தமிழகத்தில் நடப்பது பா.ஜ., ஆட்சி:ஸ்டாலின் பேச்சு| Dinamalar

தமிழகத்தில் நடப்பது பா.ஜ., ஆட்சி:ஸ்டாலின் பேச்சு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
ஸ்டாலின்,Stalin, நீட், Neet, பழனிசாமி, Palanisamy, நிர்மலா சீதாராமன், Nirmala Sitaraman,ஐகோர்ட்,HC, கவர்னர், Governor, அனிதா, Anitha, கருணாநிதி, Karunanidhi, சென்னை,Chennai, தமிழகம்,Tamilnadu, அதிமுக,AIADMK, திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,DMK executive Leader Stalin,, நீட் தேர்வு, neet exam,சுப்ரீம் கோர்ட்,Supreme Court, பா.ஜ., BJP, திமுக, DMK,
Share this video :
தமிழகத்தில் நடப்பது பா.ஜ., ஆட்சி: ஸ்டாலின்
Powered by Sathya

சென்னை: தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. பா.ஜ., ஆட்சி என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.


ஆர்ப்பாட்டம்:

நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. சென்னை, தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:


பதிலளிக்க வேண்டும்:

அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும். அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும். தமிழக அரசின் அலட்சியமும் அனிதா தற்கொலைக்கு முக்கிய காரணம். அடுத்த கட்ட போராட்டம் அரசை அச்சுறுத்தும் போராட்டமாக இருக்கும். அனிதா தற்கொலைக்கு பிறகாவது முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும். சட்டசபையில் நீட் குறித்து கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்கள் என்ன ஆனது. நீட் தேர்வு விலக்கு என்ற உறுதிமொழி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க வேண்டும்.


தடை:

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதனை முதலில் எதிர்த்தவர் கருணாநிதி. கருணாநிதி தொடுத்த வழக்கில் நீட் தேர்வுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. ஆனால், பா.ஜ., ஆட்சி நீட் தேர்வை கொண்டு வந்தது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.3 லட்சம் கேட்டால் ஏழை மாணவர்கள் எப்படி செலுத்த முடியும். இன்றைய போராட்டம் அரசியலுக்கானது அல்ல. மாணவர்களுக்கான போராட்டம். தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல. பா.ஜ., ஆட்சி தான்


வழக்கு ஏன்?

சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டதால், அதனை மீண்டும் கூட்ட கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும். சட்டசபை கூட்ட உத்தரவிட வேண்டும் என கவர்னரிடம் மனு அளித்தோம். நடவடிக்கை எடுக்க கெடு விதிக்கப்பட்டது. ஆனால், அவர் மும்பை சென்று விட்டார். இந்த அலட்சியம் காரணமாகத்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சாதகமாக வந்தாலும், எதிராக வந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (97)
 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Jeeva - virudhunagar,இந்தியா
13-செப்-201718:07:51 IST Report Abuse
Jeeva மக்களின் பிரச்னையை தீர்க்க முயற்சி எடுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
13-செப்-201717:20:11 IST Report Abuse
ganapati sb அய்யாக்கண்ணு மாதிரி தொடர் அம்மண போராட்டம் ஆரம்பிச்சிடுவாங்களோ ?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-செப்-201717:08:09 IST Report Abuse
மலரின் மகள் ஆட்சி என்ன சிறப்பாகவா இருக்கிறது? அப்படி ஒன்றுமில்லையே. எதை வைத்து அப்படி கூறுகிறார்?
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-செப்-201716:31:24 IST Report Abuse
Cheran Perumal ஸ்டாலின் பேசுவதிலிருந்து ஈபீஎஸ் ராஜினாமாவை கோரித்தான் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்று விளங்கிக் கொள்ள வேண்டுமா? உச்ச நீதிமன்றம் நீட்டை தடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. மாநில, மத்திய அரசுகள் செய்த தவறு நீட்டுக்கு தடை வரும் என்று பேசியது தான். இவர்களது பதவி ஆசைக்காக ஒரு பெண்ணை தற்கொலை வரையில் கொண்டு சென்ற எதிர்க்கட்சிகள் இன்று பேசுவது சந்தர்ப்பவாதம். மனிதாபிமானம் சிறிதுகூட இல்லாத ஜென்மங்கள். நாளை நீட்டை தடை செய்தால் அதில் அதிக மார்க் வாங்கிய மாணவன் தற்கொலை செய்து கொள்ள மாட்டானா? அப்படி செய்தால் அதற்கு தடைகோரும் கட்சிகள் பொறுப்பு ஏற்பார்களா?
Rate this:
Share this comment
Cancel
baski - Chennai,இந்தியா
13-செப்-201716:27:58 IST Report Abuse
baski ரொம்ப லேட்டு....
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-செப்-201716:16:20 IST Report Abuse
Endrum Indian அரசு ஐ.சி.யு.வில் இருக்கின்றது எந்த வாய் சொன்னது? இப்போ என்ன பா.ஜ.அரசு என்பது???
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201716:06:01 IST Report Abuse
ஆழ்வார்க்கடியான் நம்பி பிஜேபி ஆட்சி என்றால், அது நாராயணனின் ஆசீர்வாதத்துடன் இருக்கட்டும். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நல்ல விஷயங்கள், நல்லது.
Rate this:
Share this comment
Cancel
sankarn48@gmail.com - chennai,இந்தியா
13-செப்-201716:00:50 IST Report Abuse
sankarn48@gmail.com என்னது? சிவாஜி செத்துட்டாரா.........
Rate this:
Share this comment
Cancel
shekaran - thiruchi,இந்தியா
13-செப்-201715:56:13 IST Report Abuse
shekaran அப்படியா சொல்லவே இல்ல
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
13-செப்-201715:47:08 IST Report Abuse
Sundaram திமுகவும் ஒரு கட்சியல்ல ஊழலின் மறு உருவம் ..உங்கள் கறையை கழுவி விட்டு அடுத்தவர்களை கூறுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.