ஓராயிரம் தினகரன் வந்தாலும் ஒன்றும் முடியாது! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஓராயிரம் தினகரன் வந்தாலும்
ஒன்றும் முடியாது!

''ஒரு தினகரன் அல்ல; ஓராயிரம் தினகரன் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

 தினகரன்,Dinakaran, முதல்வர் பழனிசாமி ,Chief Minister Palanisamy, அ.தி.மு.க பொதுக் குழு,AIADMKGeneralCouncil,  நீதிமன்றம்,court, தி.மு.க., DMK,துரோகி,traitor, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,DMK chief executive Stalin, சட்டசபை,assembly, துணைமுதல்வர் பன்னீர்செல்வம்,Deputy Chief Minister Panneerselvam, தமிழகம், Tamilnadu, முன்னாள் அமைச்சர் வளர்மதி, Former Minister valarmathi,அ.தி.மு.க.,ADMK


அ.தி.மு.க., பொதுக் குழுவில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: பொதுக்குழு நடை பெறாது என, சிலர் எதிர்பார்த்தனர். நீதிமன்றம், நமக்கு நீதி வழங்கியது; நமக்கு கிடைத்த முதல் வெற்றி. எம்.ஜி.ஆர்., மறைந்த போது, உடைந்த கட்சியை ஜெ., மீண்டும் இணைத்து, ஆட்சியை பிடித்தார்.

அவர் மறைந்ததும், கட்சியை அழித்து விடலாம்; ஆட்சியை கவிழ்த்து விடலாம் என, நினைத்தனர். தி.மு.க., எவ்வளவோ பிரச்னைகளை துாண்டியது. அதை எல்லாம், உங்கள் ஆதரவால் தவிடுபொடியாக்கி உள்ளோம்.

ஜெ.,வால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினகரன், நம்மை துரோகி என்கிறார். அவரை போல, துரோகிகள் யாரும் இல்லை. ஜெ.,க்கு, எவ்வளவோ சிரமத்தை கொடுத்தனர். அதை
எல்லாம் தாங்கிக் கொண்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தினார்.

கட்சியில் இருக்கக் கூடாது என, ஜெ.,வால் நீக்கி வைக்கபட்டவர்கள், கட்சிக்கும், ஆட்சிக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். அதை, எப்படி ஏற்க முடியும்; இன்றைக்கு ஆட்சியை கவிழ்ப்போம் என, கூறுகின்றனர். ஓராயிரம் தினகரன் வந்தாலும், இந்த ஆட்சியையோ, கட்சியையோ, அசைக்கவோ, ஆட்டவோ முடியாது.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், எப்போது பார்த்தாலும், 'இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும்' என்கிறார். இந்த ஆட்சி,முறைப்படி தேர்தலில் வென்ற ஆட்சி; சட்டசபையில் நிரூபிக்கப்பட்ட ஆட்சி. ஒன்றும் செய்ய முடியாது.

ஸ்டாலின், முதல்வராகி விடலாம் என, நினைக்கிறார்; அவரால், கட்சிக்கே தலைவராக முடியவில்லை. முதலில், கட்சி தலைவராகட்டும். அப்புறம், முதல்வர் பதவியை நினைத்து பார்க்கலாம்.அவரது அப்பாவாலேயே, அ.தி.மு.க., வை வெல்ல முடியவில்லை. அவர், எங்கே இந்த கட்சியை வெல்ல முடியும்?இவ்வாறு முதல்வர் பேசினார்.

துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., மறைவுக்கு பின், தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றும் பெரும் பொறுப்பை, நம்மிடம் கொடுத்து சென்றிருக்கிறார். 'எனக்கு பின்னாலும், அ.தி.மு.க., 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்' என, ஜெ., கூறினார்.நம் மீதுள்ள நம்பிக்கையில் தான், அவ்வாறு கூறினார்.
அவர் கொடுத்தவாக்குறுதியை, நாம் காப்பாற்ற வேண்டும். சாதாரண அடிமட்ட தொண்டர்களுக்கு, கட்சியிலும், ஆட்சியிலும் பொறுப்புகள் வழங்கியவர் ஜெ., அது, இனிமேலும் தொடரும். உண்மையாக, கட்சிக்கு உழைப்பவர்களுக்கு உயர்வு கொடுப்பது, இனிமேலும் தொடரும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


'சதிகார கூட்டத்தை விரட்டி அடிப்போம்!'

:
அ.தி.மு.க., பொது குழுவில், முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதாவது: அதிகாரத்திற்கு வர முடியாது என்பது தெரிந்ததும், 'ஆட்சியை கலைப்பேன்' என, கூறுகிறார் தினகரன். இதை பார்க்கும் போது, இவர்கள், ஜெ.,வை என்ன பாடுபடுத்தி இருப்பர் என, எண்ணி பார்க்க முடிகிறது. ஜெ., வீதி வீதியாக சென்று, உடல் நலத்தையும் பாராமல், மக்களை சந்தித்து, ஆட்சியை பெற்று தந்தார். 'அந்த ஆட்சியை கலைப்போம்; கட்சியை கைப்பற்றுவோம்' என்கின்றனர்.

அ.தி.மு.க., என்பது, எக்கு கோட்டை; அதை யாராலும் அசைக்க முடியாது. முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும், இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துவர். சதிகார கூட்டத்தை விரட்டி அடித்து, அவர்களுக்கு பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
13-செப்-201714:40:49 IST Report Abuse

ஜெயந்தன்அப்பப்போ டெல்ல்லி க்கு போய் சார்ஜ் ஏத்திட்டு வரீங்க இல்ல... அந்த தைரியம் பேசுது... விரைவில் பேட்டரியை பிடுங்கிட்டா சரியாகிடும்....

Rate this:
13-செப்-201714:37:27 IST Report Abuse

எப்போதும் வென்றான் அட போங்கப்பா.. நீங்களே கவிழ்ந்து விடுவீர்கள்... அந்த நாளை தான் எல்லோரும் எதிர் நோக்குகிறார்கள்..

Rate this:
anvar - paramakudi,இந்தியா
13-செப்-201711:45:14 IST Report Abuse

anvarஉங்க சபதமெல்லாம் தான் பார்த்து தானே வருகிறோம். ஓ.பி.எஸ் ..ம் ஈ.பி. எஸ்ஸும் சேர்ந்து விட்டால் மக்கள் உங்கள் பக்கம் இல்லை. அது தினகரன் பரவாயில்லை என்று தோணுகிறது.

Rate this:
senthilkumar - tamilnadu,இந்தியா
13-செப்-201711:40:01 IST Report Abuse

senthilkumarஒரு ஆள சமாளிக்க முடில ..ஓராயிரம் பேர சமாளிக்க போறானுங்களாம்.பிஜேபி-ய சமாளியா முதல்ல

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
13-செப்-201711:30:16 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)நைனா கவலையே படாத .அடுத்த போராட்டம் எதாவது வரும். நம்மூரு சனங்க எல்லாத்தையும் விட்டு போட்டு, அத்த பாக்க பூடுவானுங்க.

Rate this:
Krishna Prasad - Chennai,இந்தியா
13-செப்-201711:27:55 IST Report Abuse

Krishna Prasadமுதலில் இவர்கள் சின்னத்தை வாங்கவேண்டும் அது தான் முதல் வெற்றி இது அல்ல

Rate this:
bal - chennai,இந்தியா
13-செப்-201711:01:00 IST Report Abuse

balஎல்லோருமே நாடு மாறிகள். ஒருத்தருக்கும் ஒரு நிரந்தர கொள்கை கிடையாது. நேற்று காலில் சாஷ்டாங்கமாக அடிமை போல் விழுந்தார்கள், இன்று தூக்கி எறிந்தார்கள். இதே தினகரனை தோழன் என்றவர் பழனிசாமி. ஆனால் ஒன்று. ஒரு ஏரி பால் இருந்தாலும் ஒரு துளி விஷம் போதும், அத்தனை பாலும் விஷமாக மாறும். அது போல தன இன்றைய ADMK கட்சி.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-செப்-201710:48:05 IST Report Abuse

நக்கீரன்அம்மா வளர்மதி, உன் வாயில ஈயத்தை காய்ச்சித்தான் ஊத்தணும். பச்சோந்தி. மக்களே நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். முழித்திருக்கும்போதே முழியை திருடும் இவர்கள், திரைமறைவில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த அரசியலில் சம்பாதிக்க முடியாது என்று தெரிந்தால், இந்த திருட்டு ... எல்லாம் இந்த பக்கமே வராது. அந்த மாற்றம் என்றைக்கு வருமோ தெரியவில்லை. ஆனால், மக்கள் நினைத்தால் நிச்சயம் முடியும்.

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
13-செப்-201710:33:50 IST Report Abuse

Balaji பழனிசாமி வளர்மதியை தூரத்தில் வைக்கவும்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
13-செப்-201710:25:53 IST Report Abuse

Agni Shivaசிக்கல் தீர்ந்து விட்டது. கட்சி மற்றும் ஆட்சி தற்போது உங்கள் கையில். நிர்வாகத்தை சீர்படுத்துங்கள். இது தரம் கெட்ட அரசு இல்லை என்பதை நிர்வாகத்தை சீர்படுத்தி காட்டுங்கள். ஊழல் என்ற கறையை ஒழியுங்கள். நடந்தவைகள் நடந்தைவைகளாகவே இருக்கட்டும். அதிமுக தலைவர்கள் ஊழலுக்கு இனி எந்த இடமும் கொடுக்காமல் நேர்மையான திறமையான நிர்வாகத்தை தாருங்கள்..விரைவான நிர்வாகத்தை கொடுங்கள்..கல்வி திட்டத்தை உடனே மேம்படுத்த ஆவண செய்யுங்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி திட்டத்தை உருவாக்கி தமிழக மாணவ செல்வங்கள் இந்தியாவின் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெரும் வகையில் மிக சிறந்த கல்வியை கொண்டு வாருங்கள். மத்திய அரசின் ஆதரவு உங்களுக்கு மிகுந்த பக்க பலமாக இருப்பதால் அதிக நிதி பெற்று வளர்ச்சி திட்டங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படுத்தி, அதை துரிதப்படுத்தி மக்களின் மனங்களை கொள்ளை கொள்ளுங்கள்..தமிழம் வாழ வேண்டும்..தமிழன் உயர்வு பெற வேண்டும்..அடுத்த தேர்தலில் பிஜேபி - அதிமுக கூட்டணி 70 சதவீத இடங்களை பெற வேண்டும்.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-செப்-201710:03:17 IST Report Abuse

நக்கீரன்பிஜேபி தனித்து நின்றால் கூட ஏதாவது கொஞ்சம் தேறலாம். ஆனால், பிஜேபி அதிமுகவுடன் சேர்ந்தால் அதற்கும் சங்குதான் நண்பரே...ஏன் தவறான வழி காட்டுகிறீர்கள்?...

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement