ஓட்டல் சேவை கட்டணத்திற்கு கிடுக்கிப்பிடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஓட்டல் சேவை கட்டணத்திற்கு கிடுக்கிப்பிடி

Added : செப் 13, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஓட்டல், உணவகம், சேவை வரி, டிப்ஸ், சேவை கட்டணம், மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம், மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரி கணக்கு

புதுடில்லி: ஓட்டல் மற்றும் உணவகங்களில், வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படுவது நின்றபடில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஓட்டலின் வருமான வரி கணக்கு ஆய்வின் போது, சேவை கட்டணத்தை வருமானமாக கருதும்படி, மத்திய நேரடி வரி வாரியத்திற்கு மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கி உள்ளது.ஓட்டல் சேவை கட்டணத்திற்கு கிடுக்கிப்பிடி

சேவை வரி, டிப்ஸ், சேவை கட்டணம்


ஓட்டல், உணவகங்களில், ஏற்கனவே சேவை வரி, டிப்ஸ் உள்ளிட்டவை உண்டு. இதுதவிர, 'சர்வீஸ் சார்ஜ்' என்ற சேவை கட்டணத்தையும் கட்டாயமாக வசூலித்து வருகின்றனர். இதை கட்டாயமாக வசூலிக்க கூடாது, வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் விட வேண்டும் என மத்திய நுகர்வோர் விவகார துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் கூறி இருந்தது. இருப்பினும் சில ஓட்டல் மற்றும் உணவகங்களில், சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது தொடரத் தான் செய்கிறது.
அமைச்சகம் ஆலோசனை

இந்த சூழ்நிலையில், ஓட்டல்கள் வசூலிக்கும் சேவை கட்டணத்தை, வருமான வரி கணக்கு ஆய்வின் போது சம்பந்தப்பட்ட ஓட்டலின் வருமானமாக கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என மத்திய நேரடி வரி வாரியத்திற்கு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் இதை துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உறுதிப்படுத்தி உள்ளார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
13-செப்-201721:36:23 IST Report Abuse
Shekar Raghavan 360X50000X5 அதாவது ரூபாய் 50000 வியாபாரம் ஆகும் ஒரு ஹோட்டலில் ரூபாய் 9 லக்ஷம் கொள்ளை
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
13-செப்-201720:33:13 IST Report Abuse
Barathan gst என்ற ஒன்றை வைத்து பெரும்பாலான வியாபாரிகள் அதிகமாக ஹோட்டலகாரர்கள் பொது மக்களை கொள்ளை அடிக்கிறார்கள். There is no mechanism to monitor the actual price increase from pre GST to post GST introduction. If the price spiral continues with no control by the Central Government, there is likely chance of BJP losing the 2019 Parliament election.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-செப்-201718:04:20 IST Report Abuse
மலரின் மகள் ஆம் இப்படித்தான் நட்சத்திர ஓட்டல்களில் கூட நடக்கிறது. சாதாரண ஓட்டல்களில் ஏ சி வசதி செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் அதை கூடுதலாக வசூலித்து விடுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் ரூம் சார்ஜ் என்று ரூமிற்கு ஆர்டர் செய்தால் வசூலிக்கிறார்கள். டிப்ஸை தனியாக கணக்கில் வைக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
13-செப்-201716:46:54 IST Report Abuse
g.s,rajan Suppose if the food supplied by the Hotel is not good,then they should pay the money to the Customer. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Cancel
Barathan - Melbourne ,ஆஸ்திரேலியா
13-செப்-201716:12:20 IST Report Abuse
Barathan பாண்டிச்சேரியிலுள்ள ஹோட்டல்கள் எல்லாம் முன்பிருந்த (pre GST) VAT வரி 12% + price increse 5 to 10% +GST 18% ஆக total
Rate this:
Share this comment
Cancel
Dol Tappi Maa - NRI,இந்தியா
13-செப்-201715:40:49 IST Report Abuse
Dol Tappi Maa அதிரடி அசத்தல் கிடுக்கிப்பிடி என்று செய்தி வந்தால் அது சும்மா விளம்பர நடவடிக்கை என்று அர்த்தம்
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
13-செப்-201715:11:46 IST Report Abuse
Jaya Prakash இது என்ன லூசுத்தனமாக இருக்கு... மந்திரியும் அப்போ அப்போ டாஸ்மாக்கு வருவாரோ.... அவன் கம்ப்யூட்டர் பில் போடுறான்... அதில் அவன் எல்லாம் சேர்த்து ஒரு சாப்ட்வேர் செய்ஞ்சுவிட்டான்..... இப்போ ஒவ்வரு தடவை சாப்பிட்டு முடித்தவுடன்... சர்வீஸ் சார்ஜ்' போடாதே என்று நான் சொல்ல வேண்டுமா.... ' ஓட்டல், உணவகங்களில், ஏற்கனவே சேவை வரி, டிப்ஸ் உள்ளிட்டவை உண்டு '... அப்போ என்னத்துக்கு நான் சர்வீஸ் சார்ஜ் கொடுக்க வேண்டும்.... சர்வீஸ் சார்ஜ் போடா கூடாது என்று அரசாங்கம் சொல்ல வேண்டும்.... இது ஏமாற்றுவேலை..... முந்திரியும் மக்களை ஏமாத்திறார்....
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
13-செப்-201715:11:29 IST Report Abuse
g.s,rajan Tax payers are always less benefited,then why one should pay their taxes from hard earned Money,???. g.s.rajan,chennai
Rate this:
Share this comment
Cancel
Kaliyan Pillai - Chennai,இந்தியா
13-செப்-201714:44:18 IST Report Abuse
Kaliyan Pillai எல்லாவற்றையும் சேர்த்துதான் பொருளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது சர்விஸ் சார்ஜ் தனி என்றால் அப்புறம் நாடார் கடையில் பொட்டலம் கட்டுவதற்கும் சேவைக் கட்டணம் வாங்கலாமே போங்கடா நாறபசங்களா
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
13-செப்-201714:18:13 IST Report Abuse
Appu இதே பொழப்பா திரிங்கடா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை