ஆசிரியர்கள்,ஆசிரியர் சங்கத்தினர் 'சுப்ரீம் பவர்' இல்லை :நீதிபதி கடும் கண்டனம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள்,ஆசிரியர் சங்கத்தினர் 'சுப்ரீம் பவர்' இல்லை :நீதிபதி கடும் கண்டனம்

Added : செப் 13, 2017 | கருத்துகள் (79)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஐகோர்ட், ஜாக்டோ -ஜியோ அமைப்பு, போராட்டம், நீதிபதி கிருபாகரன்

சென்னை : கோர்ட் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோர்ட் உத்தரவை மதிக்காமல் போராடும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செப்.,18 ம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிராக தொடர்ப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், கோர்ட் உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். பிற்காலத்தில் எந்த ஒரு விவகாரத்திலும் கோர்ட்டை நாட முடியாத அளவிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டி இருக்கும். 5 மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்துள்ளது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள கேவலம். ரூ.40,000, ரூ.50,000 சம்பளம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. ஆசிரியர்கள் என்ன தொழிலாளர் வர்க்கத்தினரா?

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. கோர்ட் உத்தரவை மதிக்காமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய அமைப்பினர் ஒன்றும் சுப்ரீம் பவர் இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணராமல் போராட்டம் நடத்தலாமா? போராட்டம் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
14-செப்-201700:37:14 IST Report Abuse
K.Palanivelu குரு ஸ்தானத்தில் இருந்து போதிக்கவேண்டிய ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் சிறுவர்,சிறுமிகளிடம் பாலியல் குற்றங்கள் இழைக்கலாமா?அக்காலத்தில் இதுபோல நினைத்துப்பார்க்கமுடியுமா?மூன்று லக்கத்தில் இவர்களின் மாத ஊதியம் ஐந்து லக்கமாகியும் அதுவும் பற்றாது எனக்கூறி போராட்டம் செய்வது அநியாயமில்லையா?
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
13-செப்-201718:01:52 IST Report Abuse
தமிழர்நீதி மை லார்ட் ஆசிரியர்கள் உழைத்து ஓடாக போனவர்கள் .அவர்கள் இல்லை என்றால் நீங்கள் நீதி கூற முடியாது . உங்களுக்கு அறிவைக் கொடுத்தவர்கள் இன்று அன்னாடம் காச்சிகளாக , வாங்கும் சம்பளத்தை, வேலை வாங்க லஞ்சமாகவும் , இடம்மாறுதலுக்கும் , பயணத்திற்கும் கொடுத்துவிட்டு பரிதாபமாக நிற்கிறார்கள் . டீ கடை முதலாளி , டீ கடை கூலிகள் எல்லாம் அரசியல் உச்சத்தில் நிற்கும்போது இந்த ஆசிரியர்கள் மட்டும் வறுமைக்கு வற்றிப்போகிறார்கள் மை லார்ட் . இவர்கள் ஆத்துமணல், புறம்போக்கு ஆட்டைய போடுகிறவர்கள் அல்ல மை லார்ட் . உழைப்பவர்கள். ஆசிரியர் வேலைக்கு சேர்த்துவிட்டு ,கணக்கெடுப்பு ,வாக்கெடுப்பு , நுழைவு தேர்வு எல்லாத்துக்கும் இவர்கள் தான் கண்காணிப்பு மை லார்ட் . அரசு பள்ளி மாணவர்கள் NEET இல் வீழ்வதற்கு காரணம் அவர்கள் கூழுக்கு வந்து அத்துடன் கல்வியும் சேர்ந்து கற்கிறார்கள் . இவர்கள் கற்குமிடம் கழிவறை தான். மாணவர்கள் மாணவிகள் நாறுவார்கள் . எங்கும் வசதி இல்லாமல் குடிக்க நீர் இல்லாமல் திணறுவார்கள் . இதுல பத்து லெட்ச்சம் பீஸ் கட்டி எப்படி மை லார்ட் NEET தயார் ஆகிடமுடியும். வறுமைக்கு வார்த்தை சொல்லிக்கொடுக்கும் தெய்வங்கள் ஆசிரியர்கள் . தனியார் கல்வி கூடங்கள் கடை விரித்து , சிறுபான்மை பேரில் கல்வி கடை நடத்துறார்கள் . இங்கு உறவுகள் ,ஜாதிகள் கூடி தொலைதூர கல்வியில் வாங்கிய கல்வி தகுதியில் உட்க்கார்ந்து தலைமை ஆசிரியர் என்று தரம் கெடுக்கிறார்கள் . சிறுபான்மை கல்வி கூடங்கள் வாங்கிப்புட்டு அரசு சம்பளத்தில் பணி அமர்த்தும்போது எல்லாம் தொலைதூர கல்வி வாங்கி MA , MEd ஆகிறார்கள் .தமிழ் ஆசிரியராக டமில் பேசுகிறவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் .இவர்கள் கூத்தில் ஒழுங்கா ஒன்றாம் வகுப்பு முதல் MA , M Ed வரை பள்ளிகளில் கல்லூரிகளில் கற்றவர்கள் , தினம் ஆசான் கூறுவதை கேட்டு தெளிந்தவர்கள் மட்டும் எல்லாத்துக்கும் கற்பிக்க வேண்டியுள்ளது . இந்த தொலைதூர கல்வியில் பட்டம் வாங்கி பதவி விலை கொடுத்து வாங்கியவர்கள் குந்தி இருக்க இந்த அறிவுகள் மட்டும் காலை முதல் மாலைவரை சரியாக உழைக்க வேண்டிய வேதனை . அமெரிக்காவில் மை லார்ட் 12 மாணவனுக்கு இரு ஆசிரியை . இங்கு மை லார்ட் 120 மாணவன் உள்ள ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன . சாராய கடைகள் அளவுக்கு பள்ளிகளில் வேலைக்கு இங்கு ஆள் இல்லை மை லார்ட் . ஆசிரியர்கள் அரசியல்வாதி , அதிகாரி ,நிர்வாகம் , மாணவர்கள் , பெத்தவர்கள் , சிலநேரம் மாணவர்கள் தாக்குதலுக்குள் அகப்பட்டு தவிக்கிறார்கள் . இவர்களை நீதியரசர் நீங்களும் தாக்கினால் என்னவாகும் . ஆசிரியர்கள் நிர்வாகத்தால் ,அரசியல்வாதியால் , அதிகாரியால் துரத்தப்படுவதை நிறுத்துங்கள் தடை செய்திடுங்கள் மை லார்ட் . கூலி கொடுக்காமல் கூலி பறித்து அசிங்க சூழல் கொடுத்து கற்பிக்க சொல்கிறீர்கள் மை லார்ட் . ஒரு கொடுமைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் . அவர்களை கொஞ்சம் கண்ணியப்படுத்துங்கள் . பள்ளிக்கூடம் கட்டும் இந்த இன்னும் அதற்கான வசதிகளில் ,பணத்தில் ஆட்டயபோடும் அரசியவாதிகள் கைகள் கட்டப்படாமல் , ஆசிரியர் மீது பாய்கிறீர்கள் மை லார்ட் . பார்த்து , மொத்தமாக நீங்கள் தனியாருக்கு கல்வியை தாரைவார்க்க பாடுபடுவதாக நினைத்திட போகிறார்கள் . ஆசிரியர்கள் கூலிக்காக ,உரிமைக்கு ,அடக்குமுறைக்கு எதிராக போராடுகிறார்கள் . அவர்களை அடக்கும் கல்வி கடைகளை கட்டுப்படுத்துங்கள் ,சுரண்டும் கல்வி அறிவில்லாத அமைச்சர்களை , கடை உரிமையாளர்களை காவு வாங்குங்கள் .ஆசிரியர்கள் பாவம் . விடுதலை கொடுங்கள் . இன்னும் உங்கள் போல பல நீதி அரசர்கள் உருவக்க பசி இல்லாத ஆசிரியர்கள் வேண்டும் . நண்டு கறி உண்பவர்களிடம் ஆப்பிள் பழம் ஒருநாள் கூட காணாதோரிடம், ஆப்பிள் பற்றி கேள்வி கேட்டு NEET என்றால் அது எப்படி மை லார்ட் 6 பேர் தான் மருத்துவர் ஆகிட முடியும் . கேள்வி தவறு மை லார்ட் . ஆசிரியர்கள் தவறு அல்ல .ஆள தெரியாத ஆட தெரியாத .. கூட்டம் ஆசிரியர்களை வைக்குது ... மை லார்ட் ... அழித்துவிடாதீர்கள்... உருவாக்குபவர்கள் ..உருக்குலைந்துவிடாமல் தீர்ப்பு சொல்லுங்கள் ..
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
13-செப்-201717:40:30 IST Report Abuse
vbs manian The unruly teachers well deserve this heavy dose from the judge..These people hold the public to ransom by their periodic agitations,along with other govt. employees..They enjoy subtle backing by the politicians& in fact sometimes behave like party wings..Some of their demands may be genuine but no way for an agitation.They should be severly dealt with.
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
13-செப்-201717:17:48 IST Report Abuse
ராமசாமி அடிமைகள் தேசத்தில் எப்படி போராடலாம்? நீதிமன்றம் முதலில் சம்பந்தபட்ட துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவேண்டும். மீட்டிங் நடந்த குறிப்புகள், மினிட்ஸ் எல்லாம் ஆராய்ந்து, போராட்டத்திற்கு யார் காரணம், இதற்கு முன் போட்ட ஒப்பந்தங்கள் என்ன என்று எல்லாவற்றையும் பார்க்கவேண்டும். பொதுமக்களும், மாணாக்கர்களுக்கு நிச்சயமாக பாதிக்க கூடாது. எல்லாவற்றிலும் நீதிமன்றம் தலையிட்டால், பின் நாட்டை ஆள்பர்கள் எதற்கு? எல்லாம் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று அவர்கள் சும்மா இருந்துவிடுவார்கள். தீர்ப்பு கொடுக்கும் முன் படித்துப் பார்த்து கொடுக்க வேண்டுகிறேன். குறிப்பு: நான் அரசு ஊழியரோ ஆசிரியரோ அல்ல
Rate this:
Share this comment
Cancel
Sivasubramanian - chennai,இந்தியா
13-செப்-201717:12:41 IST Report Abuse
Sivasubramanian தற்பொழுது நாட்டிலே அரசு ஊழியர்கள் என்றாலே ஒரு வெறுப்பு மக்களிடம் உள்ளது. இவர்களால் தான் ஒரு சமூகமே சீரழிகிறது. இவர்களுக்கு பல ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் போதாது. வேணும் வேணும் வேணும் இன்னும் வேணும்.. ஆசை மிக மிக அதிகம். இவர்களின் வீண் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கக் கூடாது. போராட்டத்தை கடுமையாக ஒதுக்கவேண்டும். இல்லையேல் வீட்டிற்கு அனுப்பவேண்டும். படித்த தகுதியான வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கலாம். நன்றியோடு மக்களுக்கு சேவை செய்வார்கள். மிக மிக நல்ல தீர்ப்பு. மக்கள் வரவேற்கவே செய்வார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று இவர்களை டிஸ்மிஸ் செய்தால், திரும்பவும் அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும். நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்குள்ளோர், வாசகர்கள் மிகவும் பாராட்டுவதை அறியலாம்.
Rate this:
Share this comment
Cancel
MANI DELHI - Delhi,இந்தியா
13-செப்-201716:25:54 IST Report Abuse
MANI DELHI ஆசிரியர்கள் என்ன தொழிலாளர் வர்க்கத்தினரா? - இது என்ன கேள்வி, வேலை செய்யவில்லை என்றால் எஸ்மா பாயும் என்பதை உணர்ந்தவர்கள் இல்லையா. அரசு பணிகள் அனைத்துமே சேவை தான். இதனால் தான் இதை Government Service என்று கூறுகிறோம். இவர்களது appointment letter ஐ கொஞ்சம் நல்லா பாருங்கள். எங்காவது இப்படி செய்வதற்கு உரிமை உள்ளதா என்று. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணராமல் போராட்டம் நடத்தலாமா? இவர்களுக்கு வேலை கொடுத்தபோது நீங்கள் சொன்ன பொறுப்பு உள்ளதா என்பதையும் சேர்த்து பாக்காமல் பணியில் அமர்த்தியது தான் வினையாகப் போய் முடிந்துள்ளது. எத்தனை படித்த குறிப்பாக ஆராய்ச்சி செய்யக்கூடிய நல்ல மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் சிறிய சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். அவர்களை பார்க்கும்போது இந்த பொறுப்பற்ற பணியாளர்களுக்கு வேலை கொடுத்த அல்லது தகுதி பரிசீலனை செய்யாமல் சமூக சிந்தனை என்ற போலி அரசியல் மூலம் தேர்ந்தெடுத்த அரசுக்கு என்ன சம்மட்டி அடி கொடுத்தாலும் தகும். எனக்கு தெரிந்த வரை போராட்டங்களின் முழு முதல் ஊற்றுக்கண்ணே தோழர்கள் தான். இவர்களுக்கு இந்தியாவில் இடம் காலியாகிக் கொண்டு இருக்கிறது. இவர்கள் தான் ஒழுங்காக இருப்பவனையும் கெடுத்து கொண்டு இருக்கிறார்கள். வேலை ஆகவில்லையென்றால் ஓடிப்போய்விடுவார்கள். மாட்டிக்கொண்டு முழிப்பவன் கூட சேர்ந்தவன் தான். வசனம் சொல்வார்களே ஒண்ட வந்த பிடாரி ஊர் .................. நீங்களே பார்த்து பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
13-செப்-201716:24:52 IST Report Abuse
நக்கீரன் இன்று ஆசிரியர்கள் தன் கடமையை உணராமல் எவ்வளவு தப்பு செய்கிறார்களோ அதை விட கடுமையான தப்பை ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பீர்களா கனம் நீதிபதி அவர்களே?
Rate this:
Share this comment
Cancel
Sripathi Venkataramana Rao - New Delhi,இந்தியா
13-செப்-201716:22:25 IST Report Abuse
Sripathi Venkataramana Rao இந்த சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பும் மற்றும் மதுரை உயர் நீதி மன்ற தீர்ப்பும் வரவேற்கத்தக்கது. இதை ஒரு வழக்கறிஞர் தொடுத்தது ஏன் என்றால் பொது மக்களுக்கு பாதிப்பு என்று. அதே சமயம் எத்தனை நாட்கள் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அப்போது எத்தனை பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது நீதிபதிகள் ஏன் ஒரு வழக்கறிஞர்கள் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் போராட்டம் நடத்தினாலும் அதை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
13-செப்-201715:53:54 IST Report Abuse
Mahendran TC நீதிபதி கிருபாகரனின் கேள்விக்கணைகள் சரியான சாட்டையடி இந்த வாத்திகளுக்கு . 40 , 55 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு தங்கள் சுயநலத்தை மட்டும் பார்த்துக்கொண்டு , மாணவர் நலனில் அக்கறை கொள்ளாத வாத்திகளை கொஞ்ச நாள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் . தனியார் பள்ளி வாத்திகள் வெறும் 5000 ஆயிரம் , பத்தாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டு காலை 8 மணி முதல் சாயங்காலம் 6மணிவரை மாடு மாதிரி உழைத்து 100 சதம் மாணவர் தேர்ச்சி காட்டுகிறார்கள் , ஆனால் அரசு வாத்திகளோ எல்லா சுகத்தையும் அனுபவித்துவிட்டு 50, 60 சதவீத மாணவர் தேர்ச்சியைத்தான் காட்டுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
13-செப்-201715:48:10 IST Report Abuse
Prabaharan அரசு ஆசிரியர்கள் அதிக சம்பளம் மட்டும் அல்ல டியூஷன், LIC போன்றவற்றின் மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை