இன்னம் கொஞ்ச நாள் உன் வாழ்க்கை அப் போறும் நிரந்தரம் திகார் ஜெயில்

Rate this:
Aarkay - Pondy,இந்தியா
13-செப்-201712:45:47 IST Report Abuse

Aarkayஇங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு முறையாவது படித்துப்பார் உன் மேலும், உன் வகையறாக்கள் மேலும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை உணர்வாய் கொள்ளையடித்தது போதாதா? ஏன் இந்த வெறி? அடங்கு

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
13-செப்-201712:25:54 IST Report Abuse

Poongavoor RaghupathyGovernor of Tamilnadu is not working as per the democratic laws.After all the opposition is asking Edappadi to prove his majority and also Edappadi is saying that he has got majority then why Governor is not ordering for proving of majority. Only reason for this seems to be that the Governor wants to support Edappadi with the fear of Edappadi loosing his majority.The Governor possibly may be acting as per the advise of BJP (MODIJI) and they do not want DMK in power for Tamilnadu at any cost. How people will have faith in democracy. Democracy seems to have been buried. Edappadi can comfortably be the chief Minister once he proves his majority- Why the Governor is reluctant for a long time and hence all these doubts arise.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement