‛நீட்' தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

‛நீட்' தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ‛சீட்'

Added : செப் 13, 2017 | கருத்துகள் (77)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நீட் தேர்வு, NEET exam, அரசுப்பள்ளி, Government School, மாணவர்கள், Students,டாக்டர் சீட், Doctor seat, மருத்துவ கல்லூரி,Medical College, தமிழகம் , Tamil Nadu, மருத்துவ படிப்பு,Medical Studies, நீட்,neet, National Eligibility cum Entrance Test ,  medical entrance test,

சென்னை: ‛நீட்' தேர்வு காரணமாக தமிழகத்தில் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


‛நீட்':

மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வான 'நீட்'(National Eligibility cum Entrance Test) தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

நீட் தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவருக்கு டாக்டர் சீட்


5 பேர் மட்டுமே:

தமிழகத்தில் மொத்தமுள்ள 3,534 மருத்துவ இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த 2,314 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் 5 பேர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்தவர்கள். அவர்களில் இருவருக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில்(சிவகங்கை, தருமபுரியில் தலா ஒருவர்) இடம் கிடைத்துள்ளது. மற்ற மூவருக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kuthubdeen - thiruvarur,இந்தியா
13-செப்-201713:30:34 IST Report Abuse
kuthubdeen அரசு பள்ளிகளில் படிப்பவர்களின் கல்வி திறன் மிகவும் குறைவு தான் ,,,மாநில அரசு எவ்வளவு தான் செலவு செய்தாலும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவே இல்லை ...இதற்க்கு காரணம் மாணவர்களா ஆசிரியர்களா..யாரை குறை சொல்வது .ஆசிரியர்கள் பாடம் தான் சொல்லி கொடுக்க முடியும் ..கற்று தேர்ச்சி பெறுவது மாணவர் கையில் ...மருத்துவம் போன்ற முக்கிய துறைகளுக்கு ஜாதி மதம் மட்டும் பார்த்தல் நல்ல மருத்துவரை எப்புடி உருவாக்க முடியும் ... கடுமையான தேர்வுகள் தவறானதா? மார்க் அதிகம் வாங்கணும் என்பதற்காக சுலபமான பரீட்சை வைக்கணும் என்று விரும்புகிறார்கள் போலும் ,
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
13-செப்-201713:13:09 IST Report Abuse
Karuthukirukkan இங்கே இரண்டு விஷயத்தை பார்க்க முடியுது .. ஒன்று கல்வி தரத்தை உயர்த்தவில்லை.. நாமக்கல் பள்ளிகளுக்கு ஆதரவா போராட்டம் நடக்குது .. என்ன தரத்தை உயர்த்த வேண்டும் ?? வேறு எந்த மாநிலத்தில் அரசு நடத்தும் பள்ளிகளில் இருந்து இத்தனை மாணவர்களேனும் மருத்துவ , பொறியியல் இடம் கிடைக்கிறது ?? மத்திய அரசை நம் வரி பங்கை ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க , கல்வி தரத்தை உயர்திரலாம் .. இந்தியாவின் அனைத்து இடங்களிலும் அரசு மற்றும் தனியாருக்கு வித்தியாசம் இருந்து கொண்டு தான் இருக்கு .. ஒப்பீட்டு அளவில் தமிழகம் ஆயிரம் மடங்கு பரவா இல்லை .. வெறும் 12 வகுப்பு தேர்வு என்ற போதும் தனியார் பள்ளிகள் திரும்ப திரும்ப தேர்வு நடத்தி பரீட்சை எழுத வைப்பார்கள் .. அரசு பள்ளி மாணவர்களுக்கு இது கிடைக்காது .. ஆனால் ஒரு வாய்ப்பாவது இருந்தது .. இருக்கும் பாடத்தை படித்தால் அவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்று .. கடந்த 10 ஆண்டுகளில் அரசு பள்ளியில் இருந்து 350 பேரு சேர்ந்து இருக்காங்க ... இந்த ஆண்டு வெறும் 2 பேர் .. இதில் திரவிட காட்சிகள் அநியாயம் செய்தார்கள் 350 பேர் தான் சேர முடிந்தது என்று பிஜேபி காரர்கள் சொல்லி வந்தார்கள் .. கொடுமை இப்போ உங்க சாதனை 2 பேர் .. பிறகு நாமக்கல் பள்ளிகளுக்கு வருவோம் .. நாமக்கல் பள்ளிகளில் சென்ற ஆண்டு நீட் கோச்சிங் நடத்தலை.. அதனால் அந்த பள்ளிகள் அழிந்துவிட்டன நீட்டால் என்று பிஜேபியின் உளறுவது வேடிக்கை .. அந்த பள்ளிகளுக்கு நீட் மாபெரும் புத்துயிர் கொடுத்து இருக்கு .. அனைத்து நாமக்கல் பள்ளிகளும் நீட் வகுப்பு தொடங்கி விட்டார்கள் இந்த ஆண்டு .. ஆண்டு கட்டணம் 50000 முதல் ஒரு லட்சம் .. இது பள்ளி கட்டணம் தவிர்த்தது .. அந்த பள்ளிகளுக்கு மேலும் பெற்றோரின் ரத்தம் உறிஞ்ச ஒரு தொழில் வாய்ப்பு கொடுத்து இருக்கு நீட் .. அருமை அருமை .. 12 வகுப்பு தேர்வில் மெரிட் மூலம் கலந்தாய்வு நடத்தி நாம் கட்டிய அரசு கல்லூரிகளில் நிம்மதியாக மாணவர்கள் படித்து வந்தார்கள் .. ஏதோ தகுதி இல்ல , நீட் தான் சமூக நீதி , அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு நிறைய என்று கூவி வந்தனர் .. இன்று பல் இளிக்குது சமூக நீதி .. கோச்சிங் போக காசு உள்ளவனுக்கு நீட் மற்றவர்கள் எல்லாம் அமைதியா பள்ளி படிப்போடு அமைதியா இருங்க என்று சொல்வது தான் நீட் .. இது மத்திய அரசு நினைத்து இருக்கும் பொறியியல் , ஆர்ட்ஸ் கல்லூரி இரண்டுக்கும் நீட் வந்தால் கண்டிப்பா நடக்கும் .. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிகமா பள்ளி முடித்து 45 சதவீதம் பேர் உயர் கல்வி போகிறார்கள் .. இதுவும் முடிந்து போகும் .. நன்றி .. என்ன எனக்கு ஒரு சந்தோஷம் , எங்க ஊரில் நீட் கோச்சிங் சென்டர் ஆரம்பிக்க போறேன் .. அதில் நெறைய பீஸ் வாங்கி தொழில் அதிபர் , கல்வி தந்தை எல்லாம் ஆகிடுவேன் .. எப்பிடி புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி இருக்காரு பாருங்க மோடிஜி .. ஜெய் மோடிஜி .. 20 அரசு மருத்துவ கல்லூரி கட்டி, 12 ஆம் வகுப்பு தேர்வு மூலம் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுத்த திராவிட கட்சிகள் ஒழிக ..
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
13-செப்-201712:53:01 IST Report Abuse
Rajendra Bupathi கடந்த ஐந்து வருக்ஷமாவே கேவலமான ஒரு மாதரசி கல்வி இலாக்காவுல கோலோச்சிகிட்டு இருந்தாங்க? ஆனா மந்திரிக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப நெருக்கமா இருந்து எல்லா வேலையையும் செஞ்சி குடுக்குறதிலேயே கவனமா இருந்த்தால< தமிழகத்தின் கல்வி கட்டமைப்பை பத்தி அவுங்களுக்கு ஒண்ணுமே தெரியாம போச்சி? அல்லது தெரியாம கவனமா பாத்துகிட்டாங்க? இதுல எந்த விதத்திலும் ஆசிரியர்களை முழுமையா குறை சொல்ல முடியாது? குறைகள் இருக்கலாம் ? ஆனா கழிப்பறை இல்லாத பள்ளிகளும், அடிப்படை கட்டமைப்பு இல்லாத பள்ளிகளூம் ஏராளம்/ இன்னும் சொல்ல போனா வகுப்பறைகள் இல்லாத பள்ளிக்கூடங்களூம் அதிகம் தான்? ஆசிரியர்களை கண்டிக்க கூட யோக்கியதை இல்லாத அரசு? ஆனா அதை கண்டிக்காமல் நீதிமன்றம் கூட ஆசிரியர்களை தான் கண்டீக்குது ? பாவமாதான் இருக்கு? சரி இதுதான் அப்படின்னா எந்தஒரு துறையாவது சிறப்பா இருக்கா அப்படின்னா குறிப்பிடும் படியா எதுவுமே இல்லை? இதை எல்லாம் யாருகிட்ட , எங்க போயி சொல்றது? சரி அப்படி யாராவது குறையை சொன்னா அதை காதுகுடுத்து கேட்டு நிவர்த்தி செய்யதான் யாருக்காவது யோக்கியதை இருக்கா? இன்னும் சொல்லபோனா ஆத்தா காலத்துல இருந்து இப்படிதான் இருக்கு ?நோக்கம் வேறயா இருக்கும் போது மக்களூக்கு எப்படி நல்லது கிடைக்கும்? பாக்கலாம் இப்பதான் நீதிமன்றங்கள் சிறப்பா மக்களூக்கு பயன் படுற மாதிரி சில உத்திரவுகளை போட்டு இருக்கு? எப்படியோ நல்லது நடந்தா சரிதான்?
Rate this:
Share this comment
Cancel
Ramalingam K - ERODE,இந்தியா
13-செப்-201712:47:59 IST Report Abuse
Ramalingam K இது தவறான தகவல். திருநெல்வேலி மாவட்டம் கல்லனை என்ற ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து 8 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றுள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
13-செப்-201712:28:07 IST Report Abuse
kundalakesi பள்ளி நேரத்தில் தூக்கமும் அரட்டையும் , வெளி நேரத்தில் டியூஷனும் பார்க்கும் திராபை ஆசிரியர்கள் இப்படி என தெரிந்தும், அவுனுக ஜக்கடோம்பான் ஜியோன்னு குதிப்பான் யோக்கியமான வேலை மட்டும் ஒதுக்கீட்டில் மறைந்து போகும். கல்வி கற்பிப்பதை சிரமேற்கொண்ட இனத்தை பார்ப்பான் என துரத்திய பின் இங்கு கல்வி நிலை இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Ganesh Tarun - Delhi,இந்தியா
13-செப்-201712:23:52 IST Report Abuse
Ganesh Tarun நல்ல விஷயம். தகுதியான மாணவர்கள் மட்டும் வைத்திய படிப்புக்கு சேர்ந்தால் போதும். நீட் பரீட்சையின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இனி சர்வம் சுப காலம்.
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
13-செப்-201712:11:28 IST Report Abuse
Mohan Sundarrajarao இந்த மாதிரி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வேண்டுமாம்? வெட்கமாக இல்லை?
Rate this:
Share this comment
Cancel
IloveIndia - Chennai,இந்தியா
13-செப்-201712:07:40 IST Report Abuse
IloveIndia தற்போது தரமான மருத்துவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கேட்பதை விட வருங்காலத்தில் இன்னும் சிறந்த மருத்துவர்கள் இந்த தேர்வினால் உருவாகுவார்களா என்று கேட்டால் மகிழ்ச்சியே. 100 மாணவர்களில் 60 மாணவர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதில் எத்தனை பேர் தரமான மருத்துவர்களாக உருவாகி உள்ளார்கள் என்று தான் பார்க்க வேண்டுமேயொழிய 30 பேர் இருக்கிறார்களே, போதும் என்று நின்று விட கூடாது. இந்தியா போன்ற நாடுகளுக்கு அதிகமான மற்றும் தரமான மருத்துவர்கள் தேவையே. அதற்காக NEET வந்ததினால் ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறி விடும் என்று யாரும் சொல்ல போவதுமில்லை. ஆனால் மருத்துவத்தின் தரம் இன்னும் உயர்ந்தால் சந்தோஷமே.
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
13-செப்-201712:03:57 IST Report Abuse
Prabaharan அரசு பள்ளிகளில் சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள். ரிசல்ட் இவ்வளவு தானா?
Rate this:
Share this comment
Cancel
Raman Gopalakrishnan - chennai,இந்தியா
13-செப்-201711:59:42 IST Report Abuse
Raman Gopalakrishnan ஒரே காரணம் அரசு பள்ளிகளில் தரமான கல்வி சொல்லித்தருவதில்லை.எந்த அரசு அதிகாரியோ அல்லது மந்திரியோ தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்கவைக்கிறார்களா? இவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் அதிலும் மிகவும் தரமான பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள். நாட்டுமக்களுக்கு வழி காட்டியாக இருக்கவேண்டிய இவர்களே இப்படியிருந்தால் , எங்கிருந்து அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயரும்? தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர்ந்தால்தான் ,ஏழை எளியவர்களும் தரமான கல்வியை பெறமுடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை