2 லட்சம் ஆசிரியர்களுக்கு 'மெமோ!' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
2 லட்சம் ஆசிரியர்களுக்கு 'மெமோ!'

'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றுள்ள, இரண்டு லட்சம் ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆசிரியர்கள்,Teachers, மெமோ,memo, ஜாக்டோ ஜியோ, jacto geo, அரசு ஊழியர்கள், Civil servants,கால வரையற்ற வேலை நிறுத்தம், Indefinite strike, பள்ளி,school, கல்லுாரிகள்,College, பள்ளிக்கல்வித்துறை ,School Education, நீட் தேர்வு ,neet exam

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார் பில், செப்., 7 முதல், கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

இதனால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணிக்கு செல்லவில்லை; அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பணிகள்

முடங்கி உள்ளன. பல பள்ளிகளில், காலாண்டு தேர்வை நடத்தவும், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் பட்டியலை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்துள்ளது.

இதில், மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வரை பணிக்கு வராதது தெரிய வந்துள்ளது. நிலைமை மோசமாகாமல் தடுக்க, போராட்டத்தில் பங்கேற்று உள்ள ஆசிரியர்களுக்கு, தனித்தனியாக விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கும்படி, மாவட்ட முதன்மை மற்றும் தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வராததால், அவர்களின் வீட்டிற்கே, தலைமை ஆசிரியர்கள் வழியாக, 'மெமோ' அனுப்பப்பட உள்ளது.அதில், 'பணிக்கு வராமலும், விடுமுறைகடிதமும் இல்லாமலும் வேலை நிறுத்தத்திற்கு சென்றதால், தங்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என, விளக்கம் கோரப்படுகிறது.

ஆசிரியர்கள் தரும் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement


'நீட்' குறித்து பேச தடை:


'ஜாக்டோ - ஜியோ' சங்கநிர்வாகிகள், பள்ளி மாணவர்களிடையே, 'நீட்' தேர்வுக்கு எதிராக, பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இதையடுத்து, 'நீட் தேர்வு குறித்து விமர்சனம் செய்யவும், இது தொடர்பாக, பள்ளி பிரார்த்தனை கூட்டம் மற்றும் வகுப்புகளில் உரையாற்றவும், ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-செப்-201718:00:41 IST Report Abuse

மலரின் மகள்////ஜாக்டோ - ஜியோ' சங்கநிர்வாகிகள், பள்ளி மாணவர்களிடையே, 'நீட்' தேர்வுக்கு எதிராக, பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்///போராட்டத்திற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு இருப்பதால், மாணவர்களை தூண்டி விட்டு காரியம் செய்ய முயல்கிறார்களோ என்று என்ன தோன்றுகிறது. எனது முந்தைய கருத்தில் இவர்கள் போக போக மாணவர்களை தூண்டி விடுவார்கள் என்றும், நாங்கள் பள்ளி படிக்கும் பொது இது போன்று நடந்தது என்றும் எழுதினேன். அது தான் நடக்கும் என்று தெரிகிது.

Rate this:
muruganandam - pudukkottai,இந்தியா
13-செப்-201717:55:03 IST Report Abuse

muruganandamநமக்கும் கிழே உள்ளவர் கோடி என்பதை எப்போது உணர போகிறார்கள் ?. இவர்களை விட படிப்பிலும் திறமையிலும் உள்ளவர்கள் நிறைய பெயர் இவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கொடுத்தாலே போதும் என்கிற மனநிலையில் உள்ளார்கள் .

Rate this:
Sivasubramanian - chennai,இந்தியா
13-செப்-201717:41:28 IST Report Abuse

Sivasubramanianசம்பளத்தை ஏற்றுவதற்கு பதிலாக சம்பளத்தை குறைக்க வழிவகை செய்யலாம். இவர்களுக்கு திறமை இருந்தால் பணியிலிருந்து விலகி வெளியில் சென்று வேலை பார்த்து அவர்கள் விரும்பும் சம்பளம் வாங்கிக்கொள்ளலாம். சென்றுவிடுங்கள் ஊழியர்களே. நீங்கள் அப்புறப்படுத்தப்பட்டால், நல்ல வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் அந்த வாய்ப்பினை பெறுவார்கள். அவர்களால் இந்த சமூகம் உருப்படட்டும். விலகிவிடுங்கள் ஊழியர்களே.

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
13-செப்-201716:53:38 IST Report Abuse

ramanathanதனியார் கல்வி நிறுவனங்களை பாருங்கள் அவர்கள் கூடுதல் நேரம் வேலை பார்த்து குறைந்த சம்பளம் தான் வாங்குகிறார்கள் இவர்கள் அரசையும் மக்களையும் மிரட்டுகிறார்கள் அரசு எஸ்மா டெஸ்மா சட்டங்களை பயன்படுத்தி ஒடுக்கவேண்டும்

Rate this:
isaac - Thanjavur ,இந்தியா
13-செப்-201715:49:36 IST Report Abuse

isaacமிகவும் குறைந்த வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்திக்கொண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் தினமும் போறாண்டிக்கொண்டிருக்கிறார்கள் சுமார் 80% மக்கள்., இவர்கள் 58 வயதிற்குமேல் வாழ வழி தேடுகிறார்கள்.,அரசாங்க வேலைக்கு காத்திருப்போர் பட்டியல் ஏராளம் .,

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
13-செப்-201715:02:54 IST Report Abuse

ganapati sbஆசிரியர்கள் முன்னுதாரணமாய் இருக்க வேண்டும் இவர்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் இவர்கள் அமைப்பு நீதிமன்றம் மூலம் போராடலாம் தெருவில் போராடுவது தவறு

Rate this:
Shake-sphere - India,இந்தியா
13-செப்-201716:29:18 IST Report Abuse

 Shake-sphereஇறகு போட சொல்கிறீர்கள் நீங்கள் . அதற்கெல்லாம் தகுதி உடையவர்கள் அல்ல இன்று உள்ள ஆசிரியர்களும் அரசு அலுவலர்களும். நீதி மன்ற அனுமதியுடன் ஒற்றை ஆர்டரில் ஒரு லட்சம் பேரை உழைத்து உண்ணும் பொருட்டு வெளியில் அனுப்பி விட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய சொல்லுங்கள்....

Rate this:
moorthi - Namakkal,இந்தியா
13-செப்-201712:17:46 IST Report Abuse

moorthiமேலே நிறைய பேர் தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஆனால் எனது கருத்து ஒரு ஆசிரியர் 30 ஆண்டுகள் தமிழக மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து பணி நிறைவு பெற்று வீட்டுக்குச் செல்லும்போது வெறும் கையோடு செல்லாதிருக்கவே GPF வேண்டும் என்று போராடுகின்றனர். இதில் தவறு எதுவும் இல்லை. அவர்கள் 58 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையை சமாளிப்பார்கள்.

Rate this:
isaac - Thanjavur ,இந்தியா
13-செப்-201716:00:31 IST Report Abuse

isaacஓகே பென்ஷன் கேக்குறீங்கல்ல பழைய சம்பளத்தை வாங்கிக்குங்க ., உங்கள விட கஷ்டப்படற மக்களை பாருங்க ., தனியார் துறைல 6000 சம்பளத்துக்கு 8 மணிநேரம் வேலை செய்றவர பாருங்க ., இவர்களும் எல்லாரும் படித்தவர்களே...

Rate this:
Shake-sphere - India,இந்தியா
13-செப்-201716:20:05 IST Report Abuse

 Shake-sphereஅபரிமிதமான கொடுக்கப்பட்ட சம்பளத்தில் எதிர் காலத்திற்கு என சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெறும் கையோடு எங்கே செல்கிறார்கள். பணிக்காலத்தில் மக்களின் வரிப்பணத்தை சம்பளம் என்ற பெயரில் கொள்ளையடித்துக்கொண்டல்லவா செல்கிறார்கள் ஆசிரியர்கள். அதில் அரசு ஊழியர்கள் கூடுதலாக லஞ்ச கொள்ளை வேறு....

Rate this:
periasamy - Doha,கத்தார்
13-செப்-201711:54:27 IST Report Abuse

periasamyஐந்து வருஷம் எம் எல் ஏ வாக இருந்தால் வாழநாள்பூரா ஓய்வூதியம் பெறும் இவர்கள் வாழ்நாள் பூராவும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கக் கூடாது?

Rate this:
periasamy - Doha,கத்தார்
13-செப்-201711:49:24 IST Report Abuse

periasamyஎம் எல் ஏ க்கள் சம்பளத்தை லட்சக்கணக்கில் உயர்த்திக் கொண்ட பழனியும் அமைச்சுகளும் ஏன் ஊழியர்களின் சலுகைகளை வழங்கக் கூடாது?

Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201710:23:39 IST Report Abuse

Venkiஇவர்களெல்லாம் கல்வி போதிக்கும் ஆசிரியர்களா வெட்கம் பிணம் தின்னும் கழுகுகள்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement