சசிக்காக சிறை விதிகள் மீண்டும் வளைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிக்காக சிறை விதிகள் மீண்டும் வளைப்பு

Added : செப் 13, 2017 | கருத்துகள் (31)
Advertisement
பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா, சிறை, தண்டனை கைதி, சசிகலா, விதிகள், வளைப்பு, விதிமீறல்,

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக, சிறை விதிகள் மீண்டும் மீறப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.தகவல் பெறும் உரிமை சட்டம்


சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டன என சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா தெரிவித்தார். இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதன் பிறகும் சசிகலாவுக்கு சிறையில் தனி சலுகைகள் காட்டப்படுகின்றன என்றே கூறப்படுகிறது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பெறப்பட்ட தகவல்கள் வருமாறு:

சிறையில் உள்ள தண்டனை கைதியை, ஒரு நாளில் நான்கு அல்லது ஆறு பார்வையாளர்கள் சந்திக்கலாம். அவர்கள் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்பது சிறை விதிகளில் ஒன்று. ஆனால், ஜூலை, 11ம் தேதி சசிகலாவை, ஏழு பேர் சந்தித்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் மட்டுமே உறவினர்கள். ஷகிலா, விவேக், கீர்த்தனா, ஜெயா, வெற்றிவேல், தாமரைசெல்வன் மற்றும் நாகராஜன் ஆகியோர் சசிகலாவை சந்தித்துள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் உறவினர்கள் அல்ல. அதற்கு முன், ஜூலை, 5ம் தேதி, சசிகலாவை ஆறு பேர் சந்தித்துள்ளனர். வெங்கடேஷ், தினகரன், பழனிவேல், ராமலிங்கம், உசேன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் அவரை சந்தித்துள்ளனர். சிறை விதிகளின்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்டனை கைதியை சந்திக்க முடியும். ஆனால், சசிகலாவை, ஒரு வார இடைவெளியில் இவர்கள் சந்தித்துள்ளனர்.விதியை மீறிய புகழேந்தி


அ.தி.மு.க.,வின் கர்நாடக மாநில செயலாளரும், தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி ஆக., 2ம் தேதி மாலை, 4.30 மணி முதல், 5.15 மணி வரை சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். சிறையில் உள்ள கைதியை, மாலை, 5 மணி வரை தான் சந்திக்க முடியும். ஆனால், புகழேந்தி கூடுதலாக, 15 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார்.
எல்லாமே இலவசம்


சிறை விதிகளின்படி, ஒரு கைதிக்கு உணவு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். டூத் பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை சிறைக்குள் வாங்கி கொள்ள வேண்டும். ஆனால், இதுநாள் வரை சசிகலா எந்த பொருளையும் பணம் கொடுத்து வாங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம், அவருக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyan - CHENNAI,இந்தியா
13-செப்-201719:33:34 IST Report Abuse
kalyan ஒரு நாளைக்கி ஒரு கோடி.. சும்மாவா வரும்?
Rate this:
Share this comment
Cancel
Jeeva - virudhunagar,இந்தியா
13-செப்-201718:08:19 IST Report Abuse
Jeeva தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர் . சசிகலா குடும்பம் வெளியேற்றியதற்கு மிக்க மகிழ்ச்சி .
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-செப்-201717:56:49 IST Report Abuse
மலரின் மகள் //// இதுநாள் வரை சசிகலா எந்த பொருளையும் பணம் கொடுத்து வாங்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது/// அதுதான் வெளிவந்த வீடியோவில் கைநிறைய பையை வைத்து ஷாப்பிங் செய்து விட்டு தானே வந்திருக்கிறார். அது போதாதா? வெளியே வாங்கினால் அதுவே போதும். உள்ளேயும் வேறு வாங்க வேண்டுமா? இது என்ன தலை எழுத்தா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை