அ.தி.மு.க.,வில் சசிகலாவின் பொதுச்செயலர் பதவி பறிப்பு! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
 சசிகலா, Sasikala,பொதுச்செயலர், General Secretary,அ.தி.மு.க பொதுக்குழு,AIADMKGeneralCouncil, தினகரன், Dinakaran, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, துணை முதல்வர் பன்னீர்செல்வம், Deputy Chief Minister Panneerselvam, செயற்குழு, Executive Committee, இரட்டை இலை,Irattai ilai, எம்.ஜி.ஆர்.,MGR, ஜெயலலிதா, Jayalalithaa,அ.தி.மு.க.,AIADMK,சென்னை, Chennai,

சென்னை: ஒட்டுமொத்த கட்சி தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி, அ.தி.மு.க., பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச்செயலர் பதவியை பறித்து, அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், கட்சியில் சசிகலா செய்த நியமனம் எதுவும் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், தினகரன் பதவியும் பறிபோனது. கட்சியை வழிநடத்த, முதல்வர் பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும், முழு அதிகாரம் வழங்கப்பட்டது. ஒன்றுபட்ட, அ.தி.மு.க.,வாக மீண்டும் இயங்கவும், இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், பொதுக்குழுவில் சபதம் ஏற்றனர்.

 சசிகலா, Sasikala,பொதுச்செயலர், General Secretary,அ.தி.மு.க பொதுக்குழு,AIADMKGeneralCouncil, தினகரன், Dinakaran, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, துணை முதல்வர் பன்னீர்செல்வம், Deputy Chief Minister Panneerselvam, செயற்குழு, Executive Committee, இரட்டை இலை,Irattai ilai, எம்.ஜி.ஆர்.,MGR, ஜெயலலிதா, Jayalalithaa,அ.தி.மு.க.,AIADMK,சென்னை, Chennai,

அ.தி.மு.க.,வில், இரு அணிகளாக செயல்பட்ட, முதல்வர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்துள்ள நிலையில், அக்கட்சியின் முதல் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், நேற்று சென்னை, வானகரத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில்,

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விபரம்:* தமிழக மக்களின் நலன் கருதி, அ.தி.மு.க., என, ஒன்று பட்ட ஒரே இயக்கமாக,ஜெ., தலைமையின் கீழ் பணியாற்றியதை போன்று,மீண்டும் பணியாற்ற முடிவெடுத்து இருப்பதை, பொதுக்குழு அங்கீகரித்து ஒப்புதல் அளிக்கிறது. எம்.ஜி.ஆர்., தந்த வெற்றிச் சின்னமான, இரட்டை இலையையும், அ.தி.மு.க., என்ற பெயரையும் மீட்டெடுத்து, கட்சியை வெற்றிப் பாதையில் நடத்தி செல்ல, இப்பொதுக்குழு உறுதி ஏற்கிறது
* ஜெ., நியமித்த நிர்வாகிகள், அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட, இப்பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது. அமைப்பு தேர்தல் வழியாக, பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெ.,வால் அங்கீகரிக்க பட்ட நிர்வாகிகள், அவரவர் பணியில் தொடர்வர்

* ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வை கைப்பற்றவும், அபகரிக்கவும்,நம் அரசியல் எதிரிகளும், நம்மை அழிக்க நினைக்கும் மாற்றாரும் கட்டியிருந்த, மனக்கோட்டைகளை தவிடு பொடியாக்கி, ஜெ., வழியில் கட்சியை, ஆட்சியையும் சிறப்புற வழிநடத்தி செல்லும்

Advertisement

முன்னோடிகளுக்கு, பொதுக்குழு பாராட்டுக்களை தெரிவிக்கிறது
* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை, இனி யாராலும் ஒருபோதும் நிரப்ப முடியாது. எனவே, அ.தி.மு.க.,வில் இனி பொதுச்செயலர் என்ற பொறுப்பு இல்லை;

* ஜெ., புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் நிர்வாக அமைப்பினை சீர்குலைக்கும் நோக்கிலும், அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி நியமிக்கப்படாத, தினகரன் வெளியிடும் எந்த அறிவிப்பும் செல்லாது
* ஜெ., எண்ணப்படி கட்சியை வழிநடத்த, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பொறுப்புகளை உருவாக்க, பொதுக்குழு தீர்மானிக்கிறது. இவர்கள், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளராகவும், முதல்வர் பழனிசாமி, இணை ஒருங்கிணைப்பாளராகவும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட, பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது

* பொதுச்செயலருக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு, முழுமையாக வழங்கப்படுகிறது. தேர்தல் கமிஷன், அரசு, நீதிமன்றம், வங்கி கணக்கு உள்ளிட்ட, அனைத்து வரவு செலவுகளுக்கும், இந்த இருவரும் இணைந்து கையெழுத்திடுவர்.
மேலும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, படிவம், 'ஏ' மற்றும், 'பி' உள்ளிட்ட அனைத்து வகை ஆவணங்களிலும், கட்சி அறிவிப்பு, நியமனம், ஒழுங்கு நடவடிக்கைகளிலும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திடுவர்
* அ.தி.மு.க., சட்டதிட்ட விதிகளில் செய்யப் படும், இந்த மாற்றங்களுக்கும், திருத்தங்களுக்கும், பொதுக்குழு முழு ஒப்புதல் அளிக்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த 2 தீர்மானங்கள்


* ஜெ., மறைவுக்கு பின், 2016 டிச., 29ல் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா, தற்காலிக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்வதோடு, அவர் மேற்கொண்ட நியமனம், நீக்கம், சேர்த்தல் உள்ளிட்ட, அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது

* அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி நியமிக்க படாத, தினகரன் வெளியிடும் எந்த அறிவிப்பும் செல்லாது


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (63)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
thangadurai - TIRUVANNAMALAI,இந்தியா
14-செப்-201710:56:13 IST Report Abuse

thangaduraiநல்லது முதலில் மன்னார்குடி கும்பலை விரட்டியதற்கு. ஆனால், இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களும் திருந்தமாட்டார்கள். அப்படியே திரும்ப ops eps என மனம் மாறிவிடுவர். சசிகலா எப்போ ஜெயலலிதா மாதிரி கொண்டை போட்டு பால்கனியில் நின்று போஸ் கொடுக்க கட்சியினர் அடிமைகள் மாதிரி ஒரு வேலைஆளால் நடத்தப்பட்டார்களோ அப்போதே ops திரும்ப ஆரம்பித்திருக்க வேண்டும். முகஸ்துதி பாடிட்டு சின்னமா எங்கம்மா உங்கம்மா னு ஸீன் போட்டுட்டு இப்போ வெளியில துரத்துறோம்னு சொன்ன யார் நம்புவா?.

Rate this:
Arasan - Thamizhnadu,இந்தியா
13-செப்-201715:06:02 IST Report Abuse

Arasanநல்லது முதலில் மன்னார்குடி கும்பலை விரட்டியதற்கு. ஆனால், இது மக்களை ஏமாற்றும் செயல். மக்களும் திருந்தமாட்டார்கள். அப்படியே திரும்ப ops eps என மனம் மாறிவிடுவர். சசிகலா எப்போ ஜெயலலிதா மாதிரி கொண்டை போட்டு பால்கனியில் நின்று போஸ் கொடுக்க கட்சியினர் அடிமைகள் மாதிரி ஒரு வேலைஆளால் நடத்தப்பட்டார்களோ அப்போதே ops திரும்ப ஆரம்பித்திருக்க வேண்டும். முகஸ்துதி பாடிட்டு சின்னமா எங்கம்மா உங்கம்மா னு ஸீன் போட்டுட்டு இப்போ வெளியில துரத்துறோம்னு சொன்ன யார் நம்புவா?. இது முழுக்க முழுக்க மீதி இருக்கிற நாலு ஆண்டில் ஆட்டையே போடத்தான் இப்ப பிரச்சனை வேணாம்னு சேந்துக்குறானுங்கோ. நாலு ஆண்டு ஆட்சி முடிந்தவுடன் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் நிற்பார்கள் அல்லது சின்னம்மா விடுதல் ஆகி வரும்போது போய் மாலை போட்டு கூனு கும்பிடு போட்டு தியாகத்தலைவினு சொல்லுவாங்க. இவனுங்க இப்படி தான் மக்கள் எல்லாத்தையும் இடந்தகத்துல வாங்கி அடுத்த காதுல விட்டுட்டு போய்டே இருக்கனும். அஞ்சு வருடம் தொல்லப்படக்கூடாதுனா அரைமணிநேரம் இவனுங்க மற்ற அரசியல் காட்சிகள் பண்ணின ஊழல் இவைகளை பற்றி யோசித்து வாக்களியுங்கள். கட்டாயமாக வாக்களியுங்கள்.

Rate this:
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
13-செப்-201714:24:57 IST Report Abuse

த.இராஜகுமார் ஆவலுடன் எதிர்பார்த்த மாதிரி????? அப்படியா சொல்லவே இல்ல..

Rate this:
Jayaraman Sekar - Bangalore,இந்தியா
13-செப்-201713:55:24 IST Report Abuse

Jayaraman Sekarஅண்ணா திமுக அம்மா அண்ணா திமுக புரட்சித்தலைவி அம்மா எனும் பெயரில் தான் இவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி உள்ளார்கள். அனைத்திந்திய அண்ணாதிமுக என்னும் பெயரில் இவர்களால் பொது குழு செயற் குழுவை கூட்ட முடிய வில்லை. தேர்தல் ஆணையர் தீர்ப்பு வந்த பிறகு தான் இவர்கள் பொது குழுவை கூட்ட முடியும். ஆனா ஒன்பது மாதங்களாக ஏன் தேர்தல் ஆணையர் அல்லது ஆணையம் தீர்ப்பு வழங்க வில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி == அண்ணா திமுக அம்மா அண்ணாதிமுக புரட்சித்தலைவி அம்மா இவர்கள் இணைந்ததாவது தேர்தல் கமிசன் அங்கீரம் பெற்றதா? தேர்தல் கமிசன் வேலை செய்யுதா வேடிக்கை பார்க்குதா? கவர்னர் செயல் உண்மையிலேயே சரியானதா? கண்ணுக்கு எதிராக மத்திய அரசாங்கத்தின் கை வேலை செய்வது தெரிகிறதே? பி ஜெ பி வர வேண்டுமென்று விரும்பும் நாங்களும் கூட மன வருத்தப் படும்படி மத்திய அரசாங்கம் நடக்கிறதே

Rate this:
Mannar Nagarathinam - Ramanathapuram,இந்தியா
13-செப்-201712:50:40 IST Report Abuse

Mannar Nagarathinamதீர்மானங்களில் முன்னாள் முதல்வர் ஜெ மரணம் குறித்த நீதி விசாரணை இடம் பெறவில்லையே??????????????????

Rate this:
Rajasekar K D - Kudanthai,இந்தியா
13-செப்-201713:48:46 IST Report Abuse

Rajasekar K Dஅதெல்லாம் சும்மா நாங்க சொல்லுவோம், அதெ நீ கேட்கக்கூடாது....

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
13-செப்-201714:37:10 IST Report Abuse

தேச நேசன் அது அப்போ இது இப்போ...

Rate this:
13-செப்-201712:47:54 IST Report Abuse

PrasannaKrishnaneven the party can be collapsed.

Rate this:
13-செப்-201712:47:54 IST Report Abuse

PrasannaKrishnaneven the party can be collapsed.

Rate this:
13-செப்-201712:47:54 IST Report Abuse

PrasannaKrishnaneven the party can be collapsed.

Rate this:
13-செப்-201712:47:54 IST Report Abuse

PrasannaKrishnaneven the party can be collapsed.

Rate this:
13-செப்-201712:47:54 IST Report Abuse

PrasannaKrishnaneven the party can be collapsed.

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement