எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்

Added : செப் 12, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எம்.ஜி.ஆர்., நினைவாக 100, 5 ரூபாய் நாணயங்கள்

முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக, அவரது உருவம் பொறித்த, 100 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை, மாநிலம் முழுவதும் தமிழக அரசு கொண்டாடி வருகிறது; இதை மேலும் சிறப்பிக்கும் விதத்தில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிட வேண்டு மென்ற கோரிக்கை இருந்தது.
டில்லி வந்து பிரதமரை சந்தித்தபோது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே, தனித்தனியே இந்த கோரிக்கையை வைத்தனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த வட்ட வடிவில் அமைந்த, 100 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான இந்திய நாணயச்சட்டம் பிரிவின் கீழ், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. நுாறு ரூபாய் நாணயத்தில், வெள்ளி, 50 சதவீதமும், தாமிரம், 40 சதவீதமும், நிக்கல், 5 சதவீதமும், துத்தநாகம், 5 சதவீதமும் கலந்திருக்கும். 44 மி.மீ., விட்டம் உடைய, இந்த நாணயத்தைச் சுற்றிலும், வரிவரியாக, 200 கோடுகளும் இருக்கும். இந்த நாணயம், 35 கிராம் எடை உடையதாக இருக்கும். ஐந்து ரூபாய் நாணயத்தில், 75 சதவீதம் தாமிரம், 20 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து காணப்படும். 23 மி.மீ., விட்டம் உடைய இந்த நாணயத்தைச் சுற்றிலும், 100 கோடுகள் இருக்கும்.இந்த நாணயத்தின் எடை, 6 கிராமாக இருக்கும். இந்த உத்தரவு உடனடியாக, அமலுக்கு வருவதாகவும், மத்திய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
நாணயங்கள் தயாரிக்கும் பணி முடிந்ததும், தமிழக அரசுடன் ஆலோசித்து, ஒரு குறிப்பிட்ட தேதியில், எம்.ஜி.ஆர்., நினைவு நாணயங்கள் வெளியிடப்படுமென, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

-- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவிவாலிதாசன் - தமிழ்நாடு,இந்தியா
13-செப்-201715:00:51 IST Report Abuse
கவிவாலிதாசன் மனதார வரவேற்கிறோம். மத்திய அரசுக்கு நன்றிகள். மக்களை மிகவும் மதித்து, நேசித்த தமிழக அரசியல் புரட்சி தலைவர், பொன்மனச்செம்மல். தனது திரைப்பட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் கொடிகட்டி பறந்தவர். தமிழக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல தலைவருக்கு கிடைத்த அங்கீகாரம் இது. மீண்டும் பாராட்டுகிறோம்.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
13-செப்-201714:19:59 IST Report Abuse
arabuthamilan கூத்தாடிகளுக்கெல்லாம் நாணயம் வெளியிடுகிறது நம்ம இந்தியாவில் மட்டும்தான். கர்மம்.. கர்மம். நாட்டை குட்டி சுவராக்கியத்தில் இந்த கூத்தாடிக்கு பெரும் பங்குண்டு. யார் சொன்னா இவர் லஞ்சம் வாங்கவில்லை என்று. ஜேப்பியார், உடையார் எல்லாம் இவருடைய பினாமிகள்தானே.
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
13-செப்-201711:33:33 IST Report Abuse
Krishna Prasad வரவேற்கத்தக்கது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X