தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு போலீசார் நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு போலீசார் நோட்டீஸ்

Updated : செப் 13, 2017 | Added : செப் 13, 2017 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தினகரன், எம்எல்ஏ, ரிசார்ட், போலீஸ், நோட்டீஸ்

பெங்களூரூ: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள தனியார் ரிசார்ட் உரிமையாளருக்கு கர்நாடக போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


விசாரணை:

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள, 'பேடிங்க்டன்' ரிசார்ட்டில் கடந்த 6 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (செப்.,12) தமிழக போலீசார் அங்கு சென்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் குறித்து விசாரணை நடத்தினர்.

தமிழக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு நோட்டீஸ்


நோட்டீஸ்:

இந்நிலையில், ரிசார்ட் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட சந்திக்குப்பா போலீஸ் எஸ்.ஐ., ஜெயராமன், ரிசார்ட் உரிமையாளர் பிரவீனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்திலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ளது குறித்து ஏன் எங்களுக்கு தகவல் அளிக்கவில்லை. நேற்று தமிழக போலீசார் ஆய்வு செய்த பின்னர் தான் எங்களுக்கு தெரியவந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னையை பாதுகாக்க, ரிசார்ட்டில் எத்தனை எம்எல்ஏக்கள் தங்கியுள்ளனர். அவர்கள் முகவரி, எங்கு செல்கின்றனர். எப்போது வருகின்றனர் என்பது பற்றி விளக்கமளிக்க வேண்டும். அவர்களை சந்திக்க வருபவர்கள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நோட்டீசுக்கு உடனே பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோகன் வைத்தியநாதன் - சுலவ்,யுனைடெட் கிங்டம்
13-செப்-201721:34:43 IST Report Abuse
மோகன் வைத்தியநாதன் இவர்கள் வெளிய வந்து, தினகரன் எங்களை கட்டாயப்படுத்தி, மிரட்டி அடைத்து வைத்தார் அப்படின்னு சொல்லப்போறாங்க... உடனே EPS OPS கூட்டணி இவர்களை வாரி அனைத்து சேர்த்துக்கொள்வார்... இதுதான் நடக்க போகிறது.
Rate this:
Share this comment
Cancel
13-செப்-201720:59:00 IST Report Abuse
அப்பாவி பேசாம அந்த எம்.எல்.ஏக்களை அமெரிக்கா, ஆப்ரிக்கான்னு அனுப்பிச்சுட்டு அக்கடான்னு இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
13-செப்-201718:23:17 IST Report Abuse
kuthubdeen இப்பவே பல எம் எல் எங்களுக்கு பேதி ஆயி இருக்கும் ..இனியும் தினகரனை நம்பினால் ஏதும் ஆக போவது இல்லை .என்ன நடக்க போவது என்பது சில நாட்களில் புரிந்து விடும் .
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
13-செப்-201716:44:45 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கர்நாடக காவல்துறை காவலர்களே தமிழ் நாட்டை சேர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்தன கட்டை திருடவரல, காவிரிநீரை திறக்கவும் வரல ஒளிந்திருக்கவும் வரல >>>>. தமிழ்நாடுக்கு கவர்நர் இன்மையாலும் ...>> ஆளுங்கட்சி பலப்பரீட்சை காட்ட பொறுப்பு ஆளுநர் ஒத்துழைப்பதாலும் எங்களுக்கு ஆபத்து ஆளுங்கட்சி தரப்பில் ஏற்படும் என்பதால் தான் தங்கள் மாநிலத்தில் தங்கி இருந்து சட்டசபை கூட்டம் கூட்டும்போது உடனே சென்று கலந்து கொள்வோம். எங்களால் உங்களுக்கு எந்தவித அச்சமும் பயமும் வேண்டாம் ,எங்களை தேடி தமிழ்நாடு போலீசார்களை ஏவி விட்டு வருதுன்னா பாருங்களேன். ஆட்சி அதிகார பலம் எப்படி செயல்படுகிறது....>>> என்பதை கனம் பொறுப்பு கவர்னர் உன்னிப்பாக பார்த்து கொண்டுதான் உள்ளார் அதாவது பன்னீர் பக்கம் மூன்று எம்எல்ஏ சென்றஉடனே ஆளுநர் மெஸாரிட்டியை காண்பிக்க ஆணை இடுவார் அதுவரை இப்படி தினகரன் நீதிக்காக பாடாய்படவேண்டியுள்ளது. என்று பதில்கூறுவார்களோ???
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
13-செப்-201715:31:32 IST Report Abuse
Amirthalingam Sinniah மொத்தத்தில் தினகரன் கர்நாடக காவல்துறையினரையும் குளிரப்பண்ணுகிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் கொண்டுசென்றால், காவல்துறையினர் குளிர்மையாக இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
13-செப்-201715:10:12 IST Report Abuse
ramanathan தினகரனுக்கு கட்சியில் மக்களிடத்தில் செல்வாக்கு இல்லை பொதுகுழுவில் செல்வாக்கு இல்லை ஆனால் பணத்தை வைத்து முதல்வர் கனவு காண்கிறார் நேரடி வரிகள் வாரியம் அ‌திகா‌ரிக‌ளை இவரின் குடும்பம் சொத்துக்கள் சேர்ந்த பிண்ணனியை அரசு விரைவில் விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
13-செப்-201715:02:01 IST Report Abuse
Jaya Prakash ' தமிழகத்திலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ளது குறித்து ஏன் எங்களுக்கு தகவல் அளிக்கவில்லை. நேற்று தமிழக போலீசார் ஆய்வு செய்த பின்னர் தான் எங்களுக்கு தெரியவந்தது '.... டேய் டேய் ... என்னடா நடக்குது ....அத்தனை வெளி மாநில MLA க்கள் அங்கு தங்கி இருக்காங்கோ... ஒரு வாரமாய் இவங்களுக்கு தெரியாதாம்... காதில் பூ வைக்கலாம்.... ஆனால் இவர்கள் தாமரையே சொருகிறார்களே.... சாமி.... சட்டம் எங்களுக்கும் தெரியும்.... கர்நாடக போலீஸ் அனுமதி இல்லாமல் அங்கே தமிழ்நாடு போலீஸ் விசாரணை நடத்தமுடியாது....
Rate this:
Share this comment
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-செப்-201717:36:23 IST Report Abuse
மலரின் மகள்குற்ற பின்னணியில் உள்ள ஒருவரை, பிடித்து வர சென்றிருக்கிறார்கள். விசாரணை அதிகாரிக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளது. யாருடைய கர்நாடக காவல்துறை அனுமதி தேவை இல்லை. ஒத்துழைப்பு தரவேண்டியது தான் அவர்களின் கடமை. சிலவற்றை துல்லியமாக திட்டமிட்டு தான் செய்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
13-செப்-201714:26:11 IST Report Abuse
Indhuindian தமிழ் நாடு சபாநாயகர் ஒரு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
sakthi - KANCHEEPURAM,இந்தியா
13-செப்-201713:50:20 IST Report Abuse
sakthi Ayyayyayyoo ivlo naval ungalukku theriyaadhaa
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
13-செப்-201713:41:19 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam There was news that they had moved to another resort.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை